சூப்பரா கீதுபா 2010!

சின்னச்சின்ன நிகழ்வுகளால் நிறைந்தது வாழ்நாள்!

2009 வெளியே போய்....அழகான 2010 ஐ அனுப்பி வைத்திருக்கிறது!

போகும்போது அது பல விஷயங்களைச் செய்துவிட்டுச்சென்றிருக்கிறது.
அதுவும் டிசம்பரில் ஆரம்பித்த ஆட்டம் இன்னும் முடியவில்லை.
நட்பு விறுவிறுவென்று தன் எல்லையை பிரம்மாண்டமாக விரிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த கிறிஸ்துமஸுக்கு இரண்டாம் நாள், திருப்பூரில் பரிசல் கிருஷ்ணாவைச்சந்திக்க.. கூடவே ஈரவெங்காயம் சுவாமி, பேரரசன் செந்தில், முரளிகுமார் பத்மநாபன்,.நிகழ்காலத்தில் சிவா என அன்புசால் நண்பர் கூட்டம்!.

அது மிகச்சிறந்த சந்திப்பாக அமைந்துவிட..அன்று நடந்த கூத்து யூ ட்யூபில்... சுரேகா என்றோ பரிசல் என்றோ தேடினாலே... வந்து நின்று லந்து செய்கிறது. நன்றி : பேரரசன் செந்தில்

அடுத்து சென்னை புத்தகக்காட்சி..
வாசலிலேயே எனக்காகக் காத்திருந்து, இதை வாங்கலாம்.. இது வேண்டாம் என்று உரிமையுடன் அன்பு காட்டிய அப்துல்லாவை விட சிறந்த நட்பை யாரால் கொடுக்கமுடியும்?

நண்பர் நர்சிம்முடன் செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் மிகவும் அன்பு பொருந்தியதாக இருந்தது. அதுவும் கார்னர் ஸ்டாலில் குடித்தோமே? அது பேரு என்ன பாஸு?

சிறிது நேரமே இருந்தாலும், சிரித்துக்கொண்டே கூட இருந்த அன்பு நண்பர் அ.மு.செய்யது! நீங்க பையை வச்சுக்கிட்டு வெள்ளந்தியாகப்பேசியது கண்ணுக்குள்ளயே நிக்குது நண்பா!

எது சொன்னாலும் சிரித்து ஏற்றுக்கொள்ளும் கேபிள் சங்கர் அண்ணன் நெருக்கமானவராக ஆகிவிட்டார். கொத்து பரோட்டா போட்டே பதிவுலகைக் கவுத்தவராச்சே!

சிரித்த முகமாக, பல எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட என்சைக்ளோபீடியா டாக்டர் புருனோ அவர்கள் பா.ரா வையே கவர்ந்தவர்! நானெல்லாம் எம்மாத்திரம்?

என்ன பாஸு ! நான் பஸ்ஸுல போய்க்கிட்டிருந்தேன்..! அப்படியே புல்லரிச்சிருச்சு! என்று அழகாகப் பேசியஅதிஷா எடுத்திருக்கும் வாழ்க்கை முடிவு கண்டிப்பாக உயர்வில் கொண்டு போய் விடும் என்று இங்கேயே
வாழ்த்துகிறேன். (ரிஸ்க் எடுங்க அதிஷா! அதுதான் டஸ்கே இல்லாத டான்!)

தோளில் பையைப் போட்டுக்கொண்டு பா.ரா அருகில் அமர்ந்து எல்லாவற்றையும்அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த லக்கிலுக்.. .யுவகிருஷ்ணா ! (புதிய தலைமுறைக்கு விரைவில் புதிய 'தலை'யாக வாழ்த்துக்கள் ஜி! )

இந்த மனுஷனா இவ்ளோ விஷயத்தை கிரகிச்சு, நமக்குப் புரியறமாதிரியும், சுவாரஸ்யமாவும் எழுதினார் என்று வியக்கவைக்கும் எளிமையுடன் பா.ராகவன். முன்னரே தெரிந்ததுபோல், மிக அன்பாக , நட்பாக, வாஞ்சையாக பேசும் அன்பு உள்ளம் ஒரு எழுத்தாளருக்கு வாய்த்தால் அவர் எவ்வளவு அழகாகத்தெரிவார்
என்பதை ஒருமுறை பா.ரா வைப்பார்த்துப் பேசினால் தெரிந்துகொள்ளலாம். நன்றி : கிழக்கு பதிப்பக பக்கத்து நடைபாதை!

திரையுலகத்தில்...பல்வேறு சந்திப்புகள்..பல்வேறு நட்புகள்! பிரபலங்களின் அன்பு முகங்கள், குணங்கள், உதவும் உள்ளங்கள் என....

சூப்பரா கீதுபா 2010!




Comments

  1. ப்ரெஷ்ஷாக புதுவருடத்தை எதிர்கொள்கிறீர்கள். இந்த மனோபாவமே உங்கள் கனவுகளை நனவாக்கும்.

    அன்புடன்
    லக்கி

    ReplyDelete
  2. என் ஜாய்! இந்த வருடம் உங்கள் கனவுகளை நினைவாக்கும் வருடமாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாங்க லக்கி!

    மிக்க நன்றி !

    ReplyDelete
  4. வாங்க அண்ணாமலை!

    ஆமா. சந்தோஷத்தை பகிர்ந்துக்குவோம்..!

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி குசும்பா!

    உங்களுக்கும் ஒரு துண்டு போட்டுவச்சிருக்கேன்..!

    ReplyDelete
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேகா..

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  7. வாழ்க.. வாழ்க

    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அன்பின் சுரேகா

    நினைத்தவை நல்ல படியாக நடக்க நல்வாழ்த்துகள்

    இடுகை ரசித்தேன்

    ReplyDelete
  9. வாவ்! நடக்கட்டும்... நடக்கட்டும் :-)

    ReplyDelete
  10. உங்களை மாதிரி அன்பானவங்களுக்கு எல்லா வருஷமும் சூப்பராத்தான் இருக்கும்ல!

    ReplyDelete
  11. வாங்க கேபிள் சங்கர் ஜி!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  12. வாங்க கார்க்கி!

    உங்களை மீட் பண்ண முடியலையேன்னு ரொம்ப பீல் பண்ணினேன். இப்ப என்ன ?

    கூடிய விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  13. வாங்க தெகா அண்ணா!

    நடக்குது...நடக்குது!

    நன்றி!

    ReplyDelete
  14. வாங்க சீனா சார்!
    உங்க ஆசீர்வாதத்தில்தான் ஓடிக்கிட்டிருக்கு!

    ReplyDelete
  15. அன்பு பரிசல்..!

    மிக்க நன்றிப்பா!
    அங்க குடுத்த அன்பை அப்படியே திருப்பிக்குடுத்தேன். அவ்வளவுதான்!

    ReplyDelete
  16. பத்து நிமிஷம் பேசுனத கூட மறக்காம எழுதிருக்கீங்களேண்ணே...!!! ரொம்ப சந்தோஷம்.

    கரெக்டு தான்...நிங்க சொன்ன "இந்தியாவுக்கு அடுத்த பஸ் எப்ப" இப்ப வரைக்கும் சிரிப்ப வர வழைக்குது...!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!