அவளின்றி அணுவும்...







மனைவி என்ற பெண்ணை நேசிக்க பல்வேறு தருணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால்.. ஆனந்தம் நிச்சயம்!

உங்களுக்கான காஃபியை அருந்திப்பார்க்கும்போது நேசியுங்கள்...அது உங்களுக்கு பிடிக்கும்படி இருக்கிறதா என்று சுவை பார்க்கிறாள் என்று அர்த்தம்..

உங்களை சாமி கும்பிட வலியுறுத்தும்போது நேசியுங்கள். அவளுக்கு நீங்கள் கிடைத்ததுபோல், உங்களுக்கும் புண்ணியமும், சொர்க்கமும் ஒருசேரக் கிடைக்கட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்.

உங்களை, குழந்தைகளுடன் விளையாடச் சொல்லும்போது நேசியுங்கள்… பிள்ளைகள் தன்னை மட்டுமல்ல..! அப்பாவையும் அதிகம் உணரட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்..

அவள் உங்களைக் கண்டு பொறாமைப் படும்போது நேசியுங்கள். இரகசியமாக உங்களை தேர்ந்தெடுத்ததை நினைத்துப் பெருமைப்படுகிறாள் என்றுதான் அர்த்தம்…

அவளது சில சிறு செயல்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும்போதும் நேசியுங்கள். அந்தச் செயல்களை நீங்களும் சில நேரங்களில் செய்திருப்பீர்கள்.அதனை அவள் சுட்டுவதில்லை.

அவளது சமையல் ருசிக்கவில்லையென்றால் நேசியுங்கள்.. அவள் நன்கு சமைக்க முயற்சிக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் காலையில் அலங்கோலமாக இருக்கும்போது நேசியுங்கள். உங்களுக்கான வேலைகளை முடித்துவிட்டுத்தான் தன்னை அழகுபடுத்திக்கொள்ளப் போகிறாள் என்று அர்த்தம்

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய உங்களை உதவச்சொல்லும்போது நேசியுங்கள். அவள் , உங்களையும் அந்தக் குடும்பத்தின் நெருக்கத்தில் பங்கெடுக்க வைக்கிறாள் என்று அர்த்தம்.

நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டாள் என்றால், அழகாக இருக்கிறாய் என்று சொல்லி நேசியுங்கள். உங்கள் ஆதுரமான வார்த்தைகளை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம்.

அவள் அழகுபடுத்திக்கொள்ள நேரம் எடுக்கும்போது நேசியுங்கள். உங்கள் மனைவி அழகு என்று பொதுவில் காட்டிக்கொள்ள சிரத்தை எடுக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் ஒன்றுமில்லாததற்கெல்லாம் அழும்போது நேசியுங்கள். வேறு எதுவும் கேட்காமல், ”எல்லாம் சரியாகிவிடும்” என்ற உங்கள் ஒற்றைச் சொல்லை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம்.

எப்படிக் கார் , பைக் ஓட்டவேண்டுமென்று உங்களுக்கு அவள் ஆலோசனை சொல்லும்போது நேசியுங்கள். உங்கள் பாதுகாப்பின்மீது அக்கறையாய் இருக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் உங்களிடம் வாக்குவாதம் செய்யும்போது நேசியுங்கள். இருவருக்கும் நல்லது நடக்கவேண்டுமென்று பேசுகிறாள் என்று அர்த்தம்.

இதைப் படித்துவிட்டு, உங்களைப்பார்த்து அவள் காட்டும் முகபாவத்தையும் நேசியுங்கள். உங்களை அவள் கணித்து வைத்திருக்கிறாள் என்று அர்த்தம்.

அவளை அப்படியே நேசியுங்கள். அவள் உங்களுக்கானவள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் தேவையில்லை..!!

அவள் உங்களில் ஒரு பாகம்..உங்கள் வீட்டு ராணி!


- நன்றி : விஜி ராம். - ஆங்கில மொழியில் - முகப்புத்தகத்தில்!

Comments

  1. படிப்பதற்கு அருமையாகத்தான் இருக்கிறது ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ??????? என்னத்த சொல்ல சுரேகா

    ReplyDelete
  2. இம்புட்டு கிறுக்கியவா கட்டியிருக்கோம்னு தோணாது?????

    ReplyDelete

  3. திருமணதிற்கு பின்பு இன்று வரை அவளை நேசிக்கும் ஒருவனால் மட்டுமே இதை உணர முடியும் மற்றவர்கள் நேசிக்க மறந்தவர்கள் ..............பாராட்டுகள் சுரேகா பதிவிற்கு தமிழாக்கத்திற்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!