ஓமப்பொடி # 7
கேட்டால் கிடைக்கும் என்று பல நண்பர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் P.B. பாலாஜியின் வீட்டு வாசலில் தேங்கிக் கிடந்த குப்பையை எடுக்க, மேயருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றார். செய்துகொடுத்தேன். அவரே அனுப்பி, உடனே காரியமும் நடந்திருக்கிறது. மேலும் அதிகாரிகளும் வீட்டுக்கே வந்து பதில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதில் நண்பர் கேபிள் சங்கரும் அவருக்கு ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். கேட்டால் கிடைக்கும் என்று பிரபலங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல ஆரம்பமாக இருக்கட்டும். ----------------------------------------------------------------------------------------------------------------------------- நிகழ்வுகள் நம்மை செதுக்குகின்றன என நம்புகிறேன். சமீபத்திய வெவ்வேறு நிகழ்வுகள், என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. துக்கப்படுத்தியிருக்கிறது. ஆற்றுப்படுத்தியிருக்கிறது. அவமானப்பட வைத்திருக்கிறது. ஆவேசப்படவைத்திருக்கிறது. ஆனால், அவை மொத்தமும் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை! (மொத்தத்தில் நிறைய ‘படுத்தியிருக்கிறது! J ) ஆனால், மகிழ்ச்சிப்படுத