என்னப்பா இது அநியாயம்?


நாம பாட்டுக்கும் யாருக்கும் தொந்தரவு தராம ஏதோ மனசுல தோணினதை நம்ம புள்ளைங்களுக்குள்ள பொலம்பிக்கிட்டு , சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கோம். அது எந்த மவராசனுக்கோ பிடிக்காம போச்சுபோல! நம்ம புள்ளைங்க வலைப்பூவெல்லாம் சுடுறாய்ங்களாம்..! நம்ம அப்துல்லா, அவர்பாட்டுக்கும் சந்தோசமா எழுதிக்கிட்டிருந்தார். அவர் வலைப்பூ காணாம போயிருக்கு!
என்னப்பா இது அநியாயம்?

வூடு பூந்து கொள்ளை அடிக்கும் இப்படிப்பட்ட செயல்களை எந்தவகைத்தீவிரவாதத்தில் சேர்ப்பது?

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ! 

இனி இப்படி நடக்காம இருக்க, எல்லா வல்லுநர்களும் நிறைய வழிமுறைகள் சொல்லிக்குடுங்க!

அதன் முதல் படியை நட்புடன் ஜமால் ஆரம்பிச்சு வச்சிருக்கார்!

இன்னும் எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும் நம்ம மக்களுக்கு பயனுள்ளதா பின்னூட்டலாம். அல்லது பதிவாவே போடலாம்..!

Comments

  1. ரொம்ப மோசமான விஷயம். ஒருவழியா அவர் பழய மின்னஞ்சல் முகவரியை நானும் இன்னொரு முகவரியை கார்க்கியும் மீட்டுக் கொடுத்தோம். விரைவில் பதிவும் மீட்க்கப் படும். களவானி பய கண்டுபிடிக்கப் பட்டதும் ஆப்பு அழகாய் வைய்க்கப் படும்.

    ReplyDelete
  2. கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கு....
    சம்ம்ம் சரி சஞ்சய்,கார்க்கி எல்லாம் உதவுவாங்கன்னு கொஞ்சம் நம்பிக்கையாவும் இருக்கு.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  3. கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கு....
    சம்ம்ம் சரி சஞ்சய்,கார்க்கி எல்லாம் உதவுவாங்கன்னு கொஞ்சம் நம்பிக்கையாவும் இருக்கு.
    //

    நானும் ஆவலுடன் காத்திருக்கேன்.

    ReplyDelete
  4. //நானும் ஆவலுடன் காத்திருக்கேன். //

    எதுக்கு? யாராவது உங்க ஐடியை ஹெக் பண்றதுக்கா? :))

    ReplyDelete
  5. //நானும் ஆவலுடன் காத்திருக்கேன். //

    எதுக்கு? யாராவது உங்க ஐடியை ஹெக் பண்றதுக்கா? //

    என்ன ஒரு நல்லெண்ணம்.

    ReplyDelete
  6. சாச்சுபுட்டாய்ங்க அண்ணே...சாச்சுபுட்டாய்ங்க :)

    //வூடு பூந்து கொள்ளை அடிக்கும் இப்படிப்பட்ட செயல்களை எந்தவகைத்தீவிரவாதத்தில் சேர்ப்பது?
    //

    இதவிட அழகா யாரும் சொல்ல முடியாதுண்ணே.

    ReplyDelete
  7. நன்றி சுரேகா எனது சுட்டியை தங்கள் பதிவில் சேர்த்தற்கு

    ReplyDelete
  8. மிகப்பெரிய உதவியை கமுக்கமா செஞ்சிருக்கீங்க!
    அப்துல்லா சார்பா என் நன்றிகள் சஞ்சய்..!

    ReplyDelete
  9. வாங்க அன்புடன் அருணா..!

    ஆமா..கார்க்கிக்கும் நமது நன்றிகள்!

    ReplyDelete
  10. வாங்க புதுகைத்தென்றல்..

    ஆமா எதுக்கு ஆவலா காத்திருக்கீங்க!??

    :)

    ஹாக்குக்கா...?
    அதற்கான தீர்வுக்கா?

    ReplyDelete
  11. //எம்.எம்.அப்துல்லா said...

    சாச்சுபுட்டாய்ங்க அண்ணே...சாச்சுபுட்டாய்ங்க :)//

    அதான்..சிங்கத்துக்கு ஒரு சோதனையான்னுதான் மனசு கேக்கலை!

    வற்றாத ஜீவநதியெல்லாம்..................

    :)

    நீங்க அதுலேருந்து மீண்டிருக்கலாம்.
    ஆனா என்னால இன்னும் முழுசா மீளமுடியலை..!

    வாங்க வாழ்க்கையை போட்டுப்ப்பாத்துருவோம்..!
    :))

    ReplyDelete
  12. வாங்க நட்புடன் ஜமால்..!
    நீங்க சரியான நேரத்துல சொல்லியிருந்தீங்க அதான்...!

    ReplyDelete
  13. //விரைவில் பதிவும் மீட்க்கப் படும்.//

    அது எப்படி செய்வதுன்னு ஒரு பதிவும் போட்டுடுங்க சஞ்சய்..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!