கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3



கல்விக்கடன் ஏன் ?...கல்வி என்ன ஆச்சுன்னு முதல்ல இங்கயும்...அடுத்து இங்கயும் இருக்கு..

இப்ப வங்கிகள் பக்கம் வருவோம்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு!

ஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை! எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்..!

அதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலையில் பொறுப்பு விழுந்துச்சு! அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை! அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க! ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க !

இதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக்காரு.. நீ என்ன கண்ணாடி போட்டிருக்க...உன் வீட்டில் ஏன் ஆறு பேர் இருக்கீங்கன்னு ஏதாவது சொத்தைக் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க ஆரம்பிச்சாங்க! அப்ப இது வங்கி மேலாளர்கள் தப்பும் இல்லை. அந்த வங்கி அந்த லட்சணத்தில், அரசாங்கத்தோட அறிவுறுத்தலின் பேரில் சும்மா உலுலுவாங்காட்டிக்கும் கடன் கொடுக்குறமாதிரி இங்கொண்ணும் , அங்கொண்ணுமா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கு! அதிகாரிகளும் அதைக் கண்டுக்கிறதில்லை. உண்மையிலேயே.. இதுவரை கொடுக்கப்பட்ட கல்விக்கடன் எதிலயும் எந்த வங்கிக்கும் விருப்பமே இல்லைங்கிறது, அந்தந்த உயரதிகாரிகளோட கருத்து!

அதுக்கும்மேல ஒண்ணு இருக்கு....நம்ம கடன் வாங்குற பெருமக்கள்...சரி.. நீ படிக்கணும்னு ஆசைப்படுற..! தனியாரில்தான் சீட் கிடைக்குது...! அவுங்களுக்கு பீஸ் கட்டணும்..! அதுவும் சரி! அதுக்காகத்தான் வங்கில ரொம்ம்ம்ம்ப போராடி கடன் வாங்குற! அந்தக்கடனைக்கொண்டாந்து காலேஜுலயும் கட்டியாச்சு! அதுக்கப்புறம்.........???? இனிமே என்ன கவலை...படிக்கவேண்டியதில்லைன்னு நினைச்சுக்கிட்டு...சரியா படிக்காம...50-60% மார்க் எடுத்துட்டு, ஏதாவது ஒரு சுமாரான வேலைல ஒட்டிக்கிட்டு வாங்கின கல்விக்கடனுக்கு வாய்தா சொல்லிக்கிட்டு...அப்புறம் என்னிக்காவது ஒருநாள்.. கல்விக்கடன் வாங்கி நொடிச்சுப்போயிட்டேன். அதைத்தள்ளுபடி பண்ணனும்னு ரோட்டுக்கு வந்து போராடுவான். ஆனா அதே சமயம் அந்தக் கல்விக்கடனை நல்லபடியா பயன்படுத்தி நல்ல வேலைல சேந்து அதைக்கட்டின பையன் இளிச்சவாயனாய்டுவான். மேலும் அவன் தம்பிக்கு கல்விக்கடன் கிடைக்காம போயிடும்.

ஆக... ஒரு தீர்வு தேடிப்போகும்போது எல்லாத்தரப்பும் இறங்கி வரணும். அரசாங்கம் ஒரு வரையறை வைக்கணும். 90 சதவீதத்துக்கு மேல் மார்க் வாங்கியிருக்கியா? ஏழையா? அப்ப எந்த காலேஜ்ல வேணும்னாலும் சேந்துக்க! நான் கல்விக்கட்டணத்தை பாத்துக்குறேன். நீபாட்டுக்கும் படிங்கணும்.

அடுத்து 70-90 எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கு வட்டியில்லாக்கடன் ! அடுத்த 10 வருஷத்தில் அதை அடைக்கணும்னு எந்த நிபந்தனையும் இல்லாம குடுக்கணும். ஒரே ஒரு நிபந்தனை..அதை கண்டிப்பா தள்ளுபடி பண்ணச்சொல்லி கேக்கமாட்டேன்னு சொல்லணும்.

அடுத்து 50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க ! நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..

ஆனா..என்ன ஒரு சோகம்னா...நோக்கத்தை விட்டுட்டு வேற ரூட்டைப்பிடிச்சுப்போய் எங்கயாவது முட்டிக்கிட்டு நிக்கிறதுதான் நம்ம நாட்டோட தலையெழுத்து...! கல்விக்கடன் தப்பிச்சுருமா என்ன?

Comments

  1. படிக்கவே கடன் கேட்கும் மக்களிடம் அடமானமாக வீட்டுபத்திரம் அல்லது சொத்து ஏதும் இருந்தால்தான் கடன் தருவோம்னு சொல்வது மகா கொடுமை.

    ReplyDelete
  2. ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.

    முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....

    என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.

    வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.

    கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது!

    அடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.

    கடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு! வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.

    இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.

    இப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா?

    இல்லை!

    கடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா?

    இல்லை!

    ஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா?

    வங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது!

    கல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

    பொதுத்துறை வங்கிகள் பாவம்!

    அப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே!

    எண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே!

    இங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது!

    ReplyDelete
  3. வாங்க புதுகைத்தென்றல்..

    இல்லங்க...இதில் அவுங்க தப்பு எதுவும் இல்லை! கடன் கொடுக்க இருக்கவேண்டிய அடிப்படை தகுதிகளை வங்கிகளை பாக்க...

    நாங்கதான் கடன் குடுத்து உன் பிள்ளையைப்படிக்கவச்சோம்னு சொல்லி ஓட்டு வாங்க நினைக்கிற ப.சி.க்கள் அழுத்தம் கொடுக்க...

    வங்கிகளுக்கும் பிரச்னை...
    மாணவனுக்கும் பிரச்னை..

    ReplyDelete
  4. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்...!

    உண்மையிலேயே நான் நினைச்சு..பதிவின் நீளம் கருதி..விட்டுப்போன விஷயங்களை சூப்பரா சொல்லியிருக்கீங்க...


    அப்படியே உங்க கருத்தையும் பதிவாவே போட்டு விடுகிறேன்.. !

    சில விளக்கங்களுடன்....

    ReplyDelete
  5. சப்பாணிDecember 30, 2009 at 8:29 PM

    //50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க ! நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..//

    நல்லா எழுதியிருக்கீங்க சார். எனக்கு என்ன சந்தேகம்னா, 12-வது வரை 50-60 மார்க் எடுக்கறவன் திடீரென எப்படி 90% எடுப்பான்...

    50-60-டன் படித்து முடித்து எந்த மாதிரி வேலைக்குப்போவான்... அவன் கடனுக்கு வட்டிவேறு போட்டுவிட்டீர்களானால் கட்டிய மாதிரிதான்... ;)

    ReplyDelete
  6. நிச்சயமாக தேவையான பதிவொன்றை எழுதியிருக்கிறீர்கள்.. சுரேகா..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  7. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கமெண்ட்டுக்கு ரிப்பீட்டு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!