சாருவுடன் ஒரு விமானப்பயணம்!
அந்த விமானப்பயணம் திடீரென்று நிகழ்ந்தது.
ஒரு அவசரவேலைக்காக சென்னை வரவேண்டியிருந்ததால்,
இருக்கும் 4 மணிநேர இடைவெளியில் பஸ்ஸிலோ, காரிலோ பயணிப்பது இயலாது என்பதாலும், அத்தனை அவதியாகச் சென்று அமைதியைக்குலைத்துக்கொள்ளாத ஆள் என்பதாலும், திடீரென்று திருச்சி விமான நிலையத்தில் நுழைந்தேன்.
சரியாக காலை 8.45க்கு ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்புவதாக அங்கிருக்கும் நண்பர் அரவிந்த் சொல்ல, உடனே டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அது பன்னாட்டு விமானம். சென்னை சென்று, பின் சிங்கப்பூர் செல்லும் என்றார்கள். ஆரம்பகட்டச் சடங்குகளெல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் வாங்கி அமர்ந்தபின் நம்முடன் பயணிக்கப்போகும் அன்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
முதல்முறையாக வெளிநாட்டுக்கு தாயைக்கூட்டிவரும் மகன்!
அந்தத்தாயின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி ! (திடீரென்று
ஈரானியப்பெண்மணி நம் அப்துல்லாவை ஹஜ்ஜுக்கு அம்மாவுடன் சென்றபோது வாழ்த்தியதை நினைத்துக்கொண்டேன்.)
புதுமணப்பெண்ணாக, பெற்றோரிடம் விடைபெற்று கணவனுடன் சிங்கையில் வாழப்போகும் ஒரு பெண்! (அவள் கண்களில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! சகோதரி உன் வாழ்வு இனிதாகட்டும்)
எந்த மூட்டைமுடிச்சுகளும் இல்லாமல் ஒரே ஒரு லேப்டாப்புடன் வெளிநாடு செல்லும் இளைஞன்! ( அவன் விமான நிலையத்தின் உள்ளே நுழையும்போதே லக்கேஜ் இல்லை. இப்படியும் எல்லா நாட்டிலும் துணிமணிகளை வைத்துக்கொண்டு வாழ ஒரு கொடுப்பினை வேண்டும்..!)
4 குழந்தைகளுடன், அதிக அளவு பெட்டிகளுடனும் மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்த ஒரு பெண்! ( பாவம்.. ஒருவரிடம் லக்கேஜே இல்லை...ஒரு பெண்ணிடம் இவ்வளவு லக்கேஜ்.. உலகம் சமநிலை பெறவேண்டும்...சீர்காழி கணீரென்று மைண்ட் வாய்சில் பாடிச்சென்றார்..! :) )
அனைவரையும் சந்தேகப்பார்வையுடன் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு பெண்மணி (அய்யோ...ஒரு இட்லியைக்கூட இவ்வளவு சந்தேகமாகச்சாப்பிட முடியுமா என்று தோன்றினாலும்..பாவம்.எங்கோ அந்த அளவு நம்பிக்கை இழந்திருக்கிறார் என்ற நியாயமும் வந்துபோனது)
வீட்டில் என்ன பிரச்னையோ...கண்கூடாக பீறிடும் அழுகையை அடக்கிக்கொண்டே ...சிரிக்க முயற்சித்து நுழைந்த ஒரு விமானப்பணிப்பெண். (இதை வைத்து ஒரு சிறுகதையே எழுதலாம்..அந்த அளவு அற்புதமான சிரிப்பு அழுகை கலந்த கலவை அது...சுஹாஸினி மேடம்..உண்மையாவே நந்தினி சிஸ்டரைப்பாத்துட்டேன்)
இவர்களெல்லாம் போக, அவசரத்தில் ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறும் வரிசைக்குப்பதிலாக எங்கள் வரிசையில் நின்றுவிட்டு கடைசி வினாடியில் திட்டுவாங்கிக்கொண்டே குடும்பத்தை கூட்டிச்சென்ற ஒரு ரங்கமணி ! (தலைவா! பில்கேட்ஸாவே இருந்தாலும் ...தங்கமணிகளுக்கு நம்ம தகர டப்பாதான்..இதுல இப்படி ஒரு தப்பை ..எல்லாரும் கையில சிகப்பு கலர் டிக்கெட் வச்சிருக்கும்போதே செய்யலாமா?)
அவர் அங்க என்ன செஞ்சு வச்சுருக்காருன்னே தெரியலையேம்மா! வீடெல்லாம் அலங்கோலமாக் கெடக்கும்...போனவுடனே போன் பண்ணலைன்னு கத்தாத..என்று முடிந்தவரை கத்திப்பேசிக்கொண்டிருந்த ஒரு தங்கமணி! (No male is perfect in front of his wife , especially in kitchen - நல்லா அனுபவிச்சு சொல்லியிருக்காய்ங்க! டிக்கெட் எடுத்துக்குடுத்து சூனியத்தை வைத்துக்கொள்ளும் அப்பாவி ரங்கமணி..நீ செத்தடீ இன்னும் 4 மணி நேரத்துல! )
மாப்புள ஒரு அவசரவேலை ..திடீர்ன்னு ஏர்ப்போர்ட் வந்து ப்ளைட் பிடிச்சுட்டேன். இந்தா கிளம்பிரும்..நம்ப ப்ரெண்ட்ஸ்க்கிட்டயெல்லாம் சொல்லிரு...கரெக்டா ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருடா..! (இதைவிட வெவரமா ப்ளைட்டுல வர்றதை பீத்திக்கவே முடியாது!...கிட்டத்தட்ட நம்பளும் அப்படித்தான்!)
விமானத்தில் ஏறினேன். நினைத்தபடியே எனக்கு ஜன்னலோர இருக்கை!
அருகில் வந்து அமர்ந்தது ஒரு அழகான ஆறுவயதுச் சிறுமி!
நன்றாகப்பேசிக்கொண்டுவந்தாள்! எங்க மாமா கல்யாணத்துக்கு வந்தோம். அப்பா முன்னாடியே ஊருக்குப்போயிட்டாங்க! நாங்க இப்பதான் போறோம். சிங்கப்பூருக்கு எத்தனை மணிக்குபோகும்?...மாமாக்கு புதுப்பொண்ணு ரொம்ப நல்லவங்க! தம்பி என்கிட்ட பாசமா இருப்பான்..அக்கா சொல்லுவான் என்று கலகலவென்று என் விமானப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமானதாகவும், கொண்டாட்டமானதாகவும் மாற்றிக்கொண்டிருந்தாள்!
அவளுடைய அம்மாவும், பேசாமல் எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்தபடியே, அவளது தம்பியை மடியில் வைத்துக்கொண்டே வந்தார் !
இவ்வளவு அழகாகப்பேசும் அந்தப்பெண்குழந்தையிடம் பெயர் கேட்டேன்.
தண்ணீர் குடித்துவிட்டுச்சொன்னாள்
சாரு...சாருலதா!

;-)
ReplyDeleteகைல மாட்டாமலா போய்டுவீங்க?
ReplyDeleteஏங்க இந்த கொலைவெறி? :)) ஹிட்ஸ் எகிர வாழ்த்துகள் :))
ReplyDeleteஅருமையான டுவிஸ்ட்
ReplyDelete:)))
ReplyDelete:-)
ReplyDeleteஹி ஹி:)
ReplyDeleteநற..நற..நற...
ReplyDeleteரொம்ப சீரியஸா படிச்சிட்டேன்:(
ReplyDeleteஎவ்ளோ பணம் செலவானாலும் பரவா இல்லை....நவம்பர் ஊருக்கு வரும்போது நேரா புதுக்கோட்டை தான்...அப்ப இருக்கு உங்களுக்கு:)))
ReplyDeleteநல்லவேள ஒரிஜினல் சாரு உங்க கூட வரல...
ReplyDeleteவந்திருந்தா அவ்ளோதான்.
உங்களையெல்லாம்.... #$%^&*(
ReplyDeleteஅன்பின் சுரேகா
ReplyDeleteநச்சென்ற முடிவு
நல்லாவே இருக்கு பிரயாணக் கட்டுரை
பார்த்ததை எல்லாம் எழுதிய விதம் நன்று
நல்வாழ்த்துகள்
முடியல..... வலிக்குது..... அழுதுருவேன்.....!!
ReplyDeleteஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!!
hehehe...
ReplyDeletewhy like that???
we expected some fight and flight stories between you and saru... anyhow nice one :)
வர்ணனைகளில் பயணப்பாத்திரங்களை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.
ReplyDeleteகிளைமாக்ஸ் எதிர்பாராதது.
இந்தப் பதிவின் லிங்கை (ஒரிஜினல்) சாருவுக்கு அனுப்புங்கள். ரசிப்பார்!
ReplyDeleteஇருடி ஆட்டோ வரும்ல...
ReplyDelete:)
ReplyDeleteவாங்க தமிழ்பிரியன்...!
ReplyDeleteஎன்ன ஒரு சிரிப்பு?
:)
சஞ்சய்...
ReplyDeleteவாங்க..!
கண்டிப்பா மாட்டுவேன்!
அதுவும் கூடிய விரைவிலேயே!
ஆகஸ்ட் 30ன்னு கூட வச்சுக்கலாம்!
:)
வாங்க நிலாரசிகன்!
ReplyDeleteஹிட்ஸா!? எகிறுமா?
நம்ம எது எழுதினாலும்..யாரும் படிக்கப்போறதில்லை!
அதான்..! :))
வாங்க முரளி அண்ணே!
ReplyDeleteநன்றிங்க!
நான்..ஆதவன்..!
ReplyDeleteசந்தனமுல்லை!
குசும்பன்!
வருகைக்கு நன்றிங்க!
:)
:))
:)))
என்ன ஒரு சிரிப்பு!?
வாங்க நிஜமா நல்லவரே!
ReplyDeleteபுதுக்கோட்டைக்கு..
அப்படியாவது வாங்க!
ஆனா வரும்போது...நானும் அங்க இருக்கேனான்னு கேட்டுக்குங்க!
:))
ஆமா..அப்படி என்ன எதிர்பார்த்தீங்க!
வாங்க கதிர்!
ReplyDeleteஆமாமா...நீங்கதான் அனுபவப்பட்டிருக்கீங்கள்ல?
:))
அன்ணே தெரியாமலா சொல்றோம் உங்கள....புதுக்கோட்டை பிளாக்கர்களின் தலைவர்னு. அஞ்சு நிமுசத்துல சாச்சுப்புட்டீங்களே :)))))
ReplyDeleteகாயத்ரி..வாங்க! எப்புடி இருக்கீங்க!?
ReplyDeleteஎன்னா திட்டு!?
$#$%@## :)
வாங்க லவ்டேல் மேடி!
ReplyDeleteபாத்து...
ஆமா..என்ன எதிர்பார்த்து வந்தீங்க?
:)
வாங்க சீனா சார்!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்!
வாங்க மஸ்தான்..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க!
வாங்க துபாய் ராஜா!
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றிங்க!
வாங்க லக்கி!
ReplyDeleteநீங்க வந்ததையே பெருமையா நினைக்கிறோம்!
ஏன் அவரைப்போய் தொந்தரவு பண்ணிக்கிட்டு!
நாம்பாட்டுக்கும் ஒரு மூலையில திரியிறேன்..!
:)))
வருகைக்கு நன்றிங்க!
வாங்க கிறுக்கன்!
ReplyDeleteஆட்டோவா..வரட்டுமே..மீட்டருக்கு எவ்வளவு வாங்குவாங்கன்னு கேட்டுக்கிட்டு , ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம் !
:))
வாங்க சின்ன அம்மிணி.. என்ன சிரிப்பு?
ReplyDeleteஏன்..
ஏன்..
ஏன்..?
:))
நல்ல எதிர்பார்ப்புகளுடன் சென்று சட்டென்று லேண்ட் ஆயிட்டு :)
ReplyDeleteInstall Add-Tamil button with ur blog. Then u can easily submit ur page to all top Tamil social bookmarking sites & u will get more traffic and visitors.
ReplyDeleteInstall widget from www.findindia.net
இதுக்கு பேரு தான்
ReplyDeleteதலைப்பரசியலா!?
அந்த பிள்ளைக்கு ஒரு 10 வயசு கூட இருந்திருக்கலாம் பதிவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
ReplyDeleteஇல்லை நெசம்மா 'சாரு'கூட பயணிச்சிருக்கலாம் டர்ர்ர்ர்ர் ஆகியிருப்பீங்க அப்பவும் பதிவு மிக சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
/
SanjaiGandhi said...
கைல மாட்டாமலா போய்டுவீங்க?
/
ரிப்பீட்டு
koiyyaala
ReplyDeletebut like ur idea
எந்தா சாரு ஏன் சாரு ஏன் ஏன்
ReplyDeleteஎன்னை போன்ற பயணியைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா என்று தேடியதில் தலைப்பை மறந்துவிடும் அளவுக்கு கட்டுரையின் நடை இருந்தது. அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க வாங்க அப்துல்லா!
ReplyDeleteஅய்யய்யோ !
தலைவரா? முடியலை!...
:))
வாங்க யாசவி!
ReplyDeleteநன்றிங்க!
வாங்க கானா!
ReplyDeleteஆமா சாரு! அது ஒரு பேரு!
:)
Romba arumaiyaana payanam anna... :)) Rasiththu padiththen... :))
ReplyDelete:)))
ReplyDeleteHappened to read this only now. Very interesting narration.
ReplyDelete