அஜினோமோட்டோ எனும் அரக்கன்

அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.

இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள்! இது ஒரு நச்சு உணவு! இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம். மேலும் ஹோட்டல்களுக்கு உணவு உண்ணச்செல்லும்போது, அஜினோமோட்டோ கலக்காமல் நூடுல்ஸ் கேட்டு வாங்கி உடல் நலத்தைப்பேணுங்கள் !
அஜினோமோட்டோ எனும் அரக்கனைப்புறக்கணித்து, பணம்
செலவழித்து வியாதி வாங்குவதை தவிர்ப்போம்.

Comments

  1. தவிர்ப்பது தான் எப்படி என்று இன்னும் விளங்கயில்லை!

    போடாதே என்று சொன்னாலும் கேட்ப்பவர்கள் மிக(க்)குறைவே!

    ReplyDelete
  2. அச்சச்சோ...அப்பிடியா???கவனிக்கணுமே!

    ReplyDelete
  3. சுறேகார் நல்லத தகவல், இதைப் பற்றிய தகவல்கள் நிறைய வந்தும், இந்தப் பொருள் இன்னும் உபயோகப்படுத்திக் கொண்டிருப்பது கொடுமை.

    ReplyDelete
  4. ஓட்டலில் திருப்தியாக சாப்பிட்ட பிறகும் வீட்டில் திருப்தியாக சாப்பிட்ட பிறகும் இருக்கும் பெரிய வேறுபாடாக நான் உணர்வது தண்ணீர் வேட்கை, வீட்டில் சாப்பிட்டால் தண்ணீர் வேட்கை வராது. ஓட்டல் சாப்பாட்டிற்கு பிறகு வரும். காரணம் இந்த அஜி(ர்)னோ மோட்டாதான்.

    நல்ல எச்சரிக்கை இடுகை

    ReplyDelete
  5. வாங்க ஜமால்!

    போடாதீங்கன்னு கட்டாயப்படுத்தினா போடமாட்டாங்க!

    இல்லைன்னா ஆர்டரைக் கேன்ஸல் பண்ணிக் காட்டணும்!

    ReplyDelete
  6. வாங்க அருணா !

    ஆமாங்க ..கண்டிப்பா கவனிங்க!

    ReplyDelete
  7. அலார்ம் அடிச்சதுக்கு நன்றி தலைவரே,

    என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.

    :))))))))

    ReplyDelete
  8. /
    புதுகைத் தென்றல் said...

    அலார்ம் அடிச்சதுக்கு நன்றி தலைவரே,

    என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.

    :))))))))
    /

    repeatey

    ReplyDelete
  9. ஆமாங்க.. உண்மைதான்

    ReplyDelete
  10. Please for God sake don't spread rumors...

    Check the Internet before you write...

    http://en.wikipedia.org/wiki/Monosodium_glutamate

    http://en.wikipedia.org/wiki/Glutamic_acid_%28flavor%29#Research_into_health_effects

    According to US FDA, MSG is not toxic as believed. Infact, in Japan, Ajinomoto replaces salt in many cases, and Japanese still live longer than many other nationals.

    Infact, taking MSG in place of salt helps in preventing the "high BP" associated with salt intake.

    Japanese ethu pannalum America karan, thappa than solvan... Americans die when they are 70. Japanese die when they are 100.

    Now you decide it...

    ReplyDelete
  11. Sir,

    There are so many things not true in your poster as the Mugunthkumar mentioned. Ajinomoto is the trademark name for MSG. Both are same. Asparatic acid is a a natural amino acid (building block of proteins) and not a toxin. MSG is a pure chemical no methanol is there in the product. Originally isolated from sea weed, but now chemically synthesized. The addition of MSG to food increases taste and US FDA has concluded no ill effect due to MSG. I am not suggesting you should use MSG in your food, it is your choice. Please correct your blog and provide correct information. Don't leave it as it is. You are doing a disservice to all the people who read your blog. With regards.

    Mona

    ReplyDelete
  12. அஜினோமோட்டோ அப்படி ஒன்றும் கெடுதல் இல்லை என்று கூறியிருக்கும் முகுந்த்குமாருக்கும், அனானி நண்பருக்கும் வணக்கம்!

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    நீண்ட நாள் தேடுதலுக்கும், மருத்துவர்களின் ஆலோசனைக்கும் பிறகுதான் இந்தப்பதிவையே போட்டேன்.
    மேலும் ஒரு பொறுப்புள்ள நுகர்வோர் அமைப்பில் இருப்பதாலும் தவறான தகவல் கொடுத்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான் எழுதினேன்.

    நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளை மட்டும்தான் படித்தீர்களா? அல்லது இணையம் முழுதும் தேடினீர்களா என்று தெரியவில்லை.

    உங்களுக்காக சில நிரல்கள்

    http://www.opposingdigits.com/forums/viewtopic.php?t=1594

    http://www.rense.com/general67/msg.htm

    http://www.truthinlabeling.org/

    இவற்றையும் படியுங்கள்.
    நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்காக கூறுவதை நம்பாதீர்கள்.
    மேலும் MSG மட்டுமே அஜினோமோட்டோவில் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

    ஒரு நல்ல உணவை எந்த ஒரு வியாபார நோக்கமும் இன்றி ஏன் விஞ்ஞானிகளும் , மருத்துவர்களும் எதிர்க்கிறார்கள் என்று யோசியுங்கள்.

    சமீபமாக..திரு.பிரபுதேவா அவர்களின் மகனது மரணத்திற்குக்காரணம் இந்த அஜினோமோட்டாவாக இருக்கலாம் என்ற செய்தியையும் நினைவில் கொள்ளுங்கள்!

    தங்கள் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  13. http://www.truthinlabeling.org/Proof_BrainLesions_CNS.html

    இது விட்டுப்போச்சு!

    ReplyDelete
  14. வாங்க கோவி அண்ணே!

    வாங்க புதுகைத்தென்றல்!
    நலம்தானே!

    வாப்பா மங்களூரான்!

    ReplyDelete
  15. வாங்க கும்மாச்சி!

    வாங்க கார்க்கி!

    ReplyDelete
  16. Internet la positive avum potrupan, negative avum potrupan...
    திருவள்ளுவர் சொன்னது போல்...
    மெய்பொருள் காண்பது அறிவு...
    நீங்கள் சொன்ன links vida, http://vm.cfsan.fda.gov/~lrd/msg.html
    US Food and Drug Administration website authentic போல தோன்றுகிறது....

    ReplyDelete
  17. Useful post but I doubt the authenticity of the information provided.

    ReplyDelete
  18. ம்ம்ம் பலப்பல தகவல்கள் - எது சரி எது தவறு என எளிதில் கண்டு பிடிக்க முடியாது - தெரிந்தோ தெரியாமலோ - சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான். பெரிய எதிர்ப்பு / விழிப்புணர்வு வரும் வரை

    நன்றி தகவல்கள் பகிர்ந்தமைக்கு சுரேகா

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  19. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!