அகவை 70ல் அப்பா!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் பார்த்துவருகிறேன். ஒரு சாதாரணக் குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்து ஒரு அரிசி மில்லில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பின்னர் பள்ளிக்கல்வியை மிகுந்த சிரமத்துக்கிடையே முடித்து, ஆசிரியக்கல்வியும் கற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கி, பின்னர் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமசேவக் எனப்படும் பணியில் நிலைபெற்று வாழத்துவங்கி ஊராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றவர் அவர்.! என்னிடம் அதிகம் பேசுபவரில்லை. நிறைய அறிவுரைகளும் சொல்பவரில்லை. நான் என்ன செய்யக்கூடாtது என்று பட்டும் படாமல் சொல்லிச் செல்வார். சிறுவயதில் இவர் எனக்கு சிம்ம சொப்பனம். அரசாங்க ஊழியராய் இருந்துகொண்டு லஞ்சம் வாங்காமல் இருந்தவர். ஒருமுறை லஞ்சம் கொடுக்க வந்த ஆளை அடிக்கச்சென்றவர். அந்த மனிதரிடமிருந்த நேர்மைதான் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. எந்தக்காலகட்டத்திலும் அவர் நேர்மையை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. தவறு யார் செய்திருந்தாலும், தைரிய...