Posts

Showing posts from July, 2010

நீயெல்லாம் நண்பனாடா?

Image
'நீயெல்லாம் நண்பனாடா?' இப்படிக்கேட்டுவிட்டுத்தான் ஆரம்பித்தான் சங்கர். 'நீதான் எதைப்பாத்தாலும் அப்படியே வரையிவியேன்னு உங்கிட்ட வந்து எங்க அப்பா கையெழுத்தை மார்க் ஷீட்டில் போடச்சொன்னா உடனே தர்மம் நியாயம் எல்லாம் பேசுறியே! உனக்கெல்லாம் நட்பைப்பத்தி என்னடா தெரியும்?' அவனோடு பிரபுவும்,சிவாவும் சேர்ந்துகொள்ள..அவன் அப்பா கையெழுத்தை அப்படியே போட்டேன். ' நண்பன்னா நீதாண்டா நண்பன்! 'என்றான் சங்கர் முகம் முழுக்க பற்களோடு! படித்து முடித்து ,ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது சிவாவும் என்னுடனேயே தங்கியிருக்க, ஒரு நாள் இரவு சினிமாவுக்குப்போனபோது, டிக்கெட் கவுண்ட்டருக்குள்ளிருந்து அந்தக்குரல் கேட்டது, 'நீயெல்லாம் நண்பனாடா? - இந்த ஊர்லதான் இருக்கேன்னு ஒருவார்த்தை சொல்லக்கூடாது.? ' 'அட..சங்கரு எப்படிடா இருக்க?' என்று அளவளாவ, இங்கதான் தியேட்டரில் டிக்கெட் குடுக்குறேன். நீ எங்க இருக்க? என்று விலாசம் வாங்கிக்கொண்டான். சில மாதங்களில்...ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் அறைக்கதவு தட்டப்பட, திறந்தால்..சங்கர்! என்னடா? 'நண்பா..தியேட்டருக்கு அடிக்கடி வரும்

விமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்

Image
அடுத்தடுத்து சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுவீரனை அவனும், அவன் நண்பர்களும், ரசிகர்களும், தேசமும் புகழ்ந்துகொண்டிருந்தாலும், அந்த வெற்றி நிலைக்கு வருவதற்காக அடைந்த அவமானங்கள், தலைகுனிவுகள், சிரமங்கள் ஆகியவற்றை அவனால் மறக்கவே முடியாது. அதிலேயே ஊறிப்போன அவன், நல்ல விளையாட்டுவீரனாவது எப்படி என்று ஒரு சிறப்பான பயிற்சியை அளிக்கமுடியும். சினிமா என்பது மற்றவர்களுக்கு பிரம்மாண்டமாய், சுலப வருமானமாய்த் தெரிந்தாலும், உள்ளிருப்பவர்களுக்குத்தான் அதன் சோகங்களும், சூட்சுமங்களும் தெரியும். அந்தவகையில், பல ஆண்டுகளாய் திரைத்துறையிலேயே வாழ்ந்து, வென்று ,தோற்று , மீண்டும் வென்று அதனையே சுவாசித்துக்கொண்டிருக்கும் திரு.சங்கர் நாராயண் (பதிவர் கேபிள் சங்கர் ) அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சினிமா வியாபாரம் படிக்க ஆரம்பித்தது ஒரு விமான நிலைய காத்திருப்பில்..! பின் எப்போது விமானத்தில் ஏறினேன்? அங்கு என்ன உண்ணக்கொடுத்தார்கள்? எப்போது அடுத்த நகரில் வந்திறங்கியது என்று தெளிவாக நினைவில்லாத வகையில் , சினிமா வியாபாரச் சுழலுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்.