மறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)

இதுதான் க்ளைமாக்சுங்க....

கிடைச்ச பெட்டியின் பூட்டை சரி பண்ணி, மறுபடியும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேங்க..! சரியா 15 நாள் கழிச்சு., ஒரு கூட்டத்துக்கு திண்டுக்கல்லுக்கு கூப்பிட்டாங்க..!

அப்பவே சனி அடுத்த பந்தை போடப்போகுதுன்னு தெரியாம அதே பெட்டி, கிட்டத்தட்ட அதே பொருட்கள் மற்றும் அதைவிட விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவுடன் என் வீரப்பயணத்தை தொடங்கினேன். திருச்சி வந்து பஸ் மாறி ஒரு பழனி பஸ்ஸைப்பிடிச்சு அதில் உக்காந்தேன்..
நம்ம பெட்டியை இருக்கைக்கு மேல (அதுவும்..எதிர்புறம்) உள்ள பெட்டி வைக்கும் பகுதியில் பத்திரமா வச்சுட்டு..(அப்பதான் அடிக்கடி பாத்துக்க வசதியா இருக்கும்)- பஸ் இன்னும் கிளம்பலை..
நிலையத்திலேயே நிக்குது..
ஒரு புத்தகத்தை எடுத்து வச்சு, அதைப் படிக்க ஆரம்பிச்சு,ஒரு பக்கம் படிச்சு முடிச்சேங்க..!
அப்ப எதேச்சையா -அனிச்சைச்செயலா- திரும்பி பாக்குறேன்.

பெட்டியை காணோம்.....!


என்ன கொடுமைடா இதுன்னு..பஸ்முழுக்க,நிலையம் முழுக்க தேடி...ஓடி...அலையுறேன்.. நாம வேற பொட்டி தட்டுற ஆளா..! இதுக்கு ஒரு கூகுள் இருக்கக்கூடாதான்னு மனசு அப்பகூட நெனைக்குது..!
சரி..இந்தவாட்டி சனியனுக்கு, ஸ்கோரில் ஒரு விக்கெட் நிச்சயம்னு நெனச்சுக்கிட்டே... இருந்தாலும் கடைசி வரைக்கும் மனம் தளராம காவல் கண்காணிப்பு அறைக்கு போனேன்.

உண்மையாவே நல்லா, அக்கறையா விசாரிச்சாங்க..! உள்ள கூட்டிட்டுப்போய் , 'சார் நாம திருச்சி பஸ்டாண்டை 24 கேமராக்கள் மூலமா கண்காணிக்கிறோம்..அதுனால உங்க பெட்டியை எடுத்தவனை கண்டிப்பா சில நிமிடங்களில் கண்டுபிடிச்சுருவோம்.கவலையே படாதீங்க..!" ன்னு ஆறுதலெல்லாம் சொல்லி,
ஒரு தனியறைக்கு கூட்டிப்போனாங்க..அங்க இங்கிலீஸ் படம் மாதிரி நிறைய கட்டம் கட்டமா பிரிவுகளோட ஒரு மானிட்டரில் முழு பேருந்து நிலையமும் முன்னாடி தெரிந்தது.
ஆஹா..! ரெண்டாவது தடவையா பெட்டி கிடைக்கப்போவுதுன்னு சந்தோஷமா..''பழனி பஸ் நிக்கிற எடத்து கேமராவில் காட்டுங்க சார்..!' ன்னு சொன்னதுதான் தாமதம்...

ஐய்யயோ...! அந்த கேமரா மட்டும் நேத்துலேருந்து வேலை செய்யலயே ...! ன்னு வீறிட்டாரு..இன்னொரு போலீஸ்காரர்..!  -அதுலயே எனக்கு முடிவு தெரிஞ்சு போச்சு..!!! 

இருந்தாலும் விக்கிரமாதித்தன் மாதிரி 2 மணி நேரம் வெவ்வேற ஆங்கிள்ல அந்த ஏரியாவையே அலசி..ஒண்ணும் சிக்காம , அந்த கூட்டத்துக்கும் போக மனசு இல்லாம...
முழுமையா அந்த பெட்டியை திருட்டு கொடுத்துவிட்டு....
வேதாளம் மாதிரி வீடு வந்து சேந்தேன்..


அந்த நேரத்தில்....பாரதியார் நினைவில் வந்து சொன்னார்..

"வழி தேடி விதி இந்தச் செய்கை செய்தான்........
கட்டுண்டோம்....பொறுத்திருப்போம்...!"

முக்கியமான கொடுமை.... அன்னிக்கு இரவுதான் சனிப்பெயர்ச்சி..!

Comments

 1. பெட்டி எங்கே போயி சேரணுமோ அங்கே பத்திரமா போயி சேர்ந்துடுச்சுன்னு சொல்லு. பார்த்து, உன் டிஜிடல் கேமராவே சீக்கிரம் உன் கிட்டயே விலைக்கு வந்தாலும் வரும், கீப் லூக்கிங் :-))

  ReplyDelete
 2. ஆஹா! கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப்போனா, எதுத்தாப்புல 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சான்னு சொல்லுவ்வங்களே இது தானுங்களா இது?

  என்னாவோ கொஞ்ச நாளைக்க்கு பொட்டியே எட்க்காம (போற ஊர்ல கடையை திறந்து உடுப்பு வாங்கதான் உங்களுக்குத் தெரியுமே!) பயணம் செஞ்சு பாருங்க சாமி.

  ReplyDelete
 3. //இதுக்கு ஒரு கூகுள் இருக்கக்கூடாதான்னு மனசு அப்பகூட நெனைக்குது..!///

  :)))))

  ஊர்ல எல்லாம் இதுபோல நிகழ்வுகளுக்கு வெற்றிலையில் மை போட்டு கூகுள் போல யூஸ் செஞ்சிக்கிட்டு இருக்காங்க:)))

  சும்மா வடக்கு திசையில் உன் பெட்டி இருக்குது இன்னும் 15 நாட்களில் உன்னை தேடி வரும் ஒரு 500 ரூபாய் கொடு என்று செம வசூல் நடக்கும்.

  ReplyDelete
 4. //
  முக்கியமான கொடுமை.... அன்னிக்கு இரவுதான் சனிப்பெயர்ச்சி..!
  //

  :-))))))

  ReplyDelete
 5. பெட்டி கதை படித்தேன்...மீண்டும் கிடைக்காதா என்ன?

  ReplyDelete
 6. தெகா சொன்னது...
  // பெட்டி எங்கே போயி சேரணுமோ அங்கே பத்திரமா போயி சேர்ந்துடுச்சுன்னு சொல்லு. பார்த்து, உன் டிஜிடல் கேமராவே சீக்கிரம் உன் கிட்டயே விலைக்கு வந்தாலும் வரும், கீப் லூக்கிங் :-))//

  ஹூம்... என்ன ஒரு வில்லத்தனம்.!

  ReplyDelete
 7. தெகா சொன்னது...
  // பெட்டி எங்கே போயி சேரணுமோ அங்கே பத்திரமா போயி சேர்ந்துடுச்சுன்னு சொல்லு. பார்த்து, உன் டிஜிடல் கேமராவே சீக்கிரம் உன் கிட்டயே விலைக்கு வந்தாலும் வரும், கீப் லூக்கிங் :-))//

  ஹூம்... என்ன ஒரு வில்லத்தனம்.!

  ReplyDelete
 8. புதுகைத்தென்றல் சொன்னது..

  //ஆஹா! கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப்போனா, எதுத்தாப்புல 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சான்னு சொல்லுவ்வங்களே இது தானுங்களா இது?//

  ஆமாங்க ஆமாம்..4 கொடுமையா..!
  444 கொடுமை..ஏன்னா. அந்த பெட்டியோட நம்பர் லாக்கோட ரகசிய எண் அதுதான்...! (இப்பதான் பெட்டியே போச்சே..!)

  ReplyDelete
 9. குசும்பன் சொன்னது...

  // ஊர்ல எல்லாம் இதுபோல நிகழ்வுகளுக்கு வெற்றிலையில் மை போட்டு கூகுள் போல யூஸ் செஞ்சிக்கிட்டு இருக்காங்க:))) //

  வாங்க குசும்பன்..உங்களையெல்லாம் பாத்து கத்துக்கிட்டுதான் பதிய ஆரம்பிச்சிருக்கேன்..அடிக்கடி வந்து போங்க..!

  அட ஆமாங்க.. அந்த யோசனை எனக்கு வரவே இல்லையே..! நல்லவேளை 500 மிச்சம்..!

  ReplyDelete
 10. மங்களூர் சிவா சொன்னது..

  // :-)))))) //

  வாங்க...நல்வரவு ஆகுக....!

  என்னா ஒரு சிரிப்பு..!!

  ReplyDelete
 11. பாச மலர் சொன்னது...

  // பெட்டி கதை படித்தேன்...மீண்டும் கிடைக்காதா என்ன? //

  வாங்க..வாங்க..

  கிடைச்சா சந்தோஷம்..
  கிடைக்காட்டி ரொம்ப சந்தோஷம்..!

  அந்த அளவுக்கு ஆயிடுச்சு.!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..