நிட்டாலே புத்தி சொன்னார்..
எழுதி வைத்திருக்கும் கதையையோ, சில நிகழ்வுகளையோ, படித்த புத்தகத்தையோ பதிவாக்கலாம் என்றுதான் நானும் நினைப்பேன். ஆனால், அவற்றை முந்திக்கொண்டு இந்த விஷயங்கள் முன்னிலை பெறுகின்றன. ஏன் இதையே எழுத நினைக்கிறாய்? என்றபோது மனசாட்சி ஒரு நியாய தர்க்கத்தை எடுத்துவைத்தது. மற்றவை எல்லாம் ஒரு பகிர்தல்தான். ஆனால் இதை எழுதினால் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். ஆகவே இதையே எழுது…! உன்னையும்(!) நம்பி படிக்க வருபவர்களுக்கு ஒரு நியாயம் செய் என்றது. அது எனக்கும் சரியாகப் பட்டது. ஆகவே… கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன். கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார். Dear All, I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a