என்னய்யா நடக்குது இங்க? - ஒகேனக்கல் எங்க இருக்கு?
உங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் நுழையுறான். !
என்ன குழம்பு? ங்குறான். யாருன்னே தெரியலை!
இருந்தாலும் 'வெண்டைக்காய்' ன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே
நான் வெண்டைக்காய் வாங்கின கடையிலதான் நீயும் வாங்கின!
அதுனால இந்த வெண்டைக்காயும், அதவச்சு செஞ்ச குழம்பும் இப்ப என்னுது! அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும்! நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க! ன்னு அடிச்சு நொறுக்கிட்டு போயிடுறான்.
இப்புடி ஒருத்தன் வந்து அடாவடி பண்றதுக்கும்
கர்நாடகா அடாவடி பண்றதுக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணே ஒண்ணுதான்.
அது வெண்டைக்காய்...இது பல மனிதர்களின் வயிறுக்காய்..!
ஆமா..நான் தெரிஞ்சும் - தெரியாமத்தான் கேக்குறேன்
என்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு? (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே!)
அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலுலுவாங்காட்டிக்கும்.....வேசமா? (எதுகைமோனையா இருந்தாலும் எரிச்சலாத்தானே வருது)
எதை எடுத்தாலும் விட்டுக்கொடுத்து போற ஆளை இளிச்சவாய்ன்னு சொல்லுவாங்க! அவன் சிரிக்காதவனாகவே இருந்தாலும்கூட! மொத்த உடம்பும் விட்டுத்தர்ற விஷயத்துக்குக்கூட வாய்க்குத்தான் கெட்ட பேரு.......இளிச்ச வாய்!
இந்திய தேச வரைபடத்துல கடைசில தாவாங்கட்டைக்குப்பக்கத்துல
பெரிய இளிச்சவாய் ஒண்ணு இருக்குடோய்ன்னு எல்லா மாமாநிலமும்
ரவுண்டு கட்டி அடிச்சாலும், வாங்கிட்டு இருக்குறதுக்கு...
நம்ம சொரணை செத்துப்போய் பல நூற்றாண்டா ஆகிப்போச்சோன்னு
தோணுது.!
முன்னாடி ஒரு கொசுவத்தி பதிவுல
காமெடியா ஒரு விஷயம் சொல்லியிருந்தேன்.
Unlimited க்கும் ஒரு limit இருக்கு!
இப்ப அதே மாதிரிதான்
சகிப்புத்தன்மைக்கும் ஒரு சகிப்புத்தன்மை இருக்கு!
அதுக்கும் மேல போனா..... என்ன பண்றதுன்னு யோசிக்காம
ரௌத்ரம் காட்டுறதுதான் நல்லது!
இதே நெய்வேலி, கர்நாடகத்தில் இருந்தா இந்த பதிவை அடிக்கமுடியாம
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை மேஞ்சுக்கிட்டுதான் இருக்கமுடியும். இந்நேரம் பீஸைப்புடுங்கிருப்பாங்க! அவுங்களுக்கு பிரச்சனை வேணும் அவ்வளவுதான்! நியாயமா ? கிலோ என்ன விலைன்னுருவாங்க! ஏன்னா கர்நாடகத்தனம்னா இதுதான்.
அதுக்கும்மேல நம்ம வீட்டுக்கும் பக்கத்துவீட்டுக்கும் பெரிய பிரச்னை நடந்துக்கிட்டிருக்கு! ஊர் நாட்டாமை உங்க வீட்டுக்குள்ள வந்து சமையல் அறையில் வந்து தண்ணிகுடிச்சுட்டு கண்டுக்காம வெளில போனா எப்புடி இருக்கும்? அதுவும் நாட்டாமை வீட்டுலதான் நம்ம அண்ணனும் வேலை பாக்குறாரு!
அப்படித்தான் பண்ணிக்கிட்டிருக்காங்க சோனியா அம்மா! காரைக்குடிக்கு வருவாங்களாம்
பிரச்னையைப்பத்தி சென்னைல வந்து பேசமாட்டாங்களாம். (ஓ..இப்ப தொகுதி பங்கீடு இல்லையோ?) சிதம்பரம்ன்னு ஒரு அண்ணன் என்னா ஆனாருன்னே தெரியல! உங்க கம்பேனி பெரிய லந்துல்ல பண்ணிக்கிட்டிருக்கு!
நமக்கு மேல இருக்கிறது
மத்திய அரசா?
இல்ல
'தத்தி'ய அரசான்னு வெளங்கல!
அதுக்கும்மேல.....
ஒத்தி வக்கிறேன் எனும் பிரச்னை
இப்ப வெண்டைக்காய் சமைக்கிறதை அவன் வீட்டு கல்யாணம் முடியறவரைக்கும் ஒத்தி வைக்க நீங்க முடிவெடுத்துட்டீங்க! அய்யா! இதை இப்ப ஒத்தி வச்சா அப்புறம் ஒகேனக்கல்ல அவனுக்கு ஒத்தி*க்கு வச்ச மாதிரிதான்.!
அவன் என்னடான்னா ஒகே நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.
நமக்கு பிரச்னை வேணும்! நியாயம் வேண்டாம்.! இன்னிக்கு பொழப்பு ஓடுச்சான்னு திரியிற அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.
நாம என்ன செய்ய முடியும்ன்னு நினைக்கிறீங்களா? ஒரு ஐம்பது பைசா போஸ்ட் கார்டு வாங்குங்க!
(முடிஞ்சா ரெண்டா வாங்குங்க)
" தயவு செய்து - எப்போதும் போல கண்டுகொள்ளாமல் இருங்கள்-
தமிழனுக்காக பரிந்துகொண்டு வந்து சிரமப்படவேண்டாம்! ஆனால்
இந்த பாராளுமன்ற தேர்தலில் என் ஓட்டை எதிர்பார்க்காதீர்கள் " - ன்னு எழுதி
பிரதமருக்கு அனுப்புங்க!
'ஒகேனக்கல் பிரச்னையை இந்தியப்பிரச்னையாக பாவித்து உடனடி நடவடிக்கை
எடுக்குமாறு ஒரு இந்தியனாக கேட்கிறேன்' ன்னு எழுதி ஜனாதிபதிக்கு அனுப்புங்க!
இல்லைன்னா... ரெண்டு கன்னடக்காரங்க சந்திச்சுக்கிட்டா இப்படித்தான் பேசிக்குவாங்க! தமிழ்நாட்டுக்காரன் எதைப்புடுங்கிட்டு வுட்டாலும் பேசாம இருக்கான் எப்புடி அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்ல்லவன்ன்ன்ன்....! அவ்வ் :)
ஒன்று மட்டும் உண்மை நண்பர்களே!
எல்லாப்புரட்சிகளும் இப்படி ஒரு புள்ளியில்தான் ஆரம்பித்தன.
* ஒத்தி - அடமானம் மாதிரி...
ஒரு வீட்டை ஒருலட்சம் கொடுத்து
ஒத்திக்கு வாங்கினா...வாடகை கிடையாது.
வெளில வரும்போது ஒரு லட்சம்
திரும்ப கிடைக்கும்.
மும்பைல எல்லாம்
ஒத்திக்கு வந்தவன்...
காலி பண்ண, சொத்து மதிப்புக்கு மேலயே
பணம் கேப்பான்...-(அடேயப்பா
எம்மாம்பெரிய விளக்கம்?)
(அய்யய்யோ..நான் கண்டது கனவு இல்லையா? நெஜமாவே பதிவா எழுதி போஸ்ட் பண்ணிட்டேனா...? எனவே..இதை இப்போதைக்கு - அடுத்த பதிவு போடும்வரை ஒத்தி வைக்கிறேன்.! :)
ச்சூடான் விசயத்தைப் பத்தி பேசுற பதிவாப் போட்டுறுக்க. பொறுமையா படிச்சிட்டு வாரே இரு விவாதிப்போம்... போருக்கு தயாரா :)
ReplyDeleteசூடான விஷயத்தை நல்லா தான் எழுதி இருக்கீங்க.
ReplyDeleteவெண்டைக்காயை கொழகொழன்னு இல்லாம நல்லாவே 'நறுக்'ன்னு சமைச்சுருக்கீங்க.
ReplyDeleteஒரே நாடுதான் என்று இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கும் என்னப் போன்ற 'அப்பாவி'களுக்கு மத்திய அரசு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியலை.
பேசாம நாட்டாமை வீட்டுலே இருந்து அண்ணன் வெளியில் வந்தே வந்துரணும்.
ஆனா அங்கே 'வேலை'யில் 'இருப்பது' ரொம்ப முக்கியமாமே (-:
Thekkikattan|தெகா said...
ReplyDelete//ச்சூடான் விசயத்தைப் பத்தி பேசுற பதிவாப் போட்டுறுக்க. பொறுமையா படிச்சிட்டு வாரே இரு விவாதிப்போம்... போருக்கு தயாரா :)//
வாங்க அண்ணே..
போரடிச்சுப்போய் எழுதியதற்கெல்லாம் போரா?
பெரிய அக்கப்போரா அல்லவா இருக்கிறது?
:)
சந்தோஷ் = Santhosh said...
ReplyDelete//சூடான விஷயத்தை நல்லா தான் எழுதி இருக்கீங்க.//
வாங்க வாங்க சந்தோஷ்...
நன்றிங்க!
துளசி கோபால் said...
ReplyDelete//வெண்டைக்காயை கொழகொழன்னு இல்லாம நல்லாவே 'நறுக்'ன்னு சமைச்சுருக்கீங்க.//
வாங்க...நன்றிங்கம்மா...!
//ஒரே நாடுதான் என்று இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கும் என்னப் போன்ற 'அப்பாவி'களுக்கு மத்திய அரசு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியலை.//
அப்பாவியா?
அப்புறம் நீங்க அ(ட)ப்பாவி!
உங்களை நம்பித்தானேடா
புள்ள குட்டிகளை எல்லாம்
ஊருல வுட்டுட்டு வந்தோம்னு சொல்லுவீங்க பாருங்க!
//பேசாம நாட்டாமை வீட்டுலே இருந்து அண்ணன் வெளியில் வந்தே வந்துரணும்.
ஆனா அங்கே 'வேலை'யில் 'இருப்பது' ரொம்ப முக்கியமாமே (-://
பின்றீங்களே..
ஆமாமா..இல்லைன்னா
அண்ணன் மகன்
சினேகமா அடிச்ச கூத்தெல்லாம்
ஆப்படிச்சுரும்.!
சுரேகா சும்மா பிரிச்சி மேஞ்சு ஊடு கட்டி விளையாடி இருக்கீங்க. இதே போல அந்த கர்நாடக காட்டானுங்களையும் ரவுண்டு கட்டனும். தேசிய நீரோட்டம் தேசிய நீரோட்டம் னு சொல்லுறாங்களே நீரே ஓடல அப்புறம் என்ன பெரிய தேசியம் வேண்டிகிடக்கு?
ReplyDeleteGo Layout
ReplyDeleteClick Edit html
Click Expand widgets
(In Edit Menu) Click find on this page
type 'Justify'
Replace 'Justify' with 'left'
Save.
firefox ல் உங்கள் பதிவை பார்க்க முடிவதில்லை. அதற்கு தீர்வு.
அன்புடன் நண்பன்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் என் ஓட்டை எதிர்பார்க்காதீர்கள் " - ன்னு எழுதி
ReplyDeleteபிரதமருக்கு அனுப்புங்க!
superunga.kandippa idhaithan ovvoru thamizhanum seyyanum.
naanum.appadhan "dhadhdhi "arasukkuidhu velangum.
romba nalla vendaikaya veche velanga vechurukeenga.romba romba romba nallairukku.
subbu.
நிஜமா நல்லவன் said...
ReplyDelete//சுரேகா சும்மா பிரிச்சி மேஞ்சு ஊடு கட்டி விளையாடி இருக்கீங்க. இதே போல அந்த கர்நாடக காட்டானுங்களையும் ரவுண்டு கட்டனும். தேசிய நீரோட்டம் தேசிய நீரோட்டம் னு சொல்லுறாங்களே நீரே ஓடல அப்புறம் என்ன பெரிய தேசியம் வேண்டிகிடக்கு?//
நன்றிங்க !
மனசுல இருக்குற ஆதங்கத்தைத்தான் எழுதினேன்.
இந்த தேசிய ஒருமைப்பாடு, எருமைப்பாடெல்லாம்
சரியான பம்மாத்துன்னு பக்கத்து மாநிலங்கள்
பலமுறை நிரூபிச்சுடுச்சு!
Anonymous said...
ReplyDelete//Go Layout
Click Edit html
Click Expand widgets
(In Edit Menu) Click find on this page
type 'Justify'
Replace 'Justify' with 'left'
Save.
firefox ல் உங்கள் பதிவை பார்க்க முடிவதில்லை. அதற்கு தீர்வு.
அன்புடன் நண்பன்.//
நன்றி நண்பரே...
உடனே செய்துவிட்டேன்.
Anonymous said...
ReplyDelete//superunga.kandippa idhaithan ovvoru thamizhanum seyyanum.
naanum.appadhan "dhadhdhi "arasukkuidhu velangum.
romba nalla vendaikaya veche velanga vechurukeenga.romba romba romba nallairukku.
subbu.//
/
ReplyDeleteஎன்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு? (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே!)
அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலுலுவாங்காட்டிக்கும்.....வேசமா?
/
எனக்கென்னமோ உலுலுவாங்காட்டிக்கும்.....வேசம் மாதிரிதான் தெரியுது :(
மகாராஷ்டிரால வட இந்தியாகாரனை போட்டு அடிக்கிறான்.
கர்னாநாடகா தமிழ்நாடு காவிரி பிரச்சனைல அடிச்சிக்கிறான்
முல்லை பெரியார் கேரளாகாரன்கூட சண்டை
ஸ்ஸப்ப்பாஆஆ இப்பவே கண்ணை கட்டுதே
எப்பதான் இந்தியா வல்லரசு ஆகுமோ?
/
ReplyDeleteசுரேகா.. said...
Anonymous said...
//Go Layout
Click Edit html
Click Expand widgets
(In Edit Menu) Click find on this page
type 'Justify'
Replace 'Justify' with 'left'
Save.
firefox ல் உங்கள் பதிவை பார்க்க முடிவதில்லை. அதற்கு தீர்வு.
அன்புடன் நண்பன்.//
நன்றி நண்பரே...
உடனே செய்துவிட்டேன்.
/
இல்லையே ஃபயர் பாக்ஸ்ல இப்பவும் வரலை :((
அவன் என்னடான்னா ஒகேனு நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.
ReplyDelete----
ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!
தமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே!!!
உதயதேவன் said...
ReplyDelete//
ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!ரெளத்திரம் பழகு!!!
தமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே!!!//
வாங்க வாங்க !
முதல் வருகைக்கு நன்றி!
நல்லா சொன்னீங்க
ஆமாங்க, பொறுமையா இருந்து
முதுகு சொறிஞ்சுக்கிட்டதெல்லாம்
போதும்ன்னுதான்
தோணுது!
சுரேகா,
ReplyDeleteஉங்க இந்த இடுகை பயர்பாக்ஸ்2 இல வாசிக்கமுடியல. ஆனா பயர்பாக்ஸ்3 இல தெளிவா இருக்கு.
காரணம்: பயர்பாக்ஸ்2 யுனிக்கோடிற்கு சரியாக சப்போரட் பண்ணுவதில்லை. பயர்பாக்ஸ்3 இல அது தீர்ந்திடிச்சு
ஆனாலும் மத்தவங்களோட இடுகைகள பயர்பாக்ஸ்2 இல வாசிக்கமுடியுது. உங்கட மட்டும் ஏன் முடியுதில்ல
காரணம்: நீங்க பாவிக்குற தமிழ்எழுதியாக இருக்கலாம். நீங்க க்னு/லினக்ஸிஸ இருந்து பயர்பாக்ஸ் Add-on இனைப் பாவித்து எழுதியிருந்தால் இவ்வாறு நடக்கலாம். என் நண்பர்களும்கும் இவ்வாறு நடந்து அவர்கள் தமிழ் எழுதியை மாற்றியபின் இது சரியானது. இது காரணமாக இருக்கலாமே தவிர இதையே காரணமாக எடுக்காதீர்கள்.
பயர்பாக்ஸ்3 இல் நீங்க எந்த எழுதி பாவித்தாலென்ன தமிழ் தெரிவதில் பிரச்சினையே இருக்காது.
அதுசரி சுரேகா, யாரோ ஒருவர் அனானியாக வந்து Justify ஐ Left ஆக மாற்றிவிடுங்கோ என்றால் நீங்களும் அதைச்செய்வதா. Justify இன் இயல்புகளாக left, center, right நீங்க போடலாம்,ஆனா Justify ஐயே leftன்னு போட்டா உங்க டெம்ப்லேற்றில் சிறிய தேவையில்லா மாற்றங்கள் வந்து தொலைக்கலாம்.
சுரேகா, இது பதிவுக்குச் சம்மந்தமில்லாப் பின்னூட்டம்தான். நான் ஒனேக்கலைப் பற்றி என்ன சொல்ல, நா இருக்குறது இலங்கை. நல்லபடியா முடிஞ்சா நல்லது. அவ்வளவுதான்
மங்களூர் சிவா தனக்கு இன்னமும் தெரியலன்னு அழுவுறார் பாத்தீங்களா :)
ReplyDeleteகௌபாய்மது said...
ReplyDelete//உங்க இந்த இடுகை பயர்பாக்ஸ்2 இல வாசிக்கமுடியல. ஆனா பயர்பாக்ஸ்3 இல தெளிவா இருக்கு.//
வாங்க!
இப்ப 2லயும் தெரியுது. பாருங்க!
இல்லைன்னா நீங்க சொன்னதுதான்
காரணமா இருக்கும்.
நான் இ-கலப்பை, தமிழா - தான் பயன்படுத்துறேன்.அதுவும் நோட்பேடில் எழுதிட்டு அப்புறம்தான்
பிரசுரம் பண்றேன்.
இந்தப் பிரச்சினை இந்திய ஒருமைப்பாட்டுக்கு வைக்கப்படும் வேட்டு!
ReplyDeleteமத்தியில் இன்னும் பொத்திகிட்டு இருந்தா, தனித்தமிழ்நாடு கோஷம் மீண்டும் எழும் நாள் தூரத்தில் இல்லை.
தாவாங்கட்டைக்குப்பக்கத்துல
ReplyDeleteபெரிய இளிச்சவாய் ஒண்ணு இருக்குடோய்ன்னு எல்லா மாமாநிலமும்
ரவுண்டு கட்டி அடிச்சாலும், வாங்கிட்டு இருக்குறதுக்கு...
நம்ம சொரணை செத்துப்போய் பல நூற்றாண்டா ஆகிப்போச்சோன்னு
தோணுது.!
Nammakku saappaadukku kurai ontum illai – appuram namakenna – athellam paarthu kolvarkal – naam oruthar ponaala enna aakividapokirathu entu ovvoruvarum ninaipathunalae koodaa… ikkathi..
என்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு? (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே!)
அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலுலுவாங்காட்டிக்கும்.....வேசமா?
intha santhaegam niraiya paerukku vundu
இவன் ரொம்ப நல்ல்லவன்ன்ன்ன்....! அவ்வ்
oru thiruttham- ivan romba nalla yaemaaleee avvvv...
nammidam orunginaintha ottumai illaiyo
Your message was Loud and Clear to us.....especially those of us Idiots who went on a fast that day and earned the wrath of many from all over( Kannadigas I mean). But is it loud enough to reach the ears of those politicians????
ReplyDeleteMohan Raman