மூட்டை முழுவதும் முரண்பாடு!
இயற்கை சீரழிகிறது
மரங்களை வெட்டாதீர்கள்
அவைகள் இல்லையென்றால்
அவனியே இல்லை!
எழுதிவிட்டு
புன்னகைத்தான்
கவிஞன் !
எதுகை மோனையுடன்
மரம் காப்பாற்ற
கவிதை எழுதிய
காகிதமும்
மரம்தான் என்பதை
லாவகமாய்
மறந்து..!
இனி எதில் எழுதினால்
மரம் காக்கலாம். ?
நீ கவிதை எழுதுவதைக் குறை!
நிறைய மரங்கள் மூச்சு விடும்.
*********************
அரசு மதுக்கடையில்
அமிலக்காரமாய்
அருந்திவிட்டு
வண்டியில் போனால்
பிடிக்கிறார்கள்
குடித்துவிட்டு
ஓட்டினேனாம்!
அப்ப எதுக்குய்யா
பார் வச்சு
குடிக்க
பக்குவமா சொல்றீங்க!
குடிச்சவன்
வீட்டுக்கு
உருண்டுக்கிட்டா
போவான்?
************************
பையனை
கடத்தி
அப்பனுக்கு
செல்லில் பேசினா
பிடிச்சுருவான்னு
பயந்து
லெட்டரில் எழுதி
அனுப்பி வச்சேன்
மகனைப்பாத்து
சொன்னேன்
ஒங்க அப்பனிடம்
கொண்டு கொடு!
பயந்துக்கிட்டு
பணம் குடுப்பான்!
ஹீரோ டயலாக் சூப்பர்
ReplyDeleteமரங்களை காப்பாத்தனும்னு சொன்ன நீங்கதானுங்க ஹீரோ!!
ReplyDelete//இனி எதில் எழுதினால்
ReplyDeleteமரம் காக்கலாம். ?
நீ கவிதை எழுதுவதைக் குறை!
நிறைய மரங்கள் மூச்சு விடும்.//
:)) அடி நெத்தியடி!
இது போன்ற எதிர் மறையான உலகியல் நடப்புக்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இன்னிக்கு காலையில கார் ஒன்றிருக்கு பதிவு டாக் வாங்கச் சென்றோம், அதில் பல வகையான வாசகங்கள் பொருந்தியபடி டாக்குகள் இருந்தன அதிலொன்று Give Wildlife a Chance என்பதும் ஒன்று. அந்த டாக்கிற்கு பதினைந்து டாலர்களும் அதிகம், ஆனால் அதனை விலை கொடுத்து வாங்குபவர்கள் பொரும்பாலும் பஸ் சைஸுல் கார் வைத்து ஒரு காலன் பெட்ரோலுக்கு 7 மைல்கள் கொடுக்கும் வண்டிகளே... இவர்கள் இந்தப் பிரச்சாரம் பண்ணி என்ன இயற்கையை பாதுகாத்து கிழிக்க...
இதுதான் நான் சொல்ல வரும் முரண்நகை... ஸியர் இடியட்ஸ் .
நல்லாருக்குதுங்க படமும், கவிதைகளும்..
ReplyDelete:)))
மங்களூர் சிவா said...
ReplyDelete//மரங்களை காப்பாத்தனும்னு சொன்ன நீங்கதானுங்க ஹீரோ!!//
வாங்க!
அப்புடி சொல்ற எல்லாருமே ஹீரோதான்!
Thekkikattan|தெகா said...
ReplyDelete//:)) அடி நெத்தியடி!
இது போன்ற எதிர் மறையான உலகியல் நடப்புக்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.//
வாங்கண்ணா!
ஆமா நீங்க சொல்றது சரிதான்.
பூமி தினத்துக்கு ஒரு கவிஞர் மேடையில்
எழுதிப்பாக்க வாங்கி,வீணடித்த காகிதங்களைப்பார்த்து எழுந்த கவிதை!
சென்ஷி said...
ReplyDelete//நல்லாருக்குதுங்க படமும், கவிதைகளும்..
:)))//
நன்றி செனஷி சார்!
கவிதை எல்லாம் நல்லா இருக்கு :)
ReplyDeleteஆனாலும் சமூக பிரஞ்யை அதிகமோ?
தமிழ் பிரியன் said...
ReplyDelete//கவிதை எல்லாம் நல்லா இருக்கு :)
ஆனாலும் சமூக பிரஞ்யை அதிகமோ?//
வாங்க நன்றிங்க!
சமுகப் பிரஞ்யைதானே...கொஞ்சம்
ல்லைட்ட்டா...அதிகம்.. :)
ஹா..ஹா.. நல்லா இருக்கு சுரேகா.:)))
ReplyDeleteயார்ரா அவன் ஏன் பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுறது ???
ReplyDeleteசுரேகாவிடம் எமுத்துக்கள் புகைபடக்கள் அருமை.
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteஇந்த வம்பே வேணாமுன்னுதான் காகிதத்தில் எழுதுறதையே விட்டாச்சு.
ReplyDeleteஆனா........ இங்கே காகிதம் வேற ஒரு பயனுக்கு(?) வாங்காம இருக்க முடியாது ............
MARANGALAI KAPPATHANUMNA
ReplyDeleteKAVITHAI ELUTHUVATHAI NIRUTHTHA VENDAM,...
"NET"TLE ELUTHALEME...
PAPERLESS KAVITHAIGAL...
ரமணா said...
ReplyDelete//சுரேகாவிடம் எமுத்துக்கள் புகைபடக்கள் அருமை.//
வாங்க..நன்றி ரமணா
ரசிகன் said...
ReplyDelete//ஹா..ஹா.. நல்லா இருக்கு சுரேகா.:)))//
வாங்க ரசிகன்...நன்றி!
இளைய கவி said...
ReplyDelete//யார்ரா அவன் ஏன் பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுறது ???//
எல்லாம் திருவாரூர் ரூம் மேட்டுதான்!
// சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ReplyDeleteநல்லா இருக்கு//
வாங்க நன்றிங்க சார்~!
துளசி கோபால் said...
ReplyDelete//இந்த வம்பே வேணாமுன்னுதான் காகிதத்தில் எழுதுறதையே விட்டாச்சு.//
ஆமாமா..ஆனா இதை முரண்பாட்டை சுட்டிக்காட்ட உவமையாத்தான் எடுத்துக்கிட்டேன்.
//ஆனா........ இங்கே காகிதம் வேற ஒரு பயனுக்கு(?) வாங்காம இருக்க முடியாது ............//
:)...ஒண்ணும் பண்ண முடியாது !
umakumar said...
ReplyDelete//MARANGALAI KAPPATHANUMNA
KAVITHAI ELUTHUVATHAI NIRUTHTHA VENDAM,...
"NET"TLE ELUTHALEME...
PAPERLESS KAVITHAIGAL...//
வாங்க!
நன்றிங்க!
கவிதை எழுதுவதை குறை ன்னுதான் போட்டிருக்கேன்.
மேலும் இது முரண்பாட்டுக்காக சொன்னது.
அப்புறம்..நெட்டுல நிறையப்பேர் எழுதறது இல்லீங்களே!