என்ன செய்யலாம்?
லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..
கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.
பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்
கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.
இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.
நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.
1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது!
2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)
3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.
4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )
5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)
6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.
7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.
8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.
9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )
10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.
இவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.
இது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்!
எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
அருமை அண்ணாத்த!
ReplyDeleteஅன்பின் சுரேகா
ReplyDeleteதிட்டங்கள் அருமை - செயல் படுத்த வேண்டும் - இயலும் - பதிவர்கள் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டுச் செயல் பட்டால் - நிச்சயம் இயலும்.
நல்வாழ்த்துகள் சுரேகா
9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )
ReplyDelete//
ஏதோ ஒன் மேன் ஆர்மிபோல் என் தளத்தில் கொஞ்சம் எழுதுகிறேன்..
குறைந்த பட்சம் ஒரு சூரிய ஒலி தயாரிப்பை வாங்குவது, சுதந்திர மென்பொருட்களைப் பயன்படுத்துவது என்பதையும் சேருங்களேன்!
ReplyDeleteநல்ல சிந்தனை.
நல்ல கருத்து.பூங்கொத்து!
ReplyDeleteநம்பிக்கை வைப்போம்.
ReplyDeleteநல்ல எண்ணம், அவசியம் ஒன்று கூடுவோம்.
------------------
முதலில் “நாம்” என ஒன்று பட வேண்டும், நானும் நிறைய நம்பிக்கை வச்சிருக்கேன் இன்னமும்
புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் வாழ்க வாழ்க.
ReplyDeleteதிட்டங்கள் அருமை. கண்டிப்பாய் ஒருங்கிணைந்து செய்வோம்.
திட்டங்கள் அருமை.
ReplyDeleteரொம்ப அருமையான விஷயங்கள் சுரேகா! ஒரு சண்டைன்னா கோஷ்டி சேர்ந்து கிட்டு அடிச்சிக்கும் பதிவர்கள் இது போல நல்ல காரியங்களுக்கு வந்தா நல்லா தான் இருக்கும். மேடி கல்யாணத்துக்கு போக இருந்த முக்கிய வாய்ப்பை ஒரு முக்கிய சொந்த காரங்க கல்யாணத்தால் நழுவ் விட்டு வ்ருத்தப்பட்டேன். ஆனால் இன்னிக்கு நாகை சிவா கல்யாணத்துக்கு போய் வந்துவிட்டேன். மிக்க சந்தோஷமாக இருந்தது மனது.
ReplyDeleteGood Thinking. Appreciate your braveness to talk openly about doing good to the society.
ReplyDeleteAs said by Abdul Kalam, People need to be job creators instead of job seekers. Your suggestions will make this happen.
About
2nd point, on every farm land people need to build a well and need to gather the rain water through pipes. Bloggers experience on this topic can send their ideas.
9th point, I thought of requesting somebody to start separate blog on counceling on all topics.
Note:
1. Volunteers need to be gathered each bloggers location. Explain them how to implement the ideas. Can get ideas from "Scouts and Guides ".
2. In villages some graduate male peoples energy, talent are getting wasted. Think about how these people can spend their energy and time positively.
3. To encourage this positive, good activity volunteers need to be recognized. Provided with good shelter, food. Need to understand there is no competition involved.
4. In the city Builders building so big Apartment/office/shopping complexes without or with little bit of plants. No natural air. This mentality needs to be changed. Try our best so this mentality won't go beyond current city developments. Group of residence with their children can buy or do garden(fruits, vegetables, flowers, trees) in a land already existing near by their home.
5. When outside of the home traveling if a person need to spit or throw garbage they need to carry a water proof paper bag along with them and use it for this purpose. And they can throw it nearby garbage basket or at home.
6. At homes/hotels etc., Garbage need to be collected in plastic bags and disposed when the garbage collector arrives. Time and date should be informed to the people when the garbage collector will arrive.
7. Get support and ideas from Thiru. Udayamurthy, Thiru. Lena Thamizhvanan, Thiru. Abdul kalam and etc organizations.
1. Survey on What kind of service people looking for?
ReplyDelete2. Volunteer Survey
Name
Address
1. What is your talent?
2. What kind of service you prefer?
Note: Teaching (English, Maths, Science, Music, Dance, Tailoring, Moral stories, Lectures on Good literatures, Famous People, Scientists, History, Geography, Technology, Games etc), Garderning, Cleaning, Cooking, Construction works, Donating Books, toys, clothes, money, Computers, web camera etc.
2. Are you open to do any kind of service?
3. What day/time you are available?
Note : If not they are invited for the service according to their availability.
Just they need to call the Location orgranizer if there is opening at that location.
நன்றி சிவா!
ReplyDeleteஎப்படி செயல்படுத்துறதுன்னு அடுத்த கட்டமா யோசிக்கணும். ரெடியா?
மிக்க நன்றி சீனா சார்!
ReplyDeleteஏதாவது உருப்படியா செய்வோமேன்னுதான்..நீங்களெல்லாம்
தூணா இருந்து கலக்கணும்.
வாங்க தேவன் மாயம்.
ReplyDeleteஅதான்..இப்ப நீங்க எழுதுறது எல்லாரையும் சென்றடையணும்.! அதுக்குத்தான் ஏதாவது செய்யணும்.
ஒரு குழு வலைப்பூவோ, அல்லது லிங்குகளோ...
வாங்க ஃபண்டூ
ReplyDeleteசூரிய ஒளி தயாரிப்பு...நல்ல யோசனை!
சுதந்திர மென்பொருள்...தனிப்பட்ட தேவைகள் மற்றும் பயன்பாடு ஆகியவற்றைப்பொறுத்ததுதானே..
மேலும் இங்க பெரும்பாலும் , எல்லாத்தையுமே சுதந்திரமாத்தானே பயன்படுத்திக்கிட்டிருக்காங்க ! :))
வாங்க அருணா!
ReplyDeleteநன்றி உங்கள் பூங்கொத்துக்கு...என்ன செய்யலாம்..உங்கள் பங்களிப்பென்ன? சொல்லுங்க!
நட்புடன் ஜமால்...நீங்க சொன்னமாதிரிதான் நான் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை வச்சிருக்கேன். அது கூடிக்கிட்டுத்தான் போகுது..! நன்றிங்க! மறுபடியும் பேசுவோம்.
ReplyDeleteபுதுகைத்தென்றல்..
ReplyDeleteஅய்யோ..நான் தலைவன் இல்லை..தலைவன் இல்லை! :)
நீங்களே ஒரு என்ஸைக்ளோபீடியா..உங்களிலிருந்தே ஆரம்பிக்கலாமே!
வாங்க நிஜமா நல்லவரே!
ReplyDeleteசிங்கையில் நீங்க சாதிக்கும் விஷயங்களும் இதில் அடங்கும்!
வாங்க அபி அப்பா!
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
ஆமா..சந்தோஷமா இந்த சமூகத்துக்குச் செய்யவேண்டிய ஒரே சமூகம் பதிவர் சமூகம்தான்..
hai
ReplyDeletemicromagician!
good thought and nice idea!
possibilities unlimited!
all the very best!
"Think about the generation and to say we want to make it a better world for our children and our children's children. So that they know it's a better world for them; and think if they can make it a better place"
Heal the world
make it a better place
for you and for me and the entire human race
there are people dying
If you care enough for the living
Make a better place for
everyone.
we could fly so high
Let our spirits never die.
(this is the famous MJ's
heal the world song lines- how
exactly matching know!)
best wishes
sayu,
அண்ணே தொடர்ந்து எழுதுங்கண்ணே. நான் மிகைப்படுத்தி சொல்றதா நினைப்பீங்க. நீங்களே ஒருமுறை மொத்தமா ஒருவாட்டி உங்க பிளாக்கைப் படிங்க. ஒரு பல்சுவை இதழ் மாதிரி அத்தனையும் எழுதி இருக்கீங்களா? இல்லையான்னு? அப்புறம் சொல்லுங்க.
ReplyDeleteஅன்புநிறை அப்துல்லா!
ReplyDeleteஉங்கள் அன்புக்குத்தான் நான் அடிமையாகவே இருக்கிறேன்.
நண்பரே ஏதேனும் யோசனைகள் ...
ReplyDelete