மும்பை என் உயிர் - ஒரு பார்வை


விரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா?)


அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்.

இயக்குநர் நிஷிகாந்த் காமத் ! நமது மாதவனின் நண்பர். "டோம்ப்வில்லி பாஸ்ட்" என்ற படத்தின் மூலம் புகழடைந்தவர். 'எவனோ ஒருவன்' என்று  அதை தமிழில் பேசவைத்தவர்.

மும்பை நகரத்தில் வெவ்வேறு தளங்களில் சில மனிதர்களும் ஒரு குண்டுவெடிப்புக்குப்பின் அவர்களது வாழ்வும், மனநிலையும்தான் கதை!

ஒரு டீக்கடையில் வந்து கூடும் சில நண்பர்கள்..அவர்களில் சுரேஷும் (கே கே மேனன்) ஒருவர். அவருக்கு எப்போதுமே இஸ்லாமியர்கள்மீது ஒரு 
இனம்புரியாத சந்தேகமும், வெறுப்பும். ஆனால நண்பர்களிடம் சகஜமாகப்பழகும் ஒரு கணிப்பொறி விற்பனையாளர். 
"மூணு மாசமா ஒரு கம்ப்யூட்டர்கூட விக்கலை" என்று நண்பர்கள் டீக்காக காசு கேட்கும்போது சொல்கிறார்!


ரூபாலி ஒரு டிவி நிருபர்.  ( சோஹா அலிகான் ). - தன் வருங்காலக்கணவனிடம் தான் எடுத்த பேட்டிகளைக்காட்டி பெருமையடித்துக்கொள்ளும் கதாபாத்திரம். கணவனைக்காணவில்லை என்று கதறும் ஒரு பெண்ணிடம் ' இப்போ எப்படி உணர்றீங்க? ' என்று கேட்கும் அவளைப்பார்த்து...அப்படி கேட்பது நியாயமில்லை என்று சொல்லும் அவளது வருங்காலக்கணவன். 

பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தாலும் , தேசத்தின் நலம் கருதியும் , நகரப்போக்குவரத்துக்கு தாமும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என நினைத்து கார் வைத்துக்கொள்ளாமல், ரயிலில் -முதல் வகுப்பில் பயணம் செய்யும் நிகில் அகர்வால் (நம்ம மாதவன்)! ரயில்வே ஸ்டேஷனிலும் ப்ளாஸ்டிக் பையில் ஏன் கொடுக்கிறாய்? என்று கடைக்காரனிடம் கடிந்துகொள்ளும் பொதுநலவாதி! அவருக்கு ஒரு கர்ப்பிணி மனைவி!

போலீஸ் வேலையில் சேர்ந்ததும், நேர்மை, நியாயம் என்று பேசித்திரியும் சுனில் காதம் ( விஜய் மௌரியா ) . அவருக்கு நிதர்சனம் இது இல்லைப்பா!
இது ஒரு சினிமா. பாத்துக்கிட்டுத்தான் இருக்கணும். நடிக்கணும்னு ஆசைப்படக்கூடாது! என்னப்பார் ! நான் ஏதாவது செய்றேனா என்று மிகவும் 
நிதானமாக நடந்து, பேசும் சீனியர் போலீஸ்காரரான துக்காராம் பட்டீல் ( பரேஷ் ராவல்)

சைக்கிளில் சென்று தெருத்தெருவாக காபி விற்று பிழைப்பு நடத்தும் தமிழர் தாமஸ் ( இர்பான் கான்) - எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் , முகத்தில் உணர்ச்சியைக்காட்டாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று போய்க்கொண்டு இருக்கும் ஒரு மிக மிக சராசரி மனிதன். அவனது 
அதிகபட்ச ஆசையே வார இறுதியில் மனைவி , குழந்தையுடன் , பெரிய மால்களில் சென்று விண்டோ ஷாப்பிங் செய்வதுதான்.! ஒரு செண்ட்டை 
எடுத்து மெதுவாக மூவரும் அடித்துக்கொள்ள,  பார்த்த கடைக்காரன் பத்தாயிரத்திச்சொச்சத்துக்கு அதை வாங்கச்ச்சொல்லி வற்புறுத்த, முடியாமல் 
காபி செண்ட் இருக்கா என்று கேட்டு அந்த மாலிலிருந்தே வெளித்தள்ளப்படும் பரிதாபமான ஜீவன்!


ஒரு நாள் மாதவன் ரயிலில் செல்வதற்காக காத்திருக்கும்போது ஒரு பழைய நண்பரைச்சந்திக்க, அவர் வலுக்கட்டாயமாக இரண்டாவது வகுப்பில் 
தள்ளிக்கொண்டு போக , ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் முதல் வகுப்புப்பெட்டியில் குண்டு வெடித்துவிடுகிறது. பலர் இறந்துவிடுகிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மாதவனால் மீளவே முடியவில்லை.

அதே சமயத்தில் அங்கு காயம்பட்டவர்களுக்கு சுரேஷ் உதவுகிறார். மேலும் இதற்கெல்லாம் காரணம் டீக்கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் 
யூசூப் தான் என்று சந்தேகித்து அவரைப்பற்றி துப்பு துலக்குகிறார். இடையில் ஒரு இஸ்லாமியர் மூலம் கிடைக்கவிருக்கும் ஐம்பது கம்ப்யூட்டர் 
ஆர்டரையும் தேவையில்லை என்று நினைக்கிறார்.

ரூபாலியின் வருங்காலக்கணவனை , குண்டுவெடிப்புகளுக்குப்பிறகு காணவில்லை. செய்தி கொடுப்பதற்காக சென்ற அவருக்கு இது தெரியவர, எல்லா மருத்துவமனைகளிலும் தேடி, ஒரு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டாரென்று தெரிந்தவுடன் ஸ்தம்பித்துப்போகிறார்.


போலீஸ்காரர்களான பட்டீலும், சுனிலும் வெவ்வேறு இடங்களில் -குண்டு வச்சவன் யாருன்னு கண்டு பிடிச்சீங்களா?- என்று பொது மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். ஒரு சூழலில் சுரேஷ், ஒரு இஸ்லாமியப்பெரியவரை பிடித்து விசாரித்துக்கொண்டிருப்பதைக்கண்டு, 
அவரிடம் பேச, மேனன் கோபமாக பட்டீலைத்தள்ளிவிட்டு விட்டு நண்பர்களுடன் ஓடிவிடுகிறார். சுனிலுக்கு பயங்கரக்கோபமாகி, அதைப்பார்த்துக்கொண்டு தெருவோரமாய் காபி விற்றுக்கொண்டிருந்த தாமஸை மிரட்ட,  ஒன்றும் செய்ய வேண்டாமென்று பட்டீல் அவரை கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.

                                                  (மீதி அடுத்த பாகத்தில்)


டிஸ்கி : படம் பாத்ததே லேட்டு.! அதிலும் அதைப்பத்தி எழுதுறதுக்கு அடுத்த பாகமான்னு திட்டாதீங்க! நீங்க சீக்கிரம் படிச்சுப்புட்டு மத்த வேலையைப்பாக்கலாமுல்ல!  ஹி..ஹி...

Comments

  1. மறுமொழி சோதனை...!

    1.
    2
    3.....

    ReplyDelete
  2. (மீதி அடுத்த பாகத்தில்)

    இது போடாட்டி அது சுரேகாவின் பதிவா இருக்காது. :)

    ReplyDelete
  3. அசால்டாக நடிப்பதில் பரேஷ் ராவல் கிங். அவரின் டயலாக் டெலிவரி சூப்பராக இருக்கும்.

    அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  4. நிறைய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து விட்டீர்கள்.... அடுத்த பகுதிக்கும் வருகின்றேன்...:)

    ReplyDelete
  5. //அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. //

    இப்படிதான் பல படங்களும் என்னை பார்க்க தூண்டி அங்கபோய் ஏமாந்து வந்து இருக்கேன்!!!

    போஸ்ட்டரில் இருப்பதை கூட காட்ட மாட்டானுங்க:(((

    ReplyDelete
  6. வாங்க புதுகைத்தென்றல்..

    எல்லாம் மக்கள் வசதிக்காகத்தான்.
    பெரிய பதிவை , அப்படியே தவ்விட்டுப்போயிடுவாங்க!
    அதான்.!

    ReplyDelete
  7. //புதுகைத் தென்றல் said...
    அசால்டாக நடிப்பதில் பரேஷ் ராவல் கிங். அவரின் டயலாக் டெலிவரி சூப்பராக இருக்கும்.

    அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.//


    இதோ இன்னிக்கே போட்டுடுவோம்!

    ReplyDelete
  8. தமிழ் பிரியன் said...
    நிறைய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து விட்டீர்கள்.... அடுத்த பகுதிக்கும் வருகின்றேன்...:)

    கண்டிப்பா வாங்க!

    ReplyDelete
  9. //குசும்பன் said...
    //அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. //

    இப்படிதான் பல படங்களும் என்னை பார்க்க தூண்டி அங்கபோய் ஏமாந்து வந்து இருக்கேன்!!!

    போஸ்ட்டரில் இருப்பதை கூட காட்ட மாட்டானுங்க:(((//

    நெனச்சேன் !

    சத்தியமா நெனச்சேன்.
    அதுவும்...குசும்பன்கிட்டேருந்து இதுக்கு
    இப்படி பின்னூட்டம் வருமேன்னு வேற
    நினைச்சேன்.

    என்ன பண்றதுப்பு!
    எல்லா போஸ்டர்லயும் ஏமாத்துறாங்களோ? :)

    ReplyDelete
  10. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் அதுவும் நல்லதுதான் மூனு பாகமும் ஒரே நாள்ல படிக்க முடியுமே!!

    :))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!