மும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு

மும்பை மேரி ஜான் படப்பார்வை - முதல் பாகம் இங்கே


மாதவனுக்கு ரயில் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. டாக்ஸியில் செல்கிறார். அமெரிக்காவில் வாழ்வது பற்றி நண்பர் சொல்ல, அதை முதலில் மறுத்தவர், பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் தேச விசுவாசம் போகாமல் இருக்கிறார். மனைவிக்கு பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது.

ரூபாலி வேலைபார்த்த டிவி கம்ப்பெனி சீனியரும் இன்னொரு நிருபரும் அவளைச்சந்தித்து உன் வருங்காலக்கணவர் இறந்தபோது உன் மனநிலை பற்றி ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று கூற, இவளுக்கு அழுகையாக வந்தாலும், ஒத்துக்கொள்கிறாள்.  பின்னர் கேமராவுடன் வீடே அதகளப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பிக்கும்போது , அழுகை வந்து, மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து 22 டேக்குகள் வாங்குகிறாள். அந்தச்சோகம் அப்படியே வியாபாரமாக்கப்படுகிறது. ரூபாலி பனீ ரோத்தாலி - ரூபாலி ஆனாள் அழுகுணி என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக வருகிறது.

சுரேஷ் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது , அவனால் தள்ளிவிடப்பட்ட போலீஸ்காரர் பட்டீல் , அவனைத்தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு , வாழ்வில் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது.  எல்லோரும் பதிலுக்கு பதில் என்று அடிக்கத்தொடங்கினால் என்ன ஆகும் என்று நிதானமாக 
எடுத்துரைத்துவிட்டு, அவனது நிறுத்தம் வந்ததும் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறார். 

தாமஸ், இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதை வைத்து ஒரு யோசனைக்கு வந்து, ஊரில் உள்ள எல்லா மால்களிலும் வெடிகுண்டு இருப்பதாய் ஒரு ரூபாய் தொலைபேசி நிலையத்திலிருந்து புரளியைக்கிளப்பி விட்டு , அதிலிருந்து மக்கள் அலறி ஓடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறான். அப்படி ஒரு மாலில் 
புரளிகிளப்பிவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு வயதானவருக்கு மாரடைப்பு வர, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று பதைபதைத்து மருத்துவமனை வரை சென்று நிலையை அறிகிறான். அன்றே தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருந்தி, மனைவியிடம் சொல்லி 
அழுகிறான்.

வேலையில் நேர்மையாக இருக்கமுடியவில்லையே என்று சுனில் காதம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயல்கிறார். அவருக்கு பட்டீல் அறிவுரைகள் சொல்லி தேற்றுகிறார். இந்நிலையில் பட்டீல் பணி ஓய்வு பெறும் நாள் வருகிறது. அன்று அவர் சக போலிஸ்காரர்கள் முன்னிலையில் பேசுகிறார். இத்தனை ஆண்டுகள் நான் போலீஸ் வேலையில் இருந்து பெரிதாக ஒன்றுமே 
செய்யவில்லை! என்று அழுகிறார்.

மாதவனின் மனைவிக்கு பிரசவ வலி எடுத்ததால் மருத்துவமனைக்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அந்நேரத்தில் மாதவன் அலுவலகத்தில் இருக்க, டாக்ஸியில் போகமுடியாத நிலை
- ட்ராபிக் ஜாஸ்தி சார்..எவ்வளவு வேகமா போனாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். வேணும்னா ட்ரெயின்ல போங்களேன். இருபது நிமிஷத்துல போயிடலாம்- டாக்ஸி டிரைவர் சொல்ல...வெடிகுண்டு விபத்துக்குப்பிறகு முதன் முதலில் ட்ரெயினில் ஏறுகிறார்.

சுரேஷ் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது , இவரால் சந்தேகப்படப்பட்ட யூசுப் வந்து, இவர் எதிரிலேயே அமர்ந்து மிகவும் அன்பாகப்பேசுகிறான். சகஜமாக நண்பனாக பாவிக்கிறான். மேலும் பாபாவின் படத்தையும் பிரசாதங்களையும் இவனுக்குக்கொடுக்கிறான். சுரேஷ் புரிந்துகொள்கிறான். உடனே, இன்னொரு முஸ்லீம் நண்பர் சொன்ன அந்த 50 கம்ப்யூட்டர் ஆர்டரை ஏற்றுக்கொள்கிறான்.


ரூபாலி தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்துக்கொண்டே வெளிவருகிறாள். ஒரு சாலையில் நடந்துவந்துகொண்டிருக்கிறாள்.

பணி ஓய்வு பெற்ற பட்டீலைக்கட்டிப்பிடித்துக்கொண்டு , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுனில் அழுகிறான்.அவர், அவனுக்கு அப்போதும் ஆறுதல் சொல்கிறார்.

மாதவன் ஒரு இனம்புரியாத பயத்துடன் ரயிலில் பயணிக்கிறார்.

சுரேஷ் தன் நண்பர்களுக்கும் யூசூபை அறிமுகப்படுத்துகிறான்.

தாமஸ் மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளிவரும் அந்தப் பெரியவருக்கு ஒரு ரோஜாப்பூ கொடுத்து வழியனுப்பி நிம்மதியாகிறான்.

எல்லோரும் தத்தமது இடத்தில் மௌனமாக நிற்கிறார்கள்.  

தொழில்நுட்பக்கலைஞர்களின் பெயர்களுடன் திரை இருள்கிறது.


என் பார்வை அடுத்த பாகத்தில் ...............................(என்ன செய்வது? உங்களை வெறுப்பேற்றக்கூடாது என்றுதான்..) 

---------------------------------------இதைவேற சொல்லிடு! 

Comments

 1. அய்யா இன்னும் எத்தனை பாகம் வரும்? உங்க பார்வையில் என்று சொல்லி படத்தின் கதையை வரி வரியாக சொன்னால் என்ன அர்த்தம்!!!

  ReplyDelete
 2. பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

  ReplyDelete
 3. /பாபு said...

  பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது./


  ரிப்பீட்டேய்...!

  ReplyDelete
 4. //பாபு said...
  பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.//


  கண்டிப்பா பாருங்க!

  ReplyDelete
 5. நிஜமா நல்லவன் said...


  ரிப்பீட்டேய்...!
  வாங்க நல்லவரே!

  நிஜமா நலமா?

  கண்டிப்பா படத்தைப்பாருங்க!
  ஒரு வித்யாசமான அனுபவம்
  காத்திருக்கிறது.

  ReplyDelete
 6. கமெண்டு வாசல் திறந்து வச்சாச்சு!
  இனிமே மாடரேஷன் இல்லை!

  ReplyDelete
 7. சீரான வேகம் உங்கள் எழுத்தில்..

  நர்சிம்

  ReplyDelete
 8. நிஜமா நல்லவன் said...
  /பாபு said...

  பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது./


  ரிப்பீட்டேய்...!

  //

  ரிப்பீட்டேய்...!

  ReplyDelete
 9. //narsim said...
  சீரான வேகம் உங்கள் எழுத்தில்..//

  வாங்க நர்சிம் சார் !

  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 10. அப்துல்லா.. !
  வாங்க!
  நல்லா இருக்கீங்களா?
  ரொம்ப நாளா காணுமேன்னு
  கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன்.

  கண்டிப்பா இந்தப்படத்தைப்பாருங்க!

  ReplyDelete
 11. ரொம்ப நல்லா இருக்கும்போல இருக்கே! பாத்துட வேண்டியதுதான்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !