நாஞ்சில் நெஞ்சம்

நாஞ்சில் நாடனின் எழுத்தைப் போலவே கொஞ்சம் இதமாகவும், இயல்பாகவும் வரவேற்றது நாகர்கோவில்..

அது அதிகாலை ஐந்து மணி.

சாதாரணமாக ஏற்படும் வாய் வழுவலையும்..அதிகாலை தாகத்தையும் பின்னுக்குத்தள்ளி இதமான காற்றும் தூரலும்... கொஞ்சம் ரசனைக்கு முன்னிலை கொடுத்தது. சாலைகளின் வளைவுகளும், போக்குவரத்தின்மையும், மலை போல் மேடாகவும்...கீழ் நோக்கியும் செல்லும் பாதைகளும் ரசிக்க வைத்தன. இதற்கு முன்னால் நாஞ்சில் நாட்டிற்கு வந்தபோதெல்லாம்..அனேகமாக பகல் நேரங்களாகவே இருந்தன. மேலும் தங்கியதெல்லாம், கன்னியாகுமரியாக இருக்கும்.

எப்போது வெளியூர் சென்றாலும்..எனக்குக் கொஞ்சம் திமிர் அதிகம்.. எல்லா ஊரிலும் எனக்காக ஒரு விடுதியின் அறை காத்திருக்கும் என்ற மதர்ப்பில் மண்ணள்ளிப் போட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனோகரனின் மண்.

முதலில் பேருந்து நிலையத்திலிருந்து தேடல் தொடங்கியது. செல்ல வேண்டிய இடமான காவல்துறை உயர் அலுவலகம் வரை எங்கெங்கிலும் எனக்காகவே ' அறை இல்லை' என்ற சொல்லை அழகாக, வெவ்வேறு முறைகளில் சொன்னார்கள்.

கொஞ்சம் குளிர்சாதனம்... ஒரு நல்ல தொலைக்காட்சி... அதைவிட மூட்டைப்பூச்சிகளின் மாநாட்டு மேடையாய் இல்லாத கட்டிலை கனவுகண்டுகொண்டு சென்ற நான் ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வரும்போது மணி 6:40.

அதேபோல், எந்தவசதிகளுக்கும் வசதியில்லாத ஒரு அழகான அறை கிடைத்தது.
அதுவும், நான் நினைத்ததை ஐந்து மடங்கு குறைவான வாடகையில்..! 'அவ்வளவுதானா..அவ்வளவுதானா ' என்று இருமுறை விடுதியாளரிடம் கேட்டுவிட்டேன்.

விடிய விடிய அறை தேடியதில்..தூக்கம் என்னைக்கெஞ்ச. நான் அதனிடம் கடமைகள் பற்றி கெஞ்ச...போராட்டத்தில் நம்பிக்கையில்லாத கால்கள் தானாகப்போய் கட்டிலில் ஏறி தன் ஆதரவை தூக்கத்திற்கு அளித்தது. தூக்கம் வெற்றிக்களிப்புடன் தன் வேலையைச்செய்தது.

காலையில் கிளம்பும்போது 9 மணி ஆகிவிட்டிருந்தது. காலை உணவுக்கு தேடல் ஆரம்பம்.. சம்பந்தமே இல்லாமல் காட்டு விலங்குகளின் இரைதேடும் சிரமங்கள் நினைவுக்கு வந்தது. எவ்வளவு தேடித்தேடி வேட்டையாடி அன்றைய உணவை முடிக்கின்றன! ! அதேபோல் காட்சிசாலை விலங்குகளும் நினைவைத் தடவிச்சென்றன! அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம்.? நாம் கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்துடனும்., அடுத்த சந்ததிக்கான சொத்துக்களுடனும், ருசியான உணவு எங்கு கிடைக்கும் என்ற வினாக்களுடனும் நாகர்கோவிலின் தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஒரு பழமையான சைவ விடுதியில் நுழைந்தேன்.

இப்போதெல்லாம் பெண்கள் வேலைக்கு நுழையாத துறையே இல்லை எனலாம். அதில் சில ஆச்சர்யங்களும் , அசௌகரியங்களும் இருக்கவே செய்கின்றன. பெட்ரோல் போடும் இடங்களில் உள்ள பெண்கள் தங்கள் கடமையை மிகச்சரியாக ஆற்றினாலும், வேறு சில இடங்களில் பெண்களிடம் , பொருள் பெயர் சொல்லி கேட்க முடியாமல் ஆண்கள் தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் வீட்டில் ஒரு ஆண் உணவு பரிமாறுவதைவிட பெண்கள் பரிமாறுவதில்..பரிவும் கலந்திருப்பதாகவே தோன்றும். ஏனெனில் ஆண்கள் போதும் என்றால் உடனே நிறுத்திவிடுவார்கள். அதுதான் சரியானதும்கூட....! இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க )! 'என்று பெண்கள் ஒரு கவளம் அதிகம் வைக்கும்போது பரிமாறுதலின் வாஞ்சை தானாகவே தட்டில் வந்து விழுந்துவிடும். அதனால்தானோ என்னவோ அந்த உணவு விடுதியிலும் பெண்கள் சிலரையும் பரிமாறுபவர்களாக வைத்திருந்தார்கள். ஆனால் உணவு விடுதியில் அதிகமாக ஒரு கவளம் விழாவிட்டாலும் , ஆண்களைவிட ஒரு படி மேல்தான் கவனிப்பு இருக்கும் என்ற கணிப்பு எனக்கு!

வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு , நல்ல முக அலங்காரத்துடன்..ஒருவர் வந்து என் அருகில் நின்றார்...சாருக்கு என்னவேணும்?'

இட்லி!

வடையும் வைக்கச்சொல்லவா?

ம்..வைங்களேன்..!

வேணி..! 6ம் நம்பருக்கு 2 இட்லியும் வடையும்..சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..

இவ்வாறாக எனக்கான காலை உணவை நான கேட்டுவிட்டுக் காத்திருந்தபோதுதான் எனக்கான அந்த அதீத அதிர்ச்சியும் காத்திருந்தது.

(தொடரும்..)

Comments

  1. there r good lodges r there in nanjil like deepa, anjali, gowribavan etc

    ReplyDelete
  2. படிக்க படிக்க வழுக்கிட்டு போவுதப்பூ... இங்கும் "த்ரில்" வைசிச்சிட்டீயா :-)). ட்டி.வி தொடருக்கு ஏதும் முயற்சி செய்றீயோ...

    ReplyDelete
  3. அருமையா இருந்துது உங்க கதை.....!! கதையின் முக்கியமான பகுதி அடுத்த தொடரிலா.....??

    தொடர வாழ்த்துக்கள்....!!!!

    ReplyDelete
  4. தொடரும் போட சரியான இட்ம கிடைக்கலியா அப்பூ? சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க.,.

    ம்க்கும்.. அடுத்த மாசம்தான்னு நினைக்கிரேன்..

    ReplyDelete
  5. வாங்க குப்பன் யாஹூ....!

    அடடே..அப்படியா?

    இது கதைதான்!

    ReplyDelete
  6. //Thekkikattan|தெகா said...

    படிக்க படிக்க வழுக்கிட்டு போவுதப்பூ...//
    அண்ணாத்த நீங்களே சொன்னதுக்கப்புறம்..

    எனக்கு அப்படியே மிதக்குறமாதிரி இருக்கு!

    இதோ அடுத்த பாகம் வெகு விரைவில்..!

    :)

    ReplyDelete
  7. வாங்க லவ்டேல் மேடி..!

    ஊட்டி பக்கம் இருக்கே லவ்டேல் அந்த ஊரா?

    ஆமா..அடுத்த பாகத்தில்தான்..!

    நன்றிங்க!

    ReplyDelete
  8. இயற்கையின் வரவுக்கு நன்றி!

    வாழ்த்துக்கும் ஸ்மைலிக்கும் சிறப்பு நன்றி!

    ReplyDelete
  9. அடப்பாவி!

    நாளைக்கே அடுத்த பாகம் போட்டுர்றேன்ப்பா..

    பதிவு பெரிசா இருந்தா, தாண்டிப்போயிருவாங்கன்னுட்டுதான்..!

    உங்களுக்காகவே நாளைக்குப்போட்டுர்றேன்.

    ReplyDelete
  10. // சுரேகா.. said...

    வாங்க லவ்டேல் மேடி..!

    ஊட்டி பக்கம் இருக்கே லவ்டேல் அந்த ஊரா? //



    இந்த லிங்க்'எ க்ளிக் பண்ணுங்க .... லவ்டேல் மேடி க்கு விளக்கம் தெருஞ்சுக்குங்க...!!




    http://madydreamz.blogspot.com/2009/04/blog-post.html

    ReplyDelete
  11. உங்க பயண அனுபவத்தை, அழகா எழுதியிருக்கீங்க.

    எளிமையான, இயல்பான எழுத்து நடை.

    ReplyDelete
  12. பயண அனுபவம் அழகா சொல்லியிருக்கீங்க.

    அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  13. பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல உடுபி ஹோட்டல் இருக்கு அதுல எடம் கிடைக்கலியா?

    ReplyDelete
  14. லேட்டா வந்துட்டேன் ரெண்டாம் பாகத்துக்கு போறேன்.

    இட்லியும் வடையும் வந்ததா??

    மெகா சீரியல் கணக்கா இருக்கேங்ணா!
    :))

    ReplyDelete
  15. அடடே ட்ரிப் நம்ம ஊருக்கா ரைட் ரைட்....
    பல நல்ல லாட்ஜ்கள் இருக்குங்க... பஸ் ஸ்டான்ட் அருகில் பார்க்காமல் கொஞ்சம் உள்ளே பார்க்கவேண்டும்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!