மங்களூர் சிவாவுக்கு ஒரு முரட்டு பின்னூட்டம்

மங்களூர் சிவா போட்ட இந்தப்பதிவுதான்,
இந்தப்பதிவுக்குக்காரணம்..


முதலில் எனக்கு பார்த்திபனின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது!

வாழ்ந்து என்ன
செய்யப்போகிறோம்
செத்துதான்
தொலைப்போமே!
செத்து என்ன
செய்யப்போகிறோம்
வாழ்ந்துதான்
தொலைப்போமே!

இதில் இரண்டு விஷயங்களை அலச வேண்டியிருக்கு!


முதல்ல..ஆண் பெண் உறவுமுறை.. (ஏன்னா இதுதான் அதிகபட்ச உணர்ச்சிவசப்படலுக்கான காரணி)

அடுத்து..தற்கொலை !

      இந்த ஆண், பெண் உறவுமுறையை நாம சரியா பாக்கலைங்கறதுதான் பெரிய கொடுமை! அது, அன்றாடம் சம்பாதிச்சு வாழ்க்கை நடத்துறவனா இருந்தாலும் சரி! அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிச்சு வச்சு சொகுசு வாழ்க்கை நடத்துற ஆளா இருந்தாலும் சரி..(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! )

      அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிடிச்சுப்போய். திருமணம் செய்தோ, இல்லாமலோ சேர்ந்து வாழத்துவங்குகிறார்கள்.முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை ! இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாக்கியம் ஞாபகம் வருது.! 'குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது!' - ஆனால் சேர்ந்து இருக்கும் கொஞ்ச நாளிலேயே குணத்தை அலச ஆரம்பிப்பதுதான் முதல் பொறி!

      இதில் ஓவரா உணர்ச்சிவசப்படுறது ஆண்கள்தான்! சதி லீலாவதியில் ஒரு வசனம் வரும்..." இவன் என்னவேணும்னாலும் பண்ணலாம். பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும். அதேதான் சின்னவீட்டுக்கும்...!"
ஏன்னா, அவள் யாரோடயும் பேசக்கூடாது. பழகக்கூடாதுன்னு வெளிப்படுத்த ஆரம்பிச்சுடுவான். இதுக்கு பொஸஸிவ்நெஸ்ன்னு ஒரு காரணமும் சொல்வான். ஆனால் பொஸஸிவ்நெஸ் நினைப்பெல்லாம் (இது என் பொருள்..எனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கிறது.இதில் பெண்ணும் அடக்கம்..இது ஆதிகாலத்து பழக்கம்.. அதுக்கு ஒரு சாயம்..அதேபோல்தான் பெண்களும் நினைப்பாங்க) சும்மா, பம்மாத்துக்கு! அதைமீறி அவனிடம் இருக்கும் இன்னொரு விஷயம்தான் அடிப்படைக்காரணி...
அது , அவளது சமூக அந்தஸ்து.! -இன்னும் நம்ம மூதாதையர் ஜீன்லேருந்து நமக்கு போகாத மேட்டர்! அவ எப்படி நம்மளை விட நல்ல நிலமைல இருக்கா? அதுவும் புத்திசாலியா வேற இருக்கா? இவ நம்பளை நம்பித்தானே இருந்தாகணும்? ன்னு நினைக்கும் அவன், இவன் இல்லாமலும் அவளால் வாழமுடியுங்கிற உண்மையை ஏத்துக்க முடியாம தவிக்கிறான். அங்கதான் ஆரம்பிக்குது பிரச்னையின் அடுத்த கட்டம்!

அதுவே சந்தேகமா மாறும். சில சமயம் அது உண்மையாவும் இருக்கும்.

உளவியல் படிச்ச ஆளா இதை வேறமாதிரி பாக்கும்போது.....இப்படித்தான் தோணுது!

அவள்.....
அவனிடம் ஏதோ பிடித்துத்தான் அவனோடு இருக்க தொடங்குகிறாள்..!
அவனிடம் ஏதோ பிடிக்காமல்தான் வேறொருவரோடு இருக்க தொடங்குகிறாள்...!

         நம்மால் ஒரு குழந்தையைக்கூட, அதோட சம்மதமில்லாம தூக்கி வச்சுக்கமுடியாது. பிடிக்கலைன்னா, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இறங்க முயற்சி பண்ணும். அதேபோல் நாம அந்தக்குழந்தையை சமாதானப்படுத்த முயற்சி செய்வோம். அல்லது, எதுக்குடா வம்புன்னு இறக்கி விட்டுடுவோம்.
       ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்! ஒண்ணு, மனசுவிட்டு பேசி சேந்து இருக்க முயற்சி பண்ணனும். இல்லைன்னா, சந்தோஷமா பிரிஞ்சுடணும். ரெண்டையும் விட்டுட்டு, அடுத்த முடிவெடுக்கிறதுதான் கொடுமை!

       பவுனு பவுனுதான் படத்தில், ரோகிணியை,பாக்யராஜ் கல்யாணம் செஞ்சுக்க நேரம் எல்லாம் குறிச்சு வச்சு,வாசல்லயே பந்தல் போட்டிருப்பார். அப்ப அவர்கூட இருக்கும் பொடிப்பசங்கள்ல ஒருத்தன் கேப்பான். பவுனு 9 மணிக்கு வரலைன்னா...ஊர்க்காரங்க அடிப்பாங்களே என்ன பண்றதுன்னு..அப்ப பாக்யராஜ் ஒரு வசனம் சொல்லுவார்....எப்ப பவுனு சொன்ன டயத்துக்கு வரலையோ அப்பவே நான் செத்துட்டமாதிரிதான். அப்புறம் செத்த நாயை எத்தன நாய் அடிச்சா என்ன?

       இதுதான் கரெக்ட்... எப்ப அவளோ, அவனோ நம்ம கூட இருக்கறதில் நம்பிக்கையில்லா தீர்மானம் மனசுக்குள்ள கொண்டுவந்துட்டாங்களோ, அப்புறம் பழத்தை அடிச்சு கனியவைக்கிறது கடுமையான வீண்வேலை..! இதில் கற்புக்கெல்லாம் இடமில்லை. ஏன்னா முன்னாடியே தெளிவா சொல்லிட்டான். "கற்பு ஒன்றிருக்குதோ?" ன்னு!
இந்த விஷயத்தில், துரோகம்ங்கிற வார்த்தையை தப்பாத்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கு ஆண்டாண்டுகாலமா காமத்தை துரோக அளவுகோலா வச்சிருக்கிற நம்ம மனித சமூகம்.!

         அவளுக்கோ அவனுக்கோ அப்படி ஒரு நிலைமை வந்தா....'ரொம்ப சந்தோஷம்.. நேத்திக்கு வரைக்கும் என்கூட அன்பா இருந்ததுக்கு நன்றி' ன்னு சொல்லிட்டு, மறுபடியும் பொட்டிதட்ட புறப்பட்டாத்தான், நமக்கு இந்த ஆண், பெண் உறவுமுறையும்,சேந்து வாழும் வாழ்க்கை (திருமணமும் சேத்துதான்) பத்தின தெளிவு ஏற்படும்.

         இல்லைன்னா, கொலை, தற்கொலை எல்லாம் செய்தித்தாளை,தினமும் நூறு பக்கம் அச்சடிக்கவேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணி நிரப்பிடும்.

ஏன் இந்த தற்கொலை முயற்சிகள்?

படிச்சு டயர்டா இருப்பீங்க...அடுத்த பதிவுல பாக்கலாமே?

Comments

  1. /
    வாழ்ந்து என்ன
    செய்யப்போகிறோம்
    செத்துதான்
    தொலைப்போமே!
    செத்து என்ன
    செய்யப்போகிறோம்
    வாழ்ந்துதான்
    தொலைப்போமே!
    /
    அதானே

    ReplyDelete
  2. /
    .முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை !
    /
    Compromising????

    இல்ல மோகம் 30 நாளா??

    ReplyDelete
  3. /

    அதுவே சந்தேகமா மாறும். சில சமயம் அது உண்மையாவும் இருக்கும்.
    /

    ஏனய்யா இந்த கொழப்பு கொழப்பறீர்

    ReplyDelete
  4. /
    அவள்.....
    அவனிடம் ஏதோ பிடித்துத்தான் அவனோடு இருக்க தொடங்குகிறாள்..!
    அவனிடம் ஏதோ பிடிக்காமல்தான் வேறொருவரோடு இருக்க தொடங்குகிறாள்...!
    /

    அப்ப ஓகேவா??

    ReplyDelete
  5. /
    அவளுக்கோ அவனுக்கோ அப்படி ஒரு நிலைமை வந்தா....'ரொம்ப சந்தோஷம்.. நேத்திக்கு வரைக்கும் என்கூட அன்பா இருந்ததுக்கு நன்றி' ன்னு சொல்லிட்டு, மறுபடியும் பொட்டிதட்ட புறப்பட்டாத்தான், நமக்கு இந்த ஆண், பெண் உறவுமுறையும்,சேந்து வாழும் வாழ்க்கை (திருமணமும் சேத்துதான்) பத்தின தெளிவு ஏற்படும்.
    /

    இ.பி.கோ-வை மாத்துங்கடான்னா கேக்குறானுகளா?????????

    ReplyDelete
  6. /
    ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்! ஒண்ணு, மனசுவிட்டு பேசி சேந்து இருக்க முயற்சி பண்ணனும். இல்லைன்னா, சந்தோஷமா பிரிஞ்சுடணும்.
    /

    ரொம்ப ஈஸியா பிரிஞ்சிடணும்னு சொல்லிட்ட சுரேகா.

    நம்ம நடிகர் ப்ரஷாந்த் கேஸ் எடுத்துக்க அவன் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது நிரூபிக்கபட்டும் இன்றுவரை கோர்ட் கேஸ் என்ற அளவிலேயே இருக்கு டைவர்ஸ் ஆகவில்லை :(

    பெரும்பணம் படைத்தவர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மனிதர்களிக்கு??

    இ.பி.கோவை மாத்துங்கடான்னா கேக்குறானுவளா????

    :((

    ReplyDelete
  7. வாழ்வோ சாவோ நெருடல்களின்றி இருக்கட்டும். நல்ல பதிவு.

    ReplyDelete
  8. மங்களூர் சிவா said...

    //மீ தி பர்ஸ்ட்டு/

    வாங்கப்பூ...உங்களுக்குத்தானே விருந்தே.! :)

    ReplyDelete
  9. ///மங்களூர் சிவா said...
    இ.பி.கோ-வை மாத்துங்கடான்னா கேக்குறானுகளா?????????///



    கோ.பி.இ சிவா மாம்ஸ் மாத்திட்டேன் ஓக்கேவா?

    ReplyDelete
  10. ரொம்ப கொழப்பாதீங்க. முடிஞ்சா சேர்ந்து இருங்க. இல்லாட்டி பிரிஞ்சி போங்க. அதவிட்டுட்டு ஏன் இந்த கொலவெறி?

    ReplyDelete
  11. ///வாழ்ந்து என்ன
    செய்யப்போகிறோம்
    செத்துதான்
    தொலைப்போமே!
    செத்து என்ன
    செய்யப்போகிறோம்
    வாழ்ந்துதான்
    தொலைப்போமே!////


    இது நல்லா இருக்கு.

    ReplyDelete
  12. ///(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! )///


    போன பதிவு மூதாதையர் (புனைவு)பதிவு. இந்த பதிவுலையும் மூதாதையர் பற்றி வருது. பாசக்காரங்களா இருக்கீங்களே?

    ReplyDelete
  13. /
    நிஜமா நல்லவன் said...

    ///மங்களூர் சிவா said...
    இ.பி.கோ-வை மாத்துங்கடான்னா கேக்குறானுகளா?????????///



    கோ.பி.இ சிவா மாம்ஸ் மாத்திட்டேன் ஓக்கேவா?
    /

    இ.பி.கோ-வை மாத்த வேண்டியவங்கதான் மாத்தனும் :)

    இ.பி.கோ-வை நீ மாத்தனதுமட்டும் தெரிஞ்சது உள்ள ஜட்டியோட உக்காரவெச்சி உன்னைய மாத்திருவாங்க எப்பிடி வசதி?????

    :)))))))))

    ReplyDelete
  14. ///'குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது!' ///


    குணம் மட்டுமன்று எதையும் எதிர்பார்க்காது வருவதே அன்பு(நீங்க என்னோட ப்ளாக்குக்கு வருவீங்கன்னு நெனச்சா நான் இங்க வந்தேன்?:))

    ReplyDelete
  15. ///மங்களூர் சிவா said...
    இ.பி.கோ-வை நீ மாத்தனதுமட்டும் தெரிஞ்சது உள்ள ஜட்டியோட உக்காரவெச்சி உன்னைய மாத்திருவாங்க எப்பிடி வசதி?????

    :)))))))))///


    தப்பு செஞ்சவனோட அத செய்ய தூண்டினவனுக்குதான் தண்டனை அதிகம். உன்னோட நெலமை என்னோட மோசம் தெரியும்ல?

    ReplyDelete
  16. ///ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்! ////


    வளர்ந்த குழந்தை நல்லா இருக்கே இந்த டயலாக்.

    ReplyDelete
  17. ///ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்!///


    வளர்ந்த குழந்தை நல்லா இருக்கே இந்த டயலாக்.

    ReplyDelete
  18. ///ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்!///


    வளர்ந்த குழந்தை நல்லா இருக்கே இந்த டயலாக்.

    ReplyDelete
  19. மங்களூர் சிவா said...
    //
    நம்ம நடிகர் ப்ரஷாந்த் கேஸ் எடுத்துக்க அவன் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது நிரூபிக்கபட்டும் இன்றுவரை கோர்ட் கேஸ் என்ற அளவிலேயே இருக்கு டைவர்ஸ் ஆகவில்லை :(//

    ரெண்டு பேரில் ஒருத்தர் சேந்து வாழப்பிரியப்பட்டாலே..கேஸ் இழுக்கத்தானே செய்யும்.!?

    மேலும்..அவர் ஒண்ணும் அவுங்களை கொன்னுரலையே...? நம்ம டாப்பிக் அதானே? ஏன் கொன்னுட்டு தானும் சாகணும்?

    ReplyDelete
  20. மங்களூர் சிவா said...


    //இ.பி.கோ-வை நீ மாத்தனதுமட்டும் தெரிஞ்சது உள்ள ஜட்டியோட உக்காரவெச்சி உன்னைய மாத்திருவாங்க எப்பிடி வசதி?????//


    ஆஹா..ஆரம்பிச்சிட்டாங்கப்பா..!


    யாராவது என்னை காப்பாத்துங்கப்பு!

    ReplyDelete
  21. வாங்க நிஜமா நல்லவன்..
    உங்க அன்பில்தான்
    ஓடிக்கிட்டிருக்கு..!

    வாழ்த்துக்களுக்கும்
    விமர்சனத்துக்கும்
    நன்றிங்க!

    எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் போட்டுருவோம்
    இப்ப ரொம்ம்ம்ம்ப பசிக்குது!

    ReplyDelete
  22. அட இது எனக்கு 51 வது பதிவு...!

    ReplyDelete
  23. தம்பீ,

    பாகம் பாகமா எழுத வேண்டிய விசயத்தை இப்படி அசால்டா சொல்லிட்டு போறீயே, எப்படிடா அது?

    ரொம்பச் சரியா சொல்லியிருக்கே, அதாவது பிடிக்காத ஒருத்தரோட மல்லுக்கட்டி இருக்க நினைக்கிறதே ஒரு வித வன்முறைன்னு ரிலெஷன்ஷிப் பத்தியான ஒரு தியரி சொல்ல வருது.

    நம்மூர்ல இந்த விரட்டி விரட்டி காதல் பண்றதை எந்த வித காதல்லப்பா எடுத்துக்கிறது? பொதுவாவே புரிந்துணர்வு இல்லாம எப்படிப்பா காதலுணர்வு ஒரு உறவில் துளிர்க்குது? அந்த காதல் என்கிற உணர்வையே வெளிப்புர காரணிகளுக்காக (மாமியார், மாமனார், கொளுந்தனார், கொளுந்தி இத்தியாதி, இத்தியாதி...) முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டு இரண்டு தனித் தனி தீவுகள் ஒரே கூரையின் கீழ் உலாவி வரும் பொழுது அங்கே காதல் என்கிற உணர்வை எப்படி ருசிச்சி அறிஞ்சி மிச்சமிருக்கும் நாட்களை நல்லதொரு நண்பர்களாக கழிக்க முடியும்?

    இன்னும் பேசலாம் இரு வாரேன்...

    ReplyDelete
  24. ///சுரேகா.. said...
    அட இது எனக்கு 51 வது பதிவு...!///


    அப்ப 50வது பதிவுக்கு வாழ்த்துக்களை இங்கு சொல்லுறதா இல்ல அங்க போய் சொல்லுறதா?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. Thekkikattan|தெகா said...

    //தம்பீ,

    பாகம் பாகமா எழுத வேண்டிய விசயத்தை இப்படி அசால்டா சொல்லிட்டு போறீயே, எப்படிடா அது?//

    நன்றிங்க்ண்ணா..!எல்லாம் அண்ணங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்..ஹிஹி

    //ரொம்பச் சரியா சொல்லியிருக்கே, அதாவது பிடிக்காத ஒருத்தரோட மல்லுக்கட்டி இருக்க நினைக்கிறதே ஒரு வித வன்முறைன்னு ரிலெஷன்ஷிப் பத்தியான ஒரு தியரி சொல்ல வருது.//

    அதைத்தான் நானும் சொன்னேன்.
    சைக்காலஜில வந்திருக்கு!
    (சும்மா கெடக்காம, M.A. சைக்காலஜியும் படிச்சோம்ல)

    ReplyDelete
  26. ///(சும்மா கெடக்காம, M.A. சைக்காலஜியும் படிச்சோம்ல)//

    தெளிந்தது சந்தேகம். வாழ்க.வளர்க:)

    ReplyDelete
  27. பின்றீங்களே..முடியலை..காலையில வந்து மிச்சத்த பாத்துக்குறேன்.

    ReplyDelete
  28. வீக்கெண்டுகாரருக்கு போட்ட அதே பின்னூட்டம்தான் இங்கேயும் :)

    'வருத்தமான செய்தி :(

    கொலை, தற்கொலை- எதுக்கும் முடிவில்லை!

    ஒருத்தொருக்கு ஒருத்தர் மனம் விட்டு பேசிகிட்டாலே பாதி பிரச்சினை காலியாயிடும். ஒருத்தர ஒருத்தர் பிடிக்கலேன்னா, விலகுறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. குளத்துல எவ்வளவோ மீன் :)

    எந்திரமய இக்காலத்துல, ஒரே வீட்டுக்குள்ளேயே sms ல பேசிக்கிற இந்தக் காலத்துல, இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.'

    ReplyDelete
  29. தஞ்சாவூரான் said...


    //ஒருத்தொருக்கு ஒருத்தர் மனம் விட்டு பேசிகிட்டாலே பாதி பிரச்சினை காலியாயிடும். ஒருத்தர ஒருத்தர் பிடிக்கலேன்னா, விலகுறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. குளத்துல எவ்வளவோ மீன் :)

    எந்திரமய இக்காலத்துல, ஒரே வீட்டுக்குள்ளேயே sms ல பேசிக்கிற இந்தக் காலத்துல, இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.'//

    வாங்க..!

    அதைத்தான் கொஞ்சம்.-கொஞ்சமா? அடப்பாவின்னெல்லாம் சொல்ல்ப்புடாது! :) -
    சுத்தி வளைச்சு சொல்லியிருக்கேன்.

    அவ்ளவுதேன்.

    ReplyDelete
  30. //அதைத்தான் கொஞ்சம்.-கொஞ்சமா? அடப்பாவின்னெல்லாம் சொல்ல்ப்புடாது! :) -
    சுத்தி வளைச்சு சொல்லியிருக்கேன்.//

    அய்... நான் பதிவப் படிக்காம பின்னூட்டுனது எவ்வளவு நல்லதாப் போச்சு? :)))

    ReplyDelete
  31. ///தஞ்சாவூரான் said...
    குளத்துல எவ்வளவோ மீன்///

    அண்ணே நெத்தியடி யா சொல்லிட்டீக.

    ReplyDelete
  32. VIBIN Said..


    //neenga solli iruppathu 100% OK. but we have to adopt it... gentle aaka irukka katthukitta naagarigam... foreign culture silathu nijamagavae nantaga irukkuthu... but naam vendathathai thaan follow pantrom.. naagareegam enpathu enna enpathai naam innum sarivarai purinthu kollavillaiyo.
    very good one...//


    வாங்க..
    நன்றிங்க..!

    ReplyDelete
  33. நிஜமா நல்லவன் said...

    //போன பதிவு மூதாதையர் (புனைவு)பதிவு. இந்த பதிவுலையும் மூதாதையர் பற்றி வருது. பாசக்காரங்களா இருக்கீங்களே?//

    அட..ஆமா!
    கண்டுபிடிச்சிட்டீங்களே!

    ReplyDelete
  34. //குணத்தைப் பார்க்கத் துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது//

    உண்மை..ஆனால் இந்த விஷயத்தில் ஒழுக்கம் பார்க்க வேண்டிய, சுயமாய்ப் பேண வேண்டிய கட்டாயம் இருந்திருக்க வேண்டும்..

    //அவளது சமூக அந்தஸ்து.! -இன்னும் நம்ம மூதாதையர் ஜீன்லேருந்து நமக்கு போகாத மேட்டர்//

    இதனால்தான் இன்னும் நம் நாட்டில் திருமண பந்தங்கள் முறியாமல் வாழ்கின்றன..

    பேசித் தீர்த்திருக்க வேண்டிய விஷயம்..கொலை/ தற்கொலை வரை போனது பரிதாபம்..

    ReplyDelete
  35. ஆழமான மன எண்ணங்களை விவரித்திருக்கும் சிந்தனைப்பூர்வமான பதிவு. விவாதிக்கப்பட வேண்டிய பல்வேறு விசயங்களை தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். பெருங்கும்மியில் பதிவின் ஆழம் கரைந்துவிட்டது போலவே தோன்றூகிறது

    ReplyDelete
  36. பாச மலர் said...


    //உண்மை..ஆனால் இந்த விஷயத்தில் ஒழுக்கம் பார்க்க வேண்டிய, சுயமாய்ப் பேண வேண்டிய கட்டாயம் இருந்திருக்க வேண்டும்..//

    வாங்க பாசமலர்..நலமா?

    அது இல்லாமத்தானே இத்தனை குழப்பங்களும்..

    //இதனால்தான் இன்னும் நம் நாட்டில் திருமண பந்தங்கள் முறியாமல் வாழ்கின்றன..//

    ஆமா..கண்டிப்பா.

    //பேசித் தீர்த்திருக்க வேண்டிய விஷயம்.////

    நம்ம ஆளுங்களுக்குத்தான்
    தீத்துட்டு பேசுற மனோபாவம் இருக்கே!

    ReplyDelete
  37. முத்துகுமரன் said...

    //ஆழமான மன எண்ணங்களை விவரித்திருக்கும் சிந்தனைப்பூர்வமான பதிவு. விவாதிக்கப்பட வேண்டிய பல்வேறு விசயங்களை தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.//

    வாங்க ! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

    ///பெருங்கும்மியில் பதிவின் ஆழம் கரைந்துவிட்டது போலவே தோன்றூகிறது//

    :)

    எல்லாம் நல்லா,அக்குவேற ஆணிவேராத்தானே அலசியிருக்காங்க!
    கும்மியா நினைக்காதீங்க!
    ப்ளீஸ்......
    எல்லாம் நம்ம புள்ளைங்க!

    ReplyDelete
  38. அவனிடம் ஏதோ பிடிக்காமல்தான் வேறொருவரோடு இருக்க தொடங்குகிறாள்...!

    ippadiea pona namma kalacharam ennavarudhungo.maximum vittukoduthu vazha pazhagikanum.
    "THANI MANIDHA OZHUKKAM" patriya arivu ovvoruvarukkum irukkanum.

    naam seyyum seyal "Thanakko ,pirarko, ikkalathilo,future-lo thunbam tharathavaiyaha irukkavendum".

    indha thelivum,anbum irundhale vazhkai yelidhahividum.

    nalla topic.
    Nanrihalidun
    subbu.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!