குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .
சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன். டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார். நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன், ’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல, ’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொட