ஓமப்பொடி # 7





கேட்டால் கிடைக்கும் என்று பல நண்பர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இசையமைப்பாளர் P.B. பாலாஜியின் வீட்டு வாசலில் தேங்கிக் கிடந்த குப்பையை எடுக்க, மேயருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றார். செய்துகொடுத்தேன். அவரே அனுப்பி, உடனே காரியமும் நடந்திருக்கிறது. மேலும் அதிகாரிகளும் வீட்டுக்கே வந்து பதில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இதில் நண்பர் கேபிள் சங்கரும் அவருக்கு ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். கேட்டால் கிடைக்கும் என்று பிரபலங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.
  -----------------------------------------------------------------------------------------------------------------------------


நிகழ்வுகள் நம்மை செதுக்குகின்றன என நம்புகிறேன். சமீபத்திய வெவ்வேறு நிகழ்வுகள், என்னை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. துக்கப்படுத்தியிருக்கிறது. ஆற்றுப்படுத்தியிருக்கிறது. அவமானப்பட வைத்திருக்கிறது. ஆவேசப்படவைத்திருக்கிறது. ஆனால், அவை மொத்தமும் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை! (மொத்தத்தில் நிறைய ‘படுத்தியிருக்கிறது! J )

ஆனால், மகிழ்ச்சிப்படுத்திய தருணங்கள்தான், உள்ளத்தை குப்பைத் தொட்டியாக்காமல் பாதுகாக்கிறது.

ஆரோகணம் – திரைப்பட விரும்பிகளால் வெகுவாக இரசிக்கப்பட்டு, ஆனந்தவிகடனில் 44 மதிப்பெண்கள் வாங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வு..!! ஏனெனில் ஜூலை 2011ல் ஒரு மாலை நேரத்தில் ஹோட்டல் ரெஸிடென்ஸி டவர்ஸின் உணவகத்தில் அமர்ந்து லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் கதை சொன்னார். அன்றிலிருந்து, அந்தக் கதையில் பயணிக்கிறேன். பை-போலார் எனப்படும் மனச்சலனம் பற்றி விவாதிக்கிறோம். விறுவிறுவென்று வேலைகள் நடக்கின்றன. கதை விவாதம் – நடிகர்கள் தேர்வு- தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு என்று அனைத்தும் நிகழ்கிறது. படப்பிடிப்பு அதிவேகமாக நிறைவடைகிறது . அப்போதுதான், அதே விஷயத்தை மையமாக வைத்து, 3 என்ற படம் வெளிவருகிறது. ஆனால், அதில் முழுமையாக எதிர்மாறாக காட்டியிருக்கிறார்கள் என்றதும் கொஞ்சம் ஆசுவாசமாகிறது. மீண்டும் பல்வேறு பட்டை தீட்டல்களுக்குப்பிறகு 100 நிமிடப்படமாக ‘ஆரோகணம்’ வெளிவருகிறது. அதில் கதை நாயகியாக நடித்திருந்த விஜி அவர்களின் வாழ்நாள் சாதனையாக இதனைக் கொள்ளலாம்.

அதில், ஒரு சிறு கதாபாத்திரமாக என்னையும் காட்டியிருக்கிறார்கள். அந்த அன்புக்காக, இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


இந்தப்பாடல் எல்லோராலும் இரசிக்கப்பட்டது. இந்தப்பாடலில் நானும் காட்டப்பட்டிருக்கிறேன். இசையமைப்பாளர் கே வுக்கும், பாடலைப் பாடிய ‘ஷாரதா இராமகிருஷ்ணனுக்கும் பாராட்டுக்கள். (ஷாரதா, இயக்குநரின் மகள்) மேலும், ஆரோகணத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்ற வாரம் நடந்தது. அதிலும் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வாக இருந்தது.


மக்கள் தொலைக்காட்சியில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10:30க்கு ’புதிய இலக்கு’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இணையத்தில் எனது நம்பிக்கை உரைகளைக் கேட்டுவிட்டு, நிகழ்ச்சியின் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னை அணுகினார்கள். அதன்படி, அந்த நிகழ்ச்சியில், நம்பிக்கைச் சொல் என்ற தலைப்பில், நம்பிக்கை விஷயங்களும், ‘முத்தாய்ப்பாக’ என்ற தலைப்பில் வேலை பற்றிய சில புள்ளிவிபரத் தகவல்களும் பகிர்ந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சி, வேலை தேடுபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாகவும், நிறுவனங்கள் புதிய ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று விளக்கும் களமாகவும் இருக்கிறது.
அதிலிருந்து மாதிரிப் பகுதி!!




 ஜெயா குழும டிவியில் எனது நெறியாள்கையில் ஒரு நிகழ்ச்சி வர இருக்கிறது. அது இப்போதைக்கு புதிராகவே இருக்கட்டும். வரும்போது பார்க்கலாம்.



பால் தாக்கரே இறப்புக்கு – கதவடைப்பு பற்றி இணையத்தில் கருத்துச் சொன்ன பெண்களை கைது செய்து ஜாமீனில் விட்டிருக்கிறது போலீஸ். ஆனால், அவர்களைக் கைது செய்ததே தவறு என்று எதிர்ப்புக்குரல் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. இங்கும் பல சம்பவங்கள் அதுபோல நடக்கின்றன. இதுபோல எது எழுதினாலும் வம்பு வரும் என்றால், ஒன்று மக்கள் இணையத்தில் எழுத அஞ்சுவார்கள். அல்லது -இணைய எழுத்தாளர்கள் ஒன்றிணைந்தால் - கட்டாயம் இணைய கருத்து முடக்கத்துக்கெதிரான புரட்சி வெடிக்கும்..! எனக்கென்னமோ இரண்டாவது நடக்குமோ என்று தோன்றுகிறது.


Comments

  1. சுரேகாஜி,

    ரொம்ப சிக்கனமா ஓமப்பொடி கொடுக்கிறிங்களே,

    தமிழ் திரையுலகின் வருங்கால எனர்ஜி ஸ்டார் சுரேகாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    கருத்து சுதந்திரம் காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குமேல குடுத்தா அஜீரணமாயிடும் வவ்வால்..!!

      ஆஹா... என்னையும் ரணகளமாக்கணுமா?

      மிகச்சரி...கருத்து என்பதே சுதந்திரத்துக்காகத்தான்..!!

      Delete
    2. கலக்கறிங்க சுந்தர்ஜி... அழகா பேசறிங்க சுரேகா.

      Delete
    3. நன்றி கதிர்... ரொம்ப நாளாச்சு !! நலமா?

      Delete
  2. வாழ்த்துகள் சுரேகாஜி !!!

    ReplyDelete
  3. ஜெயா குழும டிவியில் எனது நெறியாள்கையில் ஒரு நிகழ்ச்சி வர இருக்கிறது.

    வாழ்த்துக்கள் சுரேகா சார்

    ReplyDelete
  4. ஆரோகணம் ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம்... திரையரங்கில் இருந்து வெளியே வரும்போது ஏனோ புது உற்சாகம் பிறந்திருந்தது...

    பாடலை பாடியவர் இயக்குனரின் மகளென்று தெரியும்... படத்தில் பாடலை பாடுவதாக நடித்திருப்பவரின் பெயர் என்ன ?

    ஆரோகணம் பற்றிய என் பதிவு:
    http://www.philosophyprabhakaran.com/2012/11/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பிலாசபி... உங்கள் ஆர்வம் பெருமையாக(!) இருக்கிறது! :))

      அவர் பெயர் ப்ரீத்தி...இந்த ஆண்டு மிஸஸ்.தமிழ்நாடு பட்டம் வென்றவர்..!!


      Delete
    2. உங்களுடைய சொற்றொடரில் பிழை இருக்கிறது...

      "ஸ" என்ற எழுத்தை தவறுதலாக சேர்த்திருக்கிறீர்கள்... சரி பார்க்கவும்...

      Delete
  5. ஆரோகணம் விமர்சனம் படித்தேன். இந்தமாதிரி சமயங்களில் மட்டும் வெளிமாநிலத்தில் உட்கார்ந்திருப்பதற்கு வருத்தப்படுகிறேன்!! :( :)

    வீடியோ பார்த்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க புதுகைத்தென்றல்..!! எப்போது நேரம் கிடைத்தாலும் பாருங்கள்! மிக்க நன்றி!

      Delete
  6. கண்டிப்பாக இரண்டாவதுதான் நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆம்...அதுதான் நல்லதும் கூட..!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

உணவு @TIE