காகங்களல்ல! மேகங்கள்!
நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில் இத்தனை தவறு செய்கிறீர்கள்? மேலதிகாரியின் மெயிலில் அனலாய்க் காய்கிறது வேலையிடம்! சாதம் ஏன் இனிக்கிறது? பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே குழம்புக்கிண்ணம் பக்கத்தில் கொக்கரித்துச் சிரிக்கிறது. ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட பாழாய்ப்போன சரக்குகூட சகலத்துக்கும் உதவிசெய்யும் சகோதரனாய்த் தோன்றுகிறது! வாகனம் ஓட்டிக்கொண்டே சிந்தித்ததில் வழியெங்கும் வசவுப்போக்குவரத்தின் வாய்கொள்ளா இரைச்சல்! இருந்தாலும் மாப்பிளை நீ இப்படி எழுதியிருக்கக்கூடாது! சூப்பர்டா என்றவன் கூட சூத்திரம் சொல்லித்தருகிறான் ! இதுக்கு என்ன பதில் எழுதலாம்? அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்! எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து என்னைக் கொல்லாமல் விடாதுபோல! இத்தனை நாள் காத்திருந்த எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்! தேடித்தேடித் தின்னும் பின்னூட்டங்கள் கசக்கின்றன. மனம் நோகவேண்டாமென்று மட்டுறுத்தினாலும் பின்னூட்டம் பெருகுகிறது. கூரான வார்த்தைகளால் குறையாமல் விழுகிறது குருதி! அந்தப்பதிவை மட்டும் அனேகம்பேர் படிக்கக்கூடாதே.. அல்ப ஆசை ஒன்று ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்! சொன்னது சரிதானென்று சொக்காய் கிழிய வாதிடலாம்! சொன்னது முற்றி...