மீண்டும் நரி!
காலையிலிருந்து
கிடைக்காத
உணவுக்காக
காடெங்கும் தேடிவிட்டு
நிழலுக்கு நின்றிருந்த
மரத்துக்கு
காகமொன்று வந்தது.
வாயினில் வடை!
பாடச்சொல்லி நான் கேட்க,
வடை எனக்கு அருகில்விழ,
தயவு செய்து கொடுத்துவிடு!
கேட்ட காகத்திடம்
வந்து எடுத்துக்கொள் என்றேன்.
கீழே வந்த காகத்தை
வினாடி பிசகாமல்
அடித்து உண்டேன்.
எவன் தின்பான் வடையை?
அதுவும் காகத்தின் எச்சிலை!
டிஸ்கி:
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை,
கவிதையா அரைச்சுப்பாத்தேன்...ஹி..ஹி..
அரைச்ச பதம் நல்லாத் தான் இருக்கு:-))
ReplyDeleteவித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்குங்க..
ReplyDeleteஅரைச்ச பதம் நல்லாத் தான் இருக்கு//
ReplyDeleteஆமாம்.
நலமா??
அட! அண்ணா கலக்கிட்டீங்க. சூப்பர். :))
ReplyDeleteவாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
ReplyDeleteமிக்க நன்றி! :)
வாங்க அன்புடன் மணிகண்டன்
ReplyDeleteமுதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க!
வாங்க புதுகைத்தென்றல்...
ReplyDeleteமிக்க நன்றிங்க!
நல்ல நலம்! ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்கேன்... சூப்பரா!
வாங்க ஸ்ரீமதி!
ReplyDeleteஅட! - அப்டீன்னா..! :)))
வாழ்த்துக்கு நன்றி!
இந்த கவிதை (அ) கதையை படித்தவுடன் உங்களூடன் திரைக்கதை பேச வேண்டும் என்று தோன்றுகிறது..
ReplyDeleteகேபிள் சங்கர்
போங்க போய் கேபிளோட சேர்ந்து படம் பண்ற வேலையை ஆரம்பிங்க.. அடுத்த கட்டத்துக்கு போக நேரமாச்சு..
ReplyDeleteவாங்க கேபிள் ஜி!
ReplyDeleteநீங்கள்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவர்!
உங்களைத்தெரியும்னாலே பெருமை!
திரைக்கதை பேசினா...ஆஹா..
நன்றி தலைவா!
மிக்க நன்றி நண்பா!
ReplyDeleteகூடிய விரைவில் அந்த மகிழ்வான நிகழ்வு நடக்கட்டும்!
ஹை இது புதுசா இருக்கே!
ReplyDeleteலேபிள் : கவிதை , மொக்கைனு தப்பா இருக்கு சுரேகா
ReplyDeleteமொக்கை கவிதைன்னு இல்ல இருக்கணும்!
:))))))))))))