அணைக்க வேண்டுமா அணைக்காக?
      ஆற்றுநீரைத் தேக்கி வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்பதோ, இந்த அளவுக்குமேல் தேக்க விடமாட்டேன் என்பதோ, உன் பராமரிப்பில் உள்ள அணையை உடைத்துவிட்டு, நான் புது அணை கட்டிக்கொள்வேன் என்பதோ  ஏதோ ஒரு விதத்தில் அண்டை மாநிலங்கள் நம்மை ஒரு மாநிலமாகக் கூட மதிக்காமல் அராஜகப்போக்கை காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நாம் இன்னும் ஒற்றுமை..தெருப்புழுதி என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

         அணைக்காக உங்களை நாங்கள் அணைத்துப்போவதாக இல்லை என்றால். பின்னர் நாம் மட்டும் ஏன் அணைக்கவேண்டும்? அதுவும் அரவணைக்க வேண்டுமாம். தவறு இரு மாநிலத்தின் மேலுமில்லை. மத்திய அரசு என்ற போர்வையில்..அடித்துக்கொண்டு சாகட்டும். அப்போதுதான் நம் குற்றம் வெளியில் தெரியாது என்று 2ஜி, க்வோத்ரோச்சிகளை கக்கத்தில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அயோக்கிய அரசுதான் காரணம்.!

யார் பேச்சையும் கேட்காமல், பொது தேசத்தின் நீதிமன்றத்துக்கும் கட்டுப்படாமல், எப்போது உனக்கு ஒன்றும் தருவதற்கில்லை என்று ஓரங்கட்டிவிட்டார்களோ, அப்புறம் என்ன அண்டை மாநிலம்..?   ஆனாலும்.. நம் சொரணை கெட்டத்தனத்தில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கைதான்..!!

       தமிழனை அடிக்கவேண்டுமென்று முடிவெடுத்து அவர்கள் அடிக்கிறார்கள் என்றால், திருப்பி அடிப்பதிலாவது கொஞ்சம் மாற்று அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கலாம்.

       ஆனால்..அதற்கு உண்மையில் உணர்வு வேண்டும். முல்லைப் பெரியாரைக் காக்கவேண்டும் என்று போராடிவிட்டு..அக்கா மகள் திருமணத்துக்கு ஆலூக்காஸில் நகை வாங்கினால்..அந்தக்காசை அவர்கள் ஊருக்கனுப்பி இன்னும் நான்கு உருட்டுக்கட்டைகள் வாங்கி நம் வண்டியைத்தான் அடிப்பார்கள்.

        ஆனால்..இங்கு அவர்கள் நடத்தும் எந்த ஒரு கடைக்குள்ளும் நுழையாமல் சிரித்துக்கொண்டே கடந்து பார்ப்போம்.வியாபாரம் இல்லாமல் வேகவைத்தல்தான் அடிக்காமல் நொறுக்காமல், அழவைக்கும் அணுகுமுறை! ஏன் கடைக்குள் வரவில்லை என்று நம்மை போலீஸ் கேள்வி கேட்கமுடியாது.

      அதேபோல், அவர்களுக்கான பொருட்களை அனுப்புவோம். அதற்கான வருமானத்தையும் அள்ளுவோம். அதை அவர்களாகப் புறக்கணிக்கவே முடியாது.

தங்கம் வாங்குவதைத் தவிர்க்கலாம்..காய்கறிகளை? அரிசியை?....

       அப்போதுதான் வாங்காமலும் இருக்கமுடியாமல், தன் பொருளை விற்கவும் முடியாமல் வித்தியாசமான கண்ணியில் சிக்கும்  அதிர்ஷ்டம் கேரளர்களுக்கு வாய்க்கும்.!

      கொடுக்கிறேன்.ஆனால் வாங்கமாட்டேன்.. என்று ஆரம்பித்தாலே ஆட்டம் களைகட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அணைப்பது பலவீனத்தைப் பறைசாற்றும்!  
அடிப்பது, வாதத்தின் பலம் நீக்கும்!

இப்படி நாம் என்னதான் தீர்வுக்காகப் புலம்பினாலும்..

இந்த அரசியல்வாதிகளின் அமோக ஆதரவில்…..கன்னித்தீவுக்கு இனி முல்லைப்பெரியாறுதான் கடுமையான போட்டி!

ஒன்றுமட்டும் நிச்சயம்!!

காந்தித்தனம் நன்றுதான்…
எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! 

இந்தியனென்ற போர்வையிலிருக்கும் எவனுக்கும் ...
டையர்த்தனம்தான் நன்று! 

Comments

 1. வழக்கமான சொதப்பல் புலம்பல்கள் , நீதி போதனை ,மறப்போம், மன்னிப்போம் போன்ற பேடி தனங்கள் எதுவும் இல்லாமல் மாறுபட்டு சொன்னது நன்று. நம் ஆட்களுக்கு உறைப்பதற்கு சற்று காலம் ஆகும். உணரவேண்டிய வேண்டிய ஒன்று. தமிழ் நாட்டில் மலையாளிகளின் வியாபார மன்றங்களை புறக்கணித்தாலே பாதி வெற்றி.ஆனால் நம் ஆட்கள்தான் அந்த உணர்வின்றியே இருக்கின்றனரே. அந்த உணர்வு நம்மிடம் இருந்திருந்தால் சென்னையில் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் பிற மலையாளிகளின் நிறுவனங்களும் தான் வந்திருக்குமா??

  ReplyDelete
 2. நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி.

  ReplyDelete
 3. வாங்க கக்கு-மாணிக்கம்!

  நம்மிடம் போராட்டகுணம் தீவிரமானால்தான் பதிலடியும் திறமையாகக் கொடுக்கமுடியும்.இல்லையென்றால் அடி வாங்கிக்கொண்டிருக்க வேண்டிய்துதான்.!

  ReplyDelete
 4. வாங்க KSGOA!

  நன்றிங்க!

  ReplyDelete
 5. அன்பின் சுரேகா - சிந்தனை செல்லும் விதம் சரி - ஆனால் இதன் சாதக பாதகங்கள் என்ன ? அங்கு நமது மக்கள் செய்து வருகின்ற தொழில்கள் என்ன ? கொஞ்சம் அனைத்தையும் ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். நல்வாழ்த்துகள் சுரேகா - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!