Posts

Showing posts from 2007

இதையும் விமர்சனம் பண்ணினா என்ன ?

சினிமாவைத்தான் விமர்சிக்க ம்னு இல்ல ! மெகா சீரியலும் நம்ப வீட்டுக்குள்ளயே வந்து டிக்கட் வாங்கிக்காமலே டார்ச்சர் பண்ணுதுல்ல.! அதயும் விமர்சனம் பண்ணினா என்னன்னு..... இறங்கிட்டேன். சினிமாவில்.. சில சீன்கள் நடந்திட்டிருக்கும்போது எழுந்து போய் வந்தால் கதைத்திருப்பத்தை கவனிக்கமுடியாம போயிடும். ஆனா நெடுந்தொடர்களுக்கு அதிலிருந்தும் விலக்கு இருக்கு.! பலமாசம் பாக்காம இருந்தாலும் பளிச்சுன்னு விட்ட இடத்திலிருந்து கதை புரியும். சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம். கோலங்கள் னு ஒரு தொடர் வருது.! முதல்ல வேகமா நடந்தும் ஓடியும்..தேவயானி ஒரு பாட்டு பாடுவாங்க ! (அது விளம்பரதாரர்கள் நிலையப்பொறுத்து சுருக்கமாவும், சில நாள் முழுசாவும் இருக்கும்) அப்புறம் கதை ...எதை? அபின்னு ஒரு பொண்ணு (எப்பவுமே ஒரு பையோடயே அலையும்) வேலைக்கு போகுது..அதுக்கு ஒரு கல்யாணம் ஆகி புருசன் குடும்பத்தோட அநியாயத்தை பொறுத்துக்குது..! அவனும் டைவர்ஸ் பண்ணிடுறான்..! அப்புறம் வேலைபாக்குற இடத்தில் முதலாளி நிறுவனத்தை விற்றுவிட புது முதலாளியோட அராஜகம் பொறுக்காம பொங்கி எழுந்து..அழுதுக்கிட்டே வெளில வந்து, புதுசா கம்பெனி ஆரம்பிச்சு புதுமுதலாளி ஆதி

அந்தக் கோரம் நடந்த நாள்..!

டிசம்பர் 26... கிருஸ்துமஸ் முடித்த மகிழ்வோடு சந்தோஷமாக இருந்த பல குடும்பங்களில், இயற்கை தன் இன்னொரு முகத்தை அதிகக் கோரமாக காட்டிய நாள்.! அன்று கேட்ட அவலக்குரல்கள்..! வேளாங்கண்ணி கடற்கரையில் நாங்கள் அள்ளிப்போட்ட மனித உடல்கள் ! இன்றும் கனவில் வந்து காப்பாற்றச் சொல்லும் உயிர்கள் ! உடைகள், உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதியாய் நின்ற குடும்பங்கள் ! அய்யா ! பழைய துணி தருவதை நிறுத்திவிட்டு வாழ்வதற்கு வழி காட்டுங்கள் ! நாங்கள் இதே பூமியில் கோடிகளோடு வாழ்ந்தவர்கள் என்று எழும்பிய தன்மானக்குரல்கள்.! நானும் குழிக்குள் விழுந்துவிடுகிறேன்.. என்னையும் புதையுங்கள் என்று குதித்த பெண்ணின் மரண வேட்கை! நடந்த கொடுமை அறியாமல் உணவு வாங்க வரிசையாய் நின்றபோது அடுத்த பெண்ணின் சடை இழுத்து விளையாடியஅந்த மூன்று வயது சிறுவன்! தன் குழந்தை இழந்துவிட்டு பிழைத்த சிறு குழந்தைகளில் 3 பேருக்கு பால் கொடுத்த அந்த தாய் தேவதை ! பல கிராமங்களை ஒன்றுமில்லாமல் சுருட்டிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் அமைதியாய் காட்சிதந்த சமுத்திரத்தின் வில்லத்தனம் ! மறக்கமுடியா நினைவுகள்...! வேடிக்கை பார்க்கவும், உதவிகள் செய்

ஒரு நல்ல காரியம்...

நேத்து (23.12.07) ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல காரியம் பண்ணினேங்க.! ஈஷா பசுமைக்கரங்கள் சார்பா 2.5 கோடி மரங்கள் நடும் விழா கொண்டாடினாங்க.!                        நமக்கும் அதுல ஈடுபாடு இருக்குறதால.. அந்த விழாவில் பங்கெடுத்துக்குற வாய்ப்பு கிடைச்சதுங்க..! (நன்றியுரையெல்லாம் சொன்னோமுல்ல..)நேரா காலைல கிளம்பி அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் சுமார் 2000 மரக்கன்றுகள் நட்டோம். அதில் நான் குறைந்த பட்சம் 10% நட்டிருப்பேன். 200 மரக்கன்றுகளை ஒரு நாளில் நட்டபோது கிடைத்த திருப்தி இருக்கிறதே..! அடடா...! அதுக்கு ஈடு இணை இல்லங்க!      மாலையில் ஒரு விழாவுடன் இனிதே நாளை முடித்தோம். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு. S. ரகுபதி அவர்கள் வந்து நிறைய புள்ளிவிவரங்களுடன் பேசினார்கள். தமிழகத்தின் நீராதாரம் இனி பிற மாநிலங்களல்ல.. மரங்கள்தான் என்றார். மிகவும் மகிழ்வுடன்...இந்த மண்ணுக்கு ஏதோ செய்த திருப்தியுடன் தூங்கினேன். (ஆனா இதுவும் நம்மை வறட்சியிலிருந்து காப்பாற்றும் ஒரு சுயநல முயற்சிதான்..!) நமக்கு வாழ இடம் தந்து இயற்கை வளமனைத்தும் தந்து உணவுப்பொருள் ஒன்றுவிடாமல் தந்த புவியன்னைக

இதுவும் ஒரு சாமி...!

அய்யா.. ஏம்பேரு கந்தக சாமி! பொறந்த எடம் பூமிதாஞ் சாமி! நான் வானத்தில் இல்லாத சாமி ஆனா வாணம் செய்யுற சாமி! நாம்பாட்டுக்கும் செவனேன்னு நல்லகாலம் பொறக்குமுன்னு மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா மக்கிக்கெடந்தேன் சாமி! என்னயத்தேடிவந்து எக்குத்தப்பா நோண்டித்தந்து எதுக்காவது பயன்படுவேன்னு எப்படியோ கண்டுக்கிட்டாங்க.! மொதல்ல நாம்பாட்டுக்கும் மொறயாத்தான் இருந்தேன். பொறவியிலேயே நமக்கு கோபம் கொஞ்சம் அதிகம் சாமி! அதப்போய் மறந்துப்புட்டு அடக்கிவச்சு அடக்கிவச்சு அழுத்தமா மூடிவச்சு ஒருநாள் வெடிக்கவச்சு ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க! நானும் சும்மா இல்ல.. நாலஞ்சு பயலுகளை நயமா நரகத்துக்கனுப்பிட்டு.. அதெப்புடி நரகம் னு அசதியா கேக்குறீகளா? என்னய தூக்கிப்போட்டு எகனை மொகனையா வெளயாண்டவன் எப்புடி சாமி சொர்க்கம் போவான்? நல்லதே நடக்காதான்னு கலங்கிப்போய் கெடந்தப்பதான் பளபளப்பா எரிய வச்சு பட்டாசா மாத்தி என்னை பார்புகழ வச்சாங்க.! சிவகாசிப்பக்கம் அந்த சின்னப்புள்ளைங்க என்னைத்தொட்டு வேலைபாத்து அவுக தாத்தா பட்ட கடன தடுமாறி அடச்சாங்க! அதுல ஒரு கொடுமை சாமி! ஏங்கொணம் எனக்கே பிடிக்காது. மனுசப்பய மாதிரியே எங்க இருக்கோம்னு தெரியாம

நேர்மைன்னா என்னங்க?

நேர்மை என்றால் என்ன? -அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். ஏன் ஒவ்வாது..? -ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள் இருக்கும். கொஞ்சம் அடிப்படையாக சிந்திப்போம். ஒருவர் நேர்மையானவராக இச்சூழலில் இருந்தால், அவரை 'புதிய ஜந்து' மாதிரி பார்க்கிறோம். ஆனால் , கொடுமை என்னவென்றால், மனிதனின் பொதுவான குணங்களில் ஒன்றுதான் நேர்மை..! நம் அனைவருக்கும் (பெரும்பான்மையாக) 18 வயதுக்கு மேல் ஆகியிருக்கும். அனைவரும் இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களாக இருப்போம். நகர வீதிகளில் சிறப்பாக ஓட்டிச்சென்றிருப்போம்.நம்மில் எத்தனைபேரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறது?நம்மை யாரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியதில்லை என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் நாம் வாங்குவதில்லை. ஏன்..? நேரமில்லை.. என்போம். ஆனால் எத்தனையோ நேரங்களை வீணாக செலவழித்திருப்போம். இந்நிலையில் ஒரு நெரிசல் மிகுந்த சாலையில் , நல்ல வேகத்தில் செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்தால், அவரிடம் ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பார்ப்பதும் , அவரிடத்தில் கையூட்டு கொடுத்து நகர நினைப்பதும்தான் நடக்கும். இதுதான் லஞ்சத்தை ஊக்க

தாயாதாரம்..!

இதோ பாருங்க...ஒண்ணு நான் இந்த வீட்டில இருக்கணும்..! இல்லன்னா உங்க அம்மா இருக்கணும். நீங்களே முடிவுக்கு வாங்க.! கல்யாணி இப்படி அதிரடியாய்பேசியதும், நான் கொஞ்சம் கலங்கித்தான் போனேன். -ஏன் அம்மா எந்த தப்பும் பண்ணலயே ! அவுங்க உன்னிடமும் பாசமாத்தானே இருக்காங்க.! அப்புறம் ஏன் பிடிக்கலைங்கிற? -பிடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்..! ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க! இருந்தாலும் அவுங்க நடவடிக்கையும்.. கிராமத்து பேச்சும், ஒரு டிவி கூட பாக்காத கொணமும்..மருதாயின்னு பேரும்..மொத்தத்துல பிடிக்கலை.. அவ்வளவுதான்.! ரூம்ல டேபிள்ல 3 காப்பகத்துக்கான அப்ளிகேஷன் வச்சிருக்கேன். எது நல்லதா படுதோ அதுல சேத்துவிட்டுடுங்க.! என்னால மாரடிக்க முடியாது. அதையும் மீறி இங்கதான் இருப்பாங்கன்னா..நான் கட்டாயமா வீட்டைவிட்டு போயிடுவேன்.! மிகவும் வேதனையாய் இருந்தது. அம்மா கிராமத்துக்காரி! நானும் அங்குதான் வளர்ந்தேன். 12 வயதில அப்பா போய்விட, என்னை வளர்க்க அவள்பட்ட பாடுகொஞ்சம் அதிகம்தான்.! ஏதோ ஒரு வெறியில் நானும் படித்து ஒரு கவுரவமான நிலைக்கு வந்து, நகரவாசியாகும் வரை நன்றாகத்தான் இருந்தது, கல்யாணியை காதலித்து கரம

ஊடலே இதற்கும் காரணி...!

இந்த கவிதை (மாதிரி).... பதிவா போட்டபிறகுதான்.. என் நண்பன் ஒருத்தன் அழைப்பு நிலையத்தில் வேலை பார்ப்பவன் சந்திச்சு பேசினான். அவனிடம் பேச்சுவாக்கில் இதுபத்தி சொல்ல. அதையேன் கேக்குற? அப்படி போனில் சந்தேகம் கேட்டு, எனக்கு மூட் சரியில்லாததால சண்டையாகி , அப்புறம் மெதுவா புரிஞ்சுக்கிட்டு ,காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவதான் என் மனைவின்னான். அப்படிப்போடு..! ன்னேன். அதுமட்டும் இல்லடா..! அவளும் ஒரு அழைப்பு மையத்தில் வேலைக்கு சேர..எனக்கு இரவு வேலை..அவளுக்கு பகலில்.! ஆக வீட்டு வேலையெல்லாம் நான் செய்யவேண்டியிருந்தது..(இதுமட்டும் காரணமில்ல...! ஆனா வெளிப்படையா சொல்லுவாங்களா?) அன்னிக்கு ஒரு நாள் அவ கிளம்பிக்கிட்டிருக்கும்போது வண்டி சாவியப்பாத்தீங்களா ன்னு என்னப்பாத்து கேக்க , ஏன் நான் உனக்கு வேலையாளான்னு நான் அலுப்பாக பேச.. அது மெதுவா பூதாகரமாகி சண்டையா வெடிக்க, உனக்காகத்தானே..உன் சுமை குறைக்கத்தானே வேலைக்கு போய் கண்டவன்கிட்ட திட்டுவாங்குறேன். இனிமே வீட்ட பாத்துக்கறேன். வேலைக்கு போகலன்னு திடீர்ன்னு எகிறி சத்தியாக்கிரகம் பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா.. ஐய்யய்யோ.. அப்புறம்..? அன்னிக்கு அவளை சமாதானப

ஊடலே யுத்த காரணி...!

இந்தியாவில் இப்பொழுது கால்சென்டர்கள் அதிகமாகி விட்டது. குமாரசாமி உள்ளே சென்றதும் ஆடம் ஆகிவிடுகிறான். மாதவியோ - மிஷல்.... இப்படியே போகும் வாழ்க்கையில்..உலகின் ஏதோவொரு மூலையிலிருக்கும் ஒருவருக்கு பதில் சொல்லிக்கொண்டு வசவுகளைவாங்கிக்கொண்டு வாழும் இவர்களால் என்னன்ன நேரலாம் என்பதன் கற்பனை..! இது ஒரு கவி(க்க)தை ! அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில் இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்! அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள் அனகோண்டாவாக மாற... ஆனந்துக்கும் , அகிலாவுக்கும் ஆரம்பமானது சண்டை..! அடிப்படைக்காரணம்.? நேரமாகிவிட்டது இன்னும் காலுறையைக்காணவில்லையாம்! யாருக்கு பொறுப்பு என்று பாப்பையா இல்லா பட்டிமன்றம்! தடித்த வார்த்தைகளை தவ்விப் பிடித்துக் கொண்டு தகராறை முற்றவிட்டு கணவனும் மனைவியும் கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் ! நிறுவனத்தில் நுழைந்து தன் இருக்கைவந்து ' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு அழைப்புக்காய் காத்திருக்கிறான்.! 'என்னமாய் பேசிவிட்டாள் !' துடிக்கிறது உதடுகள்.. முதல் அழைப்பு வந்ததுமே பதில்சொல்ல விழையும் முன்' கேட்பவனின் கேள்வியில் கடுகளவு கோபம்! 'உன் நிறுவன மடிக்கணிணியில் இப்

உறவுகள் - பாகம் 2

பிரபஞ்சத்தை சிந்தியுங்கள்! சூரியனைச் சுற்றிவந்து வெளிச்சம் வாங்கிச் செல்லுகிறோம் அவனில்லாத வேளைகளில் மின்விளக்கே சூரியன் மின்சாரம் இல்லையென்றால் மெழுகுவர்த்தி சூரியன் நெருப்பொளியும் இல்லையென்றால் சந்திரனே சூரியன் அன்று அமாவாசையென்றால் இருள்தானே நிரந்தரம்! இதுதான் நமதுவாழ்வும்... துன்பம்தான் நிரந்தரம்! இன்பம் நிரப்பிக்கொள்ளத்தான் எத்தனை எத்தனை உறவுகள் நட்பு, பெற்றோர்,துணைக்கெல்லாம் நான்கே பெயர்தான் உள்ளது! உறவினம் மட்டும் உங்களுக்கு எத்தனை பெயரில் உள்ளது? அன்பான அண்ணன், தம்பி ஆசையான அக்காள் தங்கை மானம் காக்கும் மாமன்,மச்சான் ஒத்துப்போகும் ஓரகத்தி சொன்னது கேட்கும் கொழுந்தன் சந்தோஷம் தரும் சகலை பேரன்பு கொண்ட பெரியப்பா,பெரியம்மா சீராட்டும் சித்தப்பா, சித்தி பாசம்காட்டும் பேரன் பேத்தி பக்குவம் காட்டும் மாமியார், மாமனார் அன்புக்கென்றே பிறந்த அண்ணி அதற்கும் மேல் அத்தான் என்று ஆயிரமாயிரம் உறவுகள் ! பட்டியலை நீட்டலாம் பகலவனின் கதிர்களாக..! அண்ணன் தம்பியென்ற அற்புதம் தரும் சுகம் என்னவென்று கண்ட இராமனைக்கேளுங்கள்! இராமாயணமே சொல்லுவான். துன்பமான நேரத்தில் தூக்கிவிட்டு உதவிய பக்த நண்பர்களையே தம்பிய

உறவுகள்

பெற்றோரின் அன்பில் பூரித்தல் இன்பம்! நண்பர்கள் நட்பில் நனைதலும் இன்பம்! என்று எங்கள் இன்பம் என்றென்றும் இன்பம்? எண்ணி எண்ணி மாய்ந்ததில் எழுந்தன சில வார்த்தைகள்! வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக்கி நிமிர்ந்து பார்த்தால் எட்டிப்பார்த்து மகிழ்விக்கின்றன என்னுள் அத்தனை உறவினமும்! வெளியூரில் வேலை கிடைத்து வெற்றிகாணச் செல்லும் வெறியுள்ள இளைஞனை சற்று நிறுத்திக் கேளுங்கள்! தம்பீ ! எங்கு தங்குவாய் ! ' மாமன் வீடு இருக்கிறது. அங்குதான் தங்குவேனென்பான். கட்டாய வேலையாக கல்கத்தா செல்லுங்கள்! புகைவண்டி நிலையம் வந்து கூட்டிச்செல்வான் அக்காள் மகன்! பொருளாதார இக்கட்டை புறங்கையால் தள்ளிவிட்டு புத்துணர்வு கொள்ளும் ஒற்றை மனிதனின் மகிழ்ச்சிக்குப்பின்னால் முகம் தெரியாத சித்தப்பாவின் பண உதவி மறைந்திருக்கும்! ஆளே இல்லாத ஊருக்கு உங்களை அனுப்பிவிட்டு அடுத்த மணி நேரத்தில் அங்கொருவன் வந்து சேர்ந்து இருவரும் பேசத்தொடங்கி நன்கு பழகி உங்களுக்குள் விளிக்கும் நாள் வரும்போது வயதில் மூத்திருந்தால் 'அண்ணே' வயது குறைந்திருந்தால் 'தம்பீ' சம வயதிருந்தால் 'மாப்ளே' என்றழைத்து நட்பையும் உறவாக மாற்றித்த

போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...! - பாகம் 2

அந்த கடையில அதிகமா, திருச்சில தொழில் பண்ணி, தனியா தங்குற வட நாட்டுக்காரங்கதான் சாப்பிட வருவாங்க...! நாங்க மட்டும்தான் அதுக்கு வேற்று கிரக வாசிங்க மாதிரி..! மத்த திருச்சிவாசி தமிழர்கள் அதிகம் சாப்பிட வரமாட்டாங்க! ஆமா..11 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கும்போது (அப்ப சிறப்பு சாப்பாடு 15 தான்) எவன் 20 ரூபாய்க்கு சாப்பிடுவான் ? எங்களை மாதிரி உள்குத்தோட வந்த ஆட்கள் தவிர..! நான் தினமும் 3 அல்லது 4 ரோட்டியும், சாதமும் வாங்குவேன்..! சீனிவாசன் சாதரணமாவே 9 முதல் 11 ரோட்டி வரைக்கும் முட்டிட்டு ..கப் தயிருல சக்கரை போட்டு கொண்டுவா தம்பி! ன்னுவான்.என்னிக்காவது 6 ரோட்டி சாப்புட்டுட்டு ...வயிறே சரியில்ல நண்பா..!ன்னு லந்தைக்குடுப்பான். ஆனா அந்த கடை முதலாளி என்னைப்பாத்தாவது லேசா சிரிப்பான்..ஆனா சீனிவாசனைப்பாத்தா..முறைப்பான்.எங்களுக்கு காரணம் சரியா புரியலை..! ஏதோ குலதெய்வம் செஞ்ச புண்ணியம் எங்க வண்டி நல்லா ஓடிட்டிருந்தது. ஆனா எப்பவுமே அங்க பரிமாறுகிற பையனுக்கு எங்களை அப்புடி ஒண்ணும் பிடிக்காது..! ஏதோ அவன் சப்பாத்தில மண்ணள்ளி போட்டவங்க மாதிரியே நடத்துவான். அதெல்லாம் பாத்தா நடக்குமான்னு நாங்களும் அவனையே தாளிச

போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...!

இந்த பதிவுக்கு அடிப்படைக்காரணம் புதுகைத்தென்றல் போட்ட இந்த பதிவுதான்.. ஏன்னா அவுங்கதான் எனக்கு இந்த கொசுவத்தியை கிளப்பிவுட்டுட்டாங்க..! நான்..பல ஆண்டுகளுக்கு முன்னால ஒரு தில்லி நிறுவனத்தின் திருச்சி கிளைல பொட்டி தட்ட (சரி பண்ண) வேலைக்கு சேந்தேன். அங்க என் கூட சீனிவாசன்னு ஒரு நண்பன்.! அவன் சரியான லந்து பேர்வழி..!(நமக்கு வாய்க்கறதெல்லாம் பின்ன எப்புடி இருக்கும்?) தினமும் ஏரியாவுக்கு வேலையா காலைல 9 மணிக்கெல்லாம் கிளம்பிடுவோம்.. மொதல்ல 2 பேரும் டிபன் சாப்பிட்டுட்டு...மதியம் ஹோட்டல் மதுரா..(தெப்பக்குளம் பக்கத்துல ..சாரதாஸ் பின்னாடி  இருக்கு.._) வில் சாப்பாடு சாப்பிடுவோம். அங்க எப்புடின்னா பந்திமாதிரி உக்கார வச்சு அளவில்லா (Unlimited) சாப்பாடு போடுவாங்க!அதுவும் முடிச்சா மாலைல தூள் பக்கோடா டயமண்ட் பஜாரில் ஒரு கடையில்.. சில நாள் மதிய சாப்பாடு லேட்டாகிட்டா மாரீஸ் தியேட்டருக்கிட்ட வெண்ணிலா ரெஸ்ட்டாரண்டில் பொரிச்ச புரோட்டா.. இப்புடி நல்லா போயிட்டுருந்த சாப்பாட்டு வாழ்க்கையில- யார் கண் பட்டுச்சோ..கம்பெனில சாப்பாட்டு அலவன்சை நிறுத்துறதா சொல்லிட்டாங்க.! இது என்னடா இளைய சமுதாயத்துக்கு வந்த சோதனைன்னு

மறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)

இதுதான் க்ளைமாக்சுங்க.... கிடைச்ச பெட்டியின் பூட்டை சரி பண்ணி, மறுபடியும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேங்க..! சரியா 15 நாள் கழிச்சு., ஒரு கூட்டத்துக்கு திண்டுக்கல்லுக்கு கூப்பிட்டாங்க..! அப்பவே சனி அடுத்த பந்தை போடப்போகுதுன்னு தெரியாம அதே பெட்டி, கிட்டத்தட்ட அதே பொருட்கள் மற்றும் அதைவிட விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவுடன் என் வீரப்பயணத்தை தொடங்கினேன். திருச்சி வந்து பஸ் மாறி ஒரு பழனி பஸ்ஸைப்பிடிச்சு அதில் உக்காந்தேன்.. நம்ம பெட்டியை இருக்கைக்கு மேல (அதுவும்..எதிர்புறம்) உள்ள பெட்டி வைக்கும் பகுதியில் பத்திரமா வச்சுட்டு..(அப்பதான் அடிக்கடி பாத்துக்க வசதியா இருக்கும்)- பஸ் இன்னும் கிளம்பலை.. நிலையத்திலேயே நிக்குது.. ஒரு புத்தகத்தை எடுத்து வச்சு, அதைப் படிக்க ஆரம்பிச்சு,ஒரு பக்கம் படிச்சு முடிச்சேங்க..! அப்ப எதேச்சையா -அனிச்சைச்செயலா- திரும்பி பாக்குறேன். பெட்டியை காணோம்.....! என்ன கொடுமைடா இதுன்னு..பஸ்முழுக்க,நிலையம் முழுக்க தேடி...ஓடி...அலையுறேன்.. நாம வேற பொட்டி தட்டுற ஆளா..! இதுக்கு ஒரு கூகுள் இருக்கக்கூடாதான்னு மனசு அப்பகூட நெனைக்குது..! சரி..இந்தவாட்டி சனியனுக்கு, ஸ்கோரில் ஒரு விக்கெட் ந

பெட்டி கிடைச்சுப் போச்சு...!

பெட்டி தொலஞ்ச சோகத்தில் இருந்தாலும்...( இங்கதான் தொலச்சேன் பாருங்க..) அது பஸ்ஸிலயே இருந்தா எப்படி இருந்திருக்கும்? யாரும் தூக்கிட்டு போகாம இருக்கணுமேன்னு பல சிந்தனைல... எதுக்கேன் கேட்டுப்பாப்போமின்னு..தொலச்சவனையே  நல்லா திட்டி..(நமக்கு அதுதானே தெரியும்..)திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி.. அதே பஸ் டிரைவர்கிட்ட கேட்டா ஒரு இனிப்பு சேதி.. பெட்டி பஸ்ஸில்தான் இருந்துச்சாம்..ஐயோ அப்புறம்.. இருக்காதா பின்னே? அதை கோவைல ஒரு டிப்போல வச்சிருக்காங்களாம். அடையாளம் சொல்லி வாங்கிக்கலாமாம். அட்ரா சக்கை ! என் பொருள் வீண் போகாது.. அப்படியாக்கும் ..இப்படியாக்கும்னு பல்வேறு உதார்விட்டு... தங்கமணியையும் கூட்டிக்கிட்டு..(உல்லாசப்பயணம் + பெட்டி பேக் பண்ணினது அவுங்கதானே..) கோவை போனோம்ங்க.. அந்த டிப்போல ..நல்லா கவனிச்சாங்க..(அட.! உண்மைதாங்க..) என்னன்ன பொருள் எங்க வச்சீங்கன்னு கேட்டு சரிபாத்து..பெட்டியை கொடுக்கும்போது..சார் அன்னிக்கு ராத்திரி இந்த பெட்டியால நாங்க யாருமே தூங்கலை சார்..பஸ்ஸில் வேணும்னே யாரோ விட்டுட்டு போயிருக்காங்கன்னு..! குண்டு பயத்துல போலீஸெல்லாம் வச்சு மெதுவா திறந்தோம் சார்..! ன்னு அவுங்க ப

இது என்னங்க கூத்து...?

நம்ம ஊர் பக்கம் மொக்கச்சாமி மொக்கச்சாமின்னு ஒரு பையன் இருக்காங்க..! அவுக அப்பா பாவம்..ரொம்ப ஏழைப்பட்ட சீக்காளி.. அவன் +2ல நல்லா படிச்சுப்புட்டான்...அப்பா மாதிரி யாருக்கும் சீக்கு வரக்கூடாதுண்ணே..அதுக்காகவே டாக்டருக்குப் படிக்கிறேன்னு அரசாங்க மருத்துவக் கல்லூரில சேந்தாங்க..! படிச்சுட்டு என்னப்பு பண்ணுவன்னு...மேதாவித்தனமா நானும் கேக்க , நம்ம கிராமத்துல ஒரு ஆசுபத்திரி கட்டி சேவை (இடியாப்பம் இல்லங்கோ) செய்வேன்னு சொன்னாங்க..! நானும் 'அடடா..என்ன ஒரு அக்கறையான புள்ளன்னு அகமகுந்து போயிருந்தேங்க..! இடையில அவனப்பாக்கும்போது , அவனா வந்து பேசுவாங்க.. எப்புடி போகுது படிப்பெல்லாம்னு கேட்டா.உண்மையிலேயே நான் புண்ணியம் பண்ணிருக்கேண்ணே.பல பேரு லட்சக்கணக்குல செலவழிச்சு படிக்குற படிப்ப எனக்கு செல ஆயிரத்துலயே அரசாங்கம் குடுக்குதுண்ணே..மக்கள் கட்டுற வரிப்பணத்துலதாண்ணே நானெல்லாம் படிக்கிறேன்.. ஆனா..அதே சலுகையை மார்க் வாங்கின ஒரே காரணத்துக்காகவும் கோட்டாலயும் ,சில டாக்டர் வீட்டு, பெரிய பணக்கார வீட்டு பசங்களும் அனுபவிச்சு படிக்கிறாங்கண்ணே.. அதாண்ணே கொடுமை..! அப்டின்னு பொலம்புவான்..! இப்ப ஒருநாள், என் கெட்

பெட்டி தொலைஞ்சு போச்சு...!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு இருந்தேங்க..! ஒரு அமைப்புல இத்தனாந்தேதி ஊட்டில கூட்டமிருக்கு...4 நாள் கண்டிப்பா வந்து கலந்துக்கணும்னு சொல்லிப்புட்டாங்க..! நம்மதான் ஊட்டின்னு பெரிய எழுத்துல பெருமைப்படுவோமா..? சரி சரின்னு போனுக்கு மண்டையை ஆட்டிட்டேன். (அப்பெல்லாம் தெரியாது...கெரகம் கீழ்வீட்லயே குடியிருக்குன்னு..) திடீர்னு அதுக்கு மொத நாள் ஒரு அவசர வேலையா சென்னை போகவேண்டியிருந்தது.! சரி ! நம்ம பெட்டியை தூக்கிட்டு அலைய வேண்டாமேன்னு..நேரா சென்னைலருந்து ஊட்டிக்கு வெறுங்கையா போய்டலாம்னு தெறமையா திட்டம்லாம் போட்டு சென்னைக்குப்போய்ட்டேன். திட்டம் என்னன்னா.. நம்ம ஆபீஸ் பையன் ஒருத்தனை என் பெட்டி, லாப்டாப் எல்லாம் எடுத்துக்கிட்டு வாப்பான்னு கெஞ்சி கேட்டுக்கிட்டு ஊட்டி வரச்சொன்னேன். அவனும் அதே மாதிரி பஸ் ஏறிட்டான். நானும் சென்னைல வேலையெல்லாம் முடிச்சுட்டு கிளம்பி ஊட்டி போயிட்ருக்கேன். இப்ப....நான் சென்னை - ஊட்டி என் பெட்டி புதுக்கோட்டை - ஊட்டி ராத்திரி ஒரு எடத்துல வண்டி நின்னுருக்கு ! நம்ம ஆள் எறங்கி, சாப்பிட்டு வந்து பாத்தா வண்டி எஸ்கேப்.. ( பக்கத்து பஸ் டிரைவரையே பாத்துக்கிட்டிருந்தானாம்.. நம்ம வந்த

வடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....

கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி கணிசமாய் வெங்காயம் சேர்த்து கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...! கவனமாய் உண்பீரே.! எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..! சமைக்கிறோமோ இல்லையோ நக்கல் நல்லா வருதுங்கோ...

தலை வெட்றதை பாக்குறீங்களா..?

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். நான் ஏதாவது காய் வாங்கி வரலாம்னு யான்பு அல் பஹாருக்குப் போனேன். காரை ஒரு மசூதிக்கிட்ட நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா ஒரே கூட்டம். எல்லாம் கச முசன்னு பேசிக்கிட்டிருந்தாங்க! நம்ம ஆள் ஒருத்தரிடம் கேட்டேன்: "என்னங்க கூட்டம்?" "தல வெட்டப் போறாங்களாம்" (என்னவோ முடி வெட்டப்போறது மாதிரி சொன்னார்). கொஞ்சம் அரண்டாலும், உள்ளே எட்டிப் பார்த்தேன்... ரெண்டு ஆட்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டி போட்டு வைக்கப்பட்டிருந்தாங்க.. மொத ஆள் கொஞ்சம் வயசானவர்...40-45ருக்கும். ரெண்டாவது ஆள் 30-35 வயசுள்ள வாலிபர். ஒரு குள்ளமான சௌதி ஒரு கடுதாசியை வச்சுப் படிச்சார்.. (என் ஒடைஞ்ச அரபை வச்சு புரிஞ்சிக்கிட்டேன்) "மொத ஆள் ஒரு பாகிஸ்தானி... பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு போதைப் பொருள் விற்கும்போது பிடிச்சோம். குற்றத்தை ஒத்துக்கிட்டான். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்துக்கு புதன்கிழமை தீர்ப்பு கொடுத்திருக்கு... அது மரண தண்டனை.. இப்போ தலையை வெட்டப்போறோம். ஏதாவது ஆட்சேபனை உண்டா?" கூட்டம் உடனே, "இல்லை! இல்லை!" னு சத்தம் போட்டது! அடுத்து - குள்ளமான சௌதி ம

'கர்நாடகத்தனம்'னா இதுதானா...?

நமக்கு காவிரித்தண்ணி தருவதில்தான் சிக்கல்னு பாத்தா..அவங்களுக்குள்ள ஆட்சி அமைக்கறதுலயும் அவ்வளவு சிக்கல் இருக்கும்போல! சினிமாவெல்லாம் சும்மாங்கற மாதிரி அதிவேகமும் , முரட்டுத்திருப்பங்களும் நிறைஞ்சதால்ல இருக்கு இவுங்க பண்றது ! (இதுக்கு அப்புறம் வடிவேலு பாணி ) மொதல்ல முதலமைச்சரா குமாரசாமி வந்தாரு.."மாப்ள நான் கொஞ்ச மாசம் ஆண்டுக்குறேன்.அப்புறம் உனக்குத்தரேன்"னு பிஜேபி யோட கூட்டு போட்டாரு.. இவரு டைமும் முடிஞ்சதா..நேரா அவன்கிட்ட குடுக்கவேண்டியதுதானே ! அதைக்குடுக்காம, தம் பங்குக்கு கொஞ்ச ஆட்களை சேத்துக்கிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அளும்பு பண்ணினாரு..! பிஜேபியும் காங்கிரசும் வெளில சொல்ல முடியாத அளவுக்கு காரியம் எல்லாம் பண்ணி அந்த நாற்காலில ஒக்காந்துப்புடணும்னு பாத்தாய்ங்க! நடக்குமா..? ஒரு வழியா சொகுசு பஸ்செல்லாம் பிடிச்சு எம் எல் ஏ வெல்லாம் ஏத்தி ஒரு 5ஸ்டார் ஓட்டல் சந்துக்குள்ள வச்சு அவுங்களால முடிஞ்சவரைக்கும் என்ஜாய் பண்ணினாங்க! குமாரசாமிக்கு ஒரு அப்பா..தேவகவுடா தேவகவுடா ன்னு பேரு..உண்மையா அசுரகவுடான்னு வச்சிருக்கணும்..அந்த ஆள் பாட்டுக்கும், தன் கட்சிக்கும் மகனுக்கும் நல்லது (ந