Posts

Showing posts from November, 2010

கால ஓட்டத்தில் காணாமல் போனவை !

Image
அதெல்லாம் அந்தக்காலம்’ என்று அங்கலாய்க்கும் மனோபாவம் அனேகமாய் எல்லோருக்கும் ஆங்காங்கே வருவதுண்டு! அடிப்படைக்காரணமாய் சிறுவயதில் சிறப்பாக நீங்கள் பார்த்த ஒரு விஷயம் மாறிப்போய் வந்திருக்கும்! கால ஓட்டம் அதன் காரணமாய் கட்டாயம் இருந்திருக்கும்! எத்தனையோ ஆண்டுகள் உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு இப்போது திடீரெனறு இல்லாமல் போய்விட்ட அவ்விஷயம் உங்களுக்குள் தாக்கங்கள் தந்திருக்கும்! மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் மாறியவை என்னவென்று மறக்காமல் இருப்போம் ! வேப்பங்குச்சிகள் செய்துவந்த பல்விளக்கும் வேலைதன்னை பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல் நெற்றிப்பொட்டாய் ஜொலித்திட்ட சாந்தை, ஸ்டிக்கர் பொட்டு சாய்த்ததுபோல் கெந்தி விளையாடும் கில்லிதாண்டை கிரிக்கெட் ஆட்டம் கெடுத்ததுபோல் கடிதம் எழுதும் அழகுதன்னை கையில் செல்போன் பறித்ததுபோல்.... டிக்கெட் எடுத்து விசிலடித்து பார்த்த திரையரங்கை டிவிடியும் , விசிடியும் வீழ்த்தியதுபோல் ஆப்ரகாம் பண்டிதர் தெரு நண்பனை நேரில் வைத்துக்கொண்டே அமெரிக்க புதியவனுடன் சாட்டுவதுபோல், எத்தனை எத்தனை மாற்றங்கள்! கல்கோனா, கட்டை வண்டி பெல்பாட்டம் பேண்ட் பெட்ரோமாக்ஸ் விள...

இதுக்கெல்லாம் செக் லிஸ்டா? சரிதான்!!

Image
ஊரு கெட்டுப்போச்சுன்னு சொன்னா யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க! இதோ பாருங்க! ஒரு கம்பேனி, விவாகரத்து பண்ணனும்னா என்னன்ன தேவைன்னு செக் லிஸ்ட் குடுத்திருக்காங்க! Divorce Checklist is powered by Checklist.com இந்தத் தளத்தில் மிகவும் உபயோகமான செக்லிஸ்டுகள் உள்ளன. வீட்டுக்கு ரொம்ப உபயோகமான ரெண்டு லிஸ்ட் எடுத்தேன். + Automotive Checklists + Business Checklists + Computers & IT Checklists + Employment Checklists + Event Checklists + Family Checklists + Finance Checklists + Health Checklists + Home Checklists + Personal Checklists + Recreation Checklists + Safety Checklists + Sports Checklists + Travel Checklists இவ்வளவு தலைப்புகளில், நூற்றுக்கணக்கான பட்டியல்கள் உள்ளன. நாமும் புதுசா சேத்துக்கலாம். மிகச்சிறப்பாக ஒரு செக் லிஸ்ட் தொழிற்சாலையே நடத்துறாங்க! உண்மையிலேயே பயனுள்ள பக்கம்! இதை தமிழில் செய்யவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. உள்ள வேலையில் இது வேறயா??  படிச்சுட்டு பயனுள்ளதை மட்டும் எடுத்துக்குங்க!! :)

பிரமிக்க ஒன்று! சிரிக்க ரெண்டு!

Image
ஏ.ஆர்.ரஹ்மானை கண்டு பிரமிப்பதற்கான காரணம் இதுவும் ஒன்றுதான்!   கனடாவில் ஒரு கல்லூரி இசைக்குழு பாடி அசத்துகிறது பாருங்கள்! மேலை உலகைத் தமிழ் பாட வைத்து பிரமிக்கடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! இதுதான்  பிரமிக்க ஒன்று !  ஒரு சிறுபெண்! மொழித் தடுமாற்றம் இல்லாமல், மேடைபயம் இல்லாமல், என்னமாய்ச் சிரிக்க வைக்கிறாள்! அவர்கள் வீட்டில் திருஷ்டி சுற்றிப்போடச்சொல்லவேண்டும். இதுதான் சிரிக்க ஒன்று !!  ஆங்கிலப் புரிதலும், அனைத்து நாட்டார்களும் .....பழைய நிகழ்ச்சியாக இருக்கலாம். சுவை சூப்பர்! இதுதான் சிரிக்க ரெண்டு !

எந்திர அரசியல்

Image
எந்திரன் - மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு, தமிழின் பிரம்மாண்ட படமாக, ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல்பாதியில் கதையும், இரண்டாம் பாதியில் கம்ப்யூட்டரும் ஆட்சி புரிந்திருக்கின்றன.  மிகப்பெரிய வெற்றிகளாகக் கொண்டாடப்படும் எல்லா விஷயங்களும் , சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல! சம்பந்தப்படாதவர்களையும் சந்தோஷப்பட வைக்கவேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி அந்த வகையைச்சேர்ந்ததாகத்தான் இருக்கும். விளையாட்டில்கூட ஒரு அணி தோற்றால்தான் , இன்னொரு அணிக்கு வெற்றி.! தேர்தல் வெற்றியும் அப்படியே! இன்னும் பல்வேறு வெற்றிகள் இந்த வகையைச் சேர்ந்தவை! ஒருவர் தோற்றால்தான், இன்னொருவர் வெற்றி கொண்டாடப்படும். ஆனால் திரைப்படங்களின் வெற்றி என்பது இன்னொரு படத்தை தோற்கடிப்பதற்காக என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால், சங்கர், ரஜினி, ரஹ்மான், கலாநிதிமாறன் என்ற பிரம்மாண்ட சுனாமிகள் சேர்ந்து தங்கள் வெற்றிக்காக எத்தனை சிறு திரைப்படங்களை அழித்துத்தள்ளிவிட்டார்கள். சுமாராக வசூல் செய்து கொண்டிருந்த படங்கள் கூட, இவர்களது திரையரங்க ஆக்கிரமிப்பில் சிதறிப்போய்விட்டன. இன்று வெற்றி..வெற்றி என்று வெறியுடன் கதறிக்கொண...

பிரபு சால’மைனா’!

Image
          கமர்ஷியல் வெற்றியைப்பற்றி நினைக்காமல் கிங், கொக்கி, லீ, லாடம் என்று தரமான படங்களையே எடுத்துவந்த பிரபு சாலமன் இயக்கி, ஊரே எதிர்பார்த்த மைனா - கதாநாயகியின் பெயர்.  பெரியகுளம் கிளைச்சிறையில் இருக்கும் கைதி சுருளி.  ஏன் ஜெயிலுக்கு வந்தான் என்று நினைத்துப்பார்க்கிறான்.சிறுவயதில் சுத்தமாகப் படிப்புவராததால், மலைக்கிராமத்துக்கு வந்துசெல்லும் ஜீப்பில் உதவியாளனாகப் போய் வந்துகொண்டிருக்கிறான் சுருளி.அப்போது ஒருநாள்  கடன்சுமையால் வீடிழந்து நிற்கும் மைனாவுக்கும் அவள் அம்மாவுக்கும் தனக்குத் தெரிந்த பாட்டி வீட்டில் தங்க ஏற்பாடு செய்து கொடுக்கிறான்.  அவள் அம்மா, சுருளியை ‘மருமகனே’ என்று கூப்பிடும் அளவுக்கு குடும்பத்து தினசரிச் செலவுக்கு மூட்டை தூக்கி ,உதவுகிறான். மைனாவின் மேல் இவனது அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான்.  ஒருநாள் மின்சாரம் போனதால் அவளால் படிக்கமுடியாமல் போகிறது. அவளுக்கு வெளிச்சம் தர, சைக்கிளை ஸ்டாண்ட் போ...