Posts

Showing posts with the label வேலைத் தகுதி

திறமை இடைவெளி

Image
இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது. நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில்  Badri Seshadri  அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. ஆம்.. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை... இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான். படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap.. வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap. இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap. கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடி...

வேலைத்தகுதி வேட்டை

Image
       வேலையில்லாத் திண்டாட்டம் என்பது ஒரு காலகட்டத்தில் நம்மை அச்சுறுத்தியது. இப்போது வேலைக்கு ஆளில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அதாவது, வேலைக்குத் தகுதியான ஆட்கள் இல்லாமல், நிறுவனங்களும் , சிறு முதலாளிகளும் தவிக்கிறார்கள்.       ஒரு பெரிய கணிப்பொறி நிறுவன மேலதிகாரியும், ஒரு அச்சக உரிமையாளரும் ஒரே மாதிரிதான் புலம்புகிறார்கள்.      “இந்தக்காலத்துப் பசங்களுக்கு, வேலை பாக்கணும்கிற எண்ணமே இல்லை சார்.! அதுவும் நேர்மை, நாணயம், உழைப்புல எல்லாம் நம்பிக்கையே இல்லை. பொறுப்பே இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமான்னு பாக்குறாங்க! பொறுப்புகளை எப்படி தட்டிக்கழிக்கிறதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க..! நாங்கள்லாம் எங்க மேலதிகாரிக்கும், முதலாளிக்கும் பயந்தோம். இப்போ நாங்கதான் எங்க ஊழியர்களுக்கு பயப்படுறோம்..!      எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய இப்போது நேரமே இல்லை. நடந்த தவறை உணரும் தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் இன்றைய உயர்கல்வி மாணவர்களுக்கு அத்தகைய வேலைத்தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது என்பதையே அவர்க...