Posts

Showing posts from October, 2011

பெயருக்கு முன்னால்

Image
             பிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு.      அதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும்.  எங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்! பள்ளியில் சுந்தர்…!       வீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா..! அடுத்தவீடுதான் .என்று சொல்லி, வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.            அனேகமாக எங்கள் தெருவில் எல்லோருக்கும் அந்த

யுடான்ஸ் வணக்கம்!

Image
திரட்டியாக ஆரம்பிக்கும்போது , நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற அளவில்தான் தெரியும். அப்புறம் அது பதிவர்களிடையே பரவ ஆரம்பித்தது. அப்புறம் குறும்படங்கள் காட்ட டிவியும் இணைத்தார்கள். பின்னர் நேரடியாக ஒரு விழாவை ஒலிபரப்பினார்கள். திடீரென்று பரிசலும்,ஆதியும் நடத்தும் சவால் சிறுகதைப்போட்டியை வழங்கினார்கள். அலெக்ஸாவில் ரேட்டிங் அள்ளினார்கள். வார நட்சத்திரம் தேர்ந்தெடுத்து, முகப்பில் வைத்தார்கள். குடான்ஸாக ஆரம்பித்தவர்கள் யுடான்ஸாக , நீங்களும் ஆடுங்களென்று பிரமிக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கேபிள் அண்ணன் கூப்பிட்டு நீங்க அடுத்த வாரம் என்றார். நான் அதற்கடுத்த வாரம் என்றேன்.சரி என்றார். நானும் விட்டுவிட்டேன். சொன்னபடி சரியாகக் கூப்பிட்டார். நான் ஜகா வாங்க முயற்சித்தேன். நடக்கவில்லை.  இதோ.. வந்து நிற்கிறேன். அதுவும் வாரம் ஒரு பதிவாவது எழுதாமல், மாதத்துக்கே இரண்டு, மூன்று என்று சுருங்கிப்போன சுண்டெலிப் பதிவனான என்னைத் தூக்கி நிறுத்தினால், இந்த வாரம் கட்டாயம் 7வது தேறிவிடும் போலிருக்கிறது. ஜெய் ஜோசப் சங்கர ஜேகே !   திரட்டியின் முகப்பில், நான் இருப்ப

ஏழாம் அறிவு

Image
           பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பாக வெளிவந்திருக்கிறது. 1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன் சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும் குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.                   கதை நிகழ்காலத்துக்கு வருகிறது.        அர்விந்த் என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா! அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா (ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி,  அவளைச்சுற்ற ஆரம்பித்து, சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.       சீனா, இந்தியாவில் ஆபரேஷன் ர

கண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)

Image
வாகனங்கள் எரிபொருளைத் தின்றுவிட்டு, எரிச்சல் தாங்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வப்போது சிகப்பு, மஞ்சள், பச்சை என்று விளக்குகளைப்போட்டு ஓட்டத்தைத் சீராக்கிக்கொண்டிருந்தன மஞ்சள் மரங்களாய் நின்றுகொண்டிருந்த சிக்னல் கம்பங்கள். சென்னையில், தனது அலுவலகத்தின் 3வது மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், ‘அட ! எப்படியெல்லாம் நமக்கு சிந்தனை வருது?’ என்று நினைத்துக்கொண்டே திருப்பூரிலிருக்கும் தன் நண்பன் கண்ணனுக்கு போனை ஒற்றினான். ‘டேய்! ஆபீஸ் வந்துட்டியா?’ ’வந்துட்டேன்! சொல்லு?’ ’இந்த வருஷமும் ஒரு சிறுகதைப்போட்டி வச்சு,நம் மக்கள் சிந்தனையைத் தட்டிவிடுவோமா?’ ’நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் கண்ணா! ஓ. எஸ்.! செஞ்சுரலாம்.’ சென்னைக் கண்ணனும், திருப்பூர் கண்ணனும் நண்பர்கள். தங்கள் வாழ்வியல் சூழல் தடுத்ததால், கற்பனைக் குதிரைகளை லாயத்தில் கட்டி வைத்திருந்தவர்கள். இணைய தளத்தில் வலைப்பூ என்று ஒன்று உருவானபோது, அதைப்பயன்படுத்தி குதிரையை ஓடவிட, அற்புதமான பதிவுலக எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள். கதைகள், அனுபவங்கள், சினிமா விமர்சனங்கள் என கலந்து கட்டி அடிப்பார்கள். இருவர